இன்று காலையில் அவன் இவன் பார்க்கப்போனேன்.
பாலா படம் என்றால் முதல் நாளே பார்த்து விடுவேன்.
வெள்ளிக்கிழமை பார்க்க முடியவில்யே என்ற ஏக்கம் சனிக்கிழமை ஜூரமாக வடிவெடுத்தது.
ஜன்னி வருவதற்க்குள் பார்த்து விட எண்ணி ஞாயிறு காலை பத்து மணிக்காட்சி பார்த்து விட்டேன்.
அரங்கு நிறைந்து வழிந்ததுசந்தோசமாக இருந்தது.
அந்த சந்தோசம் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வடிந்து விட்டது.
டைட்டிலிலேயே படத்தின் தலையெழுத்தை குறியீட்டாக காண்பித்தார்கள்.
ஒரு காங்கிரீட் சுவர் உதிர்ந்து நொறுங்கி குட்டிச்சுவரான பின் அவன் இவன் என்ற எழுத்து கிராபிக்சில் தோன்றியது.
முதல் காட்சியிலேயே ஆரம்பித்த சொதப்பல் படத்தின் இறுதி வரை நீடித்ததில் பாலாவின் கடின உழைப்பு தெரிந்தது.
விஜய்யின் குருவி,வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்களோடு போட்டி போட்டு ஜெயித்திருக்கிறார் பாலா.
பிதாமகனில் வரும் காட்சிகளை யாருமே காப்பியடிக்காத ஆதங்கத்தில் அக்காட்சிகளை மீண்டும் இப்படத்தில் நுழைத்து வெற்றி பெற்று இருக்கிறார் பாலா.
தனக்குத்தானே சூனியம் வைப்பதில் கலைஞரை மிஞ்சி விட்டார் பாலா.
விசாலை ஒண்ணரைக்கண்ணனாக்கி,ஆர்யா தலையில் காப்பர் கலர் பெயிண்ட் அடித்தால் படம் நூறு நாள்.... என்றுயாரய்யா உனக்கு சொன்னார்கள்?
நான் கடவுள் படத்தில் வரும் சிறு காரெக்டர்கள் இன்றும் மனதில் ஆட்சி புரிகையில் இப்படத்தில் வரும் அனைவரும் டெப்பாசிட் இழந்து விட்டார்கள்.
எனக்கு இந்தப்படத்தில் வந்த கோபம் ராம நாராயணன் படம் பார்க்கும் போது வராது.
காதல் ஒவியம்,நிழல்கள் தோல்வியடைந்த வேகத்தில்...ரசிகர்கள் மேல் உள்ள கோபத்தில் பாரதிராஜா வாலிபமே வா வா என்ற குப்பையை வீசீனார்.
அதற்க்கு நிகராக ஒரு படம் கொடுக்க ஆசைப்பட்டாயா பாலா?
இது என் கோபம் மட்டுமல்ல...ஒட்டு மொத்த தமிழர்களின் கோபம்.
இதை நீ உணர்ந்து நல்லபடம் கொடுப்பாய் என நம்புகிறேன்.
உனது குப்பை படம் ரீலிசாக மாணிக்கத்தை[ஆரண்யகாண்டம்] வெளியேற்றிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.
எந்த ஒரு படைப்பாளிக்கும் ஒரு கட்டத்தில் கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை வந்துவிடும்.
உங்களுக்கு வரவில்லை என்பதை அடுத்தப்படத்தில் நிரூபியுங்கள்.
.

சரியான ஆதங்கம்! நான் இன்னமும் படம் பார்க்கவில்லை.. இனி பார்க்கப்போவதுமில்லை
ReplyDelete@மதுரன்
ReplyDelete//சரியான ஆதங்கம்! நான் இன்னமும் படம் பார்க்கவில்லை.. இனி பார்க்கப்போவதுமில்லை//
நல்ல முடிவு.இந்தக்குப்பையை வெளியிட ஆரண்யகாண்டத்தை தியேட்டரை விட்டே தூக்கிவிட்டார்கள்...பாவிகள்.
யானைக்கே சறுக்குது . இதில் பாலா எம்மாத்திரம் ?
ReplyDelete@nivisugi
ReplyDelete//யானைக்கே சறுக்குது .
இதில் பாலா எம்மாத்திரம் ?//
பாலா நல்ல கலைஞன்.
புகழ் தந்த மயக்கம்...
மது தரும் போதையை விட கேடானது.
எனவேதான் வேப்பிலை அடித்திருக்கிறேன்.
தலைவரே . .நீங்க என்னெல்லாம் சொல்லிருக்கீங்க்களோ, அதே விஷயத்தைத்தான் நேத்து பாலுவும் என்னாண்ட சொன்னான். சென்ட்ரல்ல பார்த்தானாம். சுத்தமா அவனுக்கு இந்தப் படம் புடிக்கல. அப்புடியே பிதாமகன்ல வர்ற சீன்கள் நிறைய இருக்குனு சொன்னான். என்னோட வருத்தம் என்னன்னா, நீங்க சொன்ன மாதிரி, ஆரண்ய காண்டம் படத்த தூக்கிப்புட்டானுவளே :-( . .
ReplyDeleteசீக்கிரமே இந்தப் படத்த பார்த்துபுட்டு, எழுதறேன்.
good review
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDelete//தலைவரே . .நீங்க என்னெல்லாம் சொல்லிருக்கீங்க்களோ, அதே விஷயத்தைத்தான் நேத்து பாலுவும் என்னாண்ட சொன்னான். சென்ட்ரல்ல பார்த்தானாம். சுத்தமா அவனுக்கு இந்தப் படம் புடிக்கல. அப்புடியே பிதாமகன்ல வர்ற சீன்கள் நிறைய இருக்குனு சொன்னான். என்னோட வருத்தம் என்னன்னா, நீங்க சொன்ன மாதிரி, ஆரண்ய காண்டம் படத்த தூக்கிப்புட்டானுவளே :-( . .//
இந்தப்படம் ஒட்டு மொத்த பாலாவின் ரசிகர்களை ஏமாற்ற வந்த படம்.ஆசையா டிஸ்கவரி சேனல் பாக்குறோம்...தீடீர்னு அந்தச்சேனல் காமடி பண்றோம்னு மானாட மயிலாட ஓளிபரப்பினா கடுப்பாகுமா...ஆகாதா...
அதே கடுப்பில எழுதிய பதிவு இது.
@கருந்தேள்
ReplyDelete//சீக்கிரமே இந்தப் படத்த பார்த்துபுட்டு, எழுதறேன்.//
சீக்கிரம் பாத்துட்டு பாலாவுக்கு பேதி மாத்திரை கொடுங்க..
@ஜெகதீஷ் குமார்
ReplyDelete//good review//
நண்பரே!நன்றி.
ச்சே, பாலா இப்படி ஏமாத்தியிருக்க வேண்டாம். சீக்கிரம் படத்த எடுங்க எடுங்கனு சொல்லி அவசரப்படுத்தி, இப்படி ஆகிருச்சே :-( அடுத்த படம் புதுமுகங்களை வச்சாம்... ரெண்டு மூணு வருசம்னாலும் பொறுமையா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் வரிசைல ஒரு நல்ல படத்த பாலா கொடுக்கணும். புரோட்யூசர் ஒழிஞ்சாலும் பரவாயில்ல, போட்ட காச நிச்சயம் எடுத்துரலாம்!
ReplyDeletegud comment.
ReplyDelete//ச்சே, பாலா இப்படி ஏமாத்தியிருக்க வேண்டாம். சீக்கிரம் படத்த எடுங்க எடுங்கனு சொல்லி அவசரப்படுத்தி, இப்படி ஆகிருச்சே :-( //
ReplyDeleteபாலாவை யாருமே அவசரப்படுத்த முடியாது.மக்கள் பணத்தை ஏமாற்ற உடனடி அவசரம் காட்டியிருக்கிறார் கனிமொழி போல்...
@பேபி ஆனந்தன்
ReplyDelete//சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் வரிசைல ஒரு நல்ல படத்த பாலா கொடுக்கணும். //
இந்த தோல்வியை மருந்தாக ஏற்றால்..
நிச்சயம் அடுத்தப்படம் விருந்துதான்.
@மீனு-ஆஷா
ReplyDelete//gud comment.//
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
raittu!
ReplyDeleteசெம்ம காண்டா இருக்கீங்க போல!
ReplyDeleteஆரண்ய காண்டத்தை தூக்கினது பெரிய அநியாயம்... வெறும் மசாலா மாஸ் படங்களுக்காக இப்படி எத்தனை நல்ல படங்கள் அடிவாங்கியிருக்கோ?
பாலா ஒரு அருமையான கலைஞன் ஏன் இப்படி....எதிர்பாக்கல!
தங்களால் மிகவும் மதிக்கப் படுகிற பாலாவிடம்,”உங்
ReplyDeleteகளுக்கு மலட்டுத் தன்மை வரவில்லை என்பதை அடுத்த படத்திலாவது நிரூபியுங்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்.
விமர்சகனுக்கு ‘நடுநிலை உணர்வு’ அடிப்படைத் தகுதி.அது தங்களுக்கு இருக்கிறது.
தங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துகள்.
நான் வலைப் பதிவுக்குப் புதியவன் என்பதால்.....
ReplyDelete‘கடவுளின் ஓரவஞ்சனை’என்னும் என் பதிவுக்குத் தாங்கள் அனுப்பிய ‘கருத்துரை’யை என் வ.பதிவில்
முறையாக வெளியிடவில்லை.
தவறு நேர்ந்துவிட்டது.
மன்னியுங்கள்.
@விக்கிஉலகம்
ReplyDeleteraittu!
வருகைக்கு நன்றி நண்பரே...
இவ்வளவு பெரிசா கமெண்ட் போட்டா என் சிற்றறிவுக்கு புரியாது.
சின்னதா கமெண்ட் போடுங்க...
[எத்தனை பேரை எப்படியெல்லாம் கலாய்க்கிறீங்க...அதான்...]
//தங்களால் மிகவும் மதிக்கப் படுகிற பாலாவிடம்,”உங்
ReplyDeleteகளுக்கு மலட்டுத் தன்மை வரவில்லை என்பதை அடுத்த படத்திலாவது நிரூபியுங்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்.
விமர்சகனுக்கு ‘நடுநிலை உணர்வு’ அடிப்படைத் தகுதி.அது தங்களுக்கு இருக்கிறது.
தங்கள் பணி தொடரட்டும்.
வாழ்த்துகள்.//
நன்றி நண்பரே...பாலாவின் எல்லா படங்களுமே என்னை மிகவும் கவர்ந்தவை.அந்த உரிமையில்தான் திட்டினேன்.வேப்பிலை மருந்து கசக்கத்தான் செய்யும்.ஆரோக்கியத்துக்கு நல்லது.
யோவ்........ .ஏம்யா இப்படி. பாலாவே நொந்து பொய் இருப்பார் .....நீங்க வேற கொல்லுறீங்களே .....பட் ....விமர்சனம் standard .....
ReplyDeleteவள, வளன்னு இழுக்காம 'நச்சு'ன்னு இருக்கு உங்க பதிவு. இந்த பதிவுக்கு நான் ஓட்டு போடணும்னு நினைக்கிறேன். அதனால தமிழ்மணம், இன்ட்லி, தமிழ் 10 போன்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete