இப்படத்தின் டிவிடி கவரை பார்த்து மசாலா திரில்லர் படம் என நினைத்து பார்க்க ஆரம்பித்தேன்.... பெரிய ஏமாற்றம்.... மகிழ்ச்சியூட்டிய ஏமாற்றம்.
முதல் காட்சியே சொல்லி விட்டது.
இது பக்கா 100% உலகசினிமா.
சிறு வயதில் எல்லோருக்குமே ஒரு ரகசிய தேடல் இருக்கும். “அங்கெல்லாம் போகக்கூடாது” என்று எங்கு தடுக்கப்படுகிறோமோ அங்குதான் போக வேண்டும் என்று ஒரு சாகசப்பயணம் நடத்தி விடுவோம். இப்படி ஒரு சாகசப்பயணத்தில் துவக்கியிருக்கிறார் இப்படத்தை.... இயக்குனர் Gabriele Salvatores.
10 வயசு மிஷேல் தனது பரிவாரங்களுடன் கோதுமை வயலினூடே பயணிக்கிறான். குட்டித்தங்கை கீழே விழுந்து விட அவளுக்கு உதவி செய்ய பின் தங்கி விடுகிறான். ஊருக்கு வெளியே கோபித்து கொண்டு தனியாக ஒரு பாழடைந்த கட்டடம். மழலை பட்டாளம் அனைத்தும் ஆஜர். கடைசியாக வந்தவருக்கு தண்டனை. மிஷேல் தங்கைக்கு உதவப்போய் பின் தங்கி விட்டதால் விலக்கு அளிக்கப்படுகிறது. அப்பாவி குண்டுப்பெண்ணுக்கு தண்டனை வழங்குகிறான் கூட்டத்தின் பாஸ்.
.தண்டனை என்ன தெரியுமா? ஜட்டியையும் கழட்டி காண்பிக்க வேண்டும். அழுது கொண்டே ஒவ்வொன்றாக கழட்ட “ஸ்டாப்...இவளுக்கு பதில் நான் தண்டனையை ஏற்க்கிறேன்” என மிஷேல்
கண்ணபரமாத்மாவாகிறான். இவனுக்கு படு ஆபத்தான தண்டனை.
மரண விளையாட்டை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது தங்கை தனது மூக்கு கண்ணாடியை காணவில்லை என்கிறாள்.திரும்ப தன்னந்தனியே அந்த பாழடைந்த மாளிகைக்கு வருகிறான். கண்ணாடி கிடந்த இடத்தில் தரையோடு தரையாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பள்ளத்தை காண்கிறான்.
மறைவை விலக்கி பார்க்கிறான். ஆழத்தில் ஒரு வெளிறிய ஒரு ஜோடிக்கால்கள் மட்டும் தெரிகிறது.
அலறி அடித்துக்கொண்டு பறந்து விடுகிறான்.லாங் ஷாட்டில் தெரியும் கால்கள் மிட் லாங், மிட் குளோசப், குளோசப் என அருகாமிக்கும்போது பயத்தில் நாமும் அதிர்வது நிச்சயம்.
அடுத்த நாளும் விடாமல் ஓடி வந்து பார்க்க.... வேம்பயர் போன்று தோற்றமளிக்கும் சிறுவனை பார்த்து மீண்டும் ஓட்டம். அடுத்த நாள் அவனுக்கு குடிக்க தண்ணீர்....அதற்க்கு அடுத்த நாள் சாப்பிட பிரட் எனக்கொடுத்து உதவுகிறான். இருட்டிலேயே அடைக்கப்பட்டும்...
காலில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதாலும் மனரீதியாகவும்,உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் அச்சிறுவன்.
வெளிச்சத்தை பார்க்கவே அவனது கண்கள் கூசுகின்றன.
கழித்தாலும் ரகசியமாக நண்பனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மறக்காமல் செய்து விடுவான்.
வீட்டில் அப்பாவின் நண்பர்கள் ரகசியமாக கூடியிருக்கின்றனர்.அப்போது டிவியில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் காட்டப்பட்டு அறிவிப்பு வருகிறது.மிஷேலும் மறைந்திருந்து பார்க்கிறான்.
சிறுவனின் தாய் கடத்தல்காரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள்.
கடத்தப்பட்ட சிறுவனின் பெயர் பிலிப்போ என்றும்.... கடத்திய கும்பலில் தனது பெற்றோருக்கும் பங்கிருப்பதை உணர்ந்து கொள்கிறான் மிஷேல்.
அவன் பிலிப்போவை கண்காணித்து வரும் கடத்தல்காரனிடம் ‘போட்டு’ கொடுத்துவிடுகிறான். மிஷேலும் பிலிப்போவும் மாட்டிக்கொள்கிறார்கள்.
மிஷேல் எச்சரிக்கப்படுகிறான். பிலிப்போவை இடம் மாற்றி விடுகிறார்கள். ஹெலிகாப்டர் ஒன்று கிராமத்தை வட்டமிட்டுச்செல்கிறது. அன்றிரவு ஊரே ஒன்று கூடி பேசுகிறது. பிலிப்போவை தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்படுகிறது.
கொலை செய்யும் பொறுப்பு மிஷேலின் தந்தைக்கு....
காப்பாற்றும் விருப்பு மிஷேலுக்கு....
பிலிப்போ என்னவானான்?????????
விடை படத்தில்.
மிஷேலுக்கு தெரிவதுதான் நமக்கும் தெரியும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏன் கடத்தப்படுகிறான்?
பணத்திற்க்காகவா?
அரசியல் கொள்கைக்காகவா?
எதுவுமே படத்தில் நேரடியாக சொல்லப்படுவதில்லை.
சொல்லாததுதான் இப்படத்தின் சிறப்பே!!!!
தமிழ்நாட்டில் தேர்தல் வரும் சமயம், கமென்ட் பெட்டியை நீங்கள் மூடிவிட்டது, பூடகமாக எதையோ சொல்வது போலவே இருந்தது :-) . . மறுபடியும் திறந்துவிட்டீர்கள் இப்போது. இந்தக் கதை நன்றாக இருக்கிறது. நோட் செய்து வைத்துக் கொள்கிறேன்.
ReplyDelete//தமிழ்நாட்டில் தேர்தல் வரும் சமயம், கமென்ட் பெட்டியை நீங்கள் மூடிவிட்டது, பூடகமாக எதையோ சொல்வது போலவே இருந்தது// அப்படியெல்லாம் இல்லை நண்பரே!கமண்ட் செட்டிங் சும்மா நோண்டியதின் விளைவு.பின்னூட்டமே வரவில்லையென மண்டை காஞ்சது எனக்குத்தான் தெரியும்.செட்டிங் சரி செய்ததும் நல்ல வேளை உங்கள் பின்னூட்டம் முதன் முதலாக வந்தது.சாபம் தீர்ந்தது.
ReplyDeleteதலைவரே மிக நல்ல படமாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்,விரைவில் பார்த்துவிடுகிறேன்.
ReplyDeleteமுடிந்தால் pu239 என்னும் ரஷ்ய திரைப்படம் பாருங்கள்.இன்றைய ஜப்பானிய அணு உலை வெடிப்பு சூழலில் ஒருவர் அவசியம் பார்க்க வேண்டிய படம்.முடிந்தால் ரேடியம் கேர்ல்ஸ் என்னும் டாகுமெண்டரியும் பாருங்கள்.
அருமை நண்பர் கீதப்பிரியன் அவர்களே!தாங்கள் குறிப்பிட்ட படங்களின் டிவிடி என்னிடம் இல்லை.கிடைத்ததும் பார்த்து விடுகிறேன்.நன்றி.
ReplyDeleteஉலக சினிமா டி வி டி க்கள் சென்னையில் எங்கு கிடைக்கும்? குறைந்த விலையில் - மன்னிக்கவும் என் பண வசதி அப்படி...
ReplyDeleteகடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு பார்த்த படம்..போஸ்டரை பார்த்து மயங்கி பதிவிறக்கம் செய்து ரசித்தேன்..
ReplyDeleteஅருமையான இத்தாலி நாட்டு படைப்பு..
தங்கள் விமர்சனத்தை பற்றி சொல்ல வேண்டுமா என்ன ? வழக்கம் போல சூப்பர்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
திரும்பவும் நிறைய எழுத வாருங்கள்..ஆவலாக இருக்கிறது..