டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பற்றி எரிகிறது.தூதரகம் வெடித்து சிதறுகிறது.விமானம் கடத்தப்படுகிறது.வங்கிகள் கொள்ளையடிக்கப்படுகிறது.அதிகார வர்க்கத்தை குறி வைத்து சுடுகின்றன துப்பாக்கிகள்.இவையனைத்தும் நடந்தது பல்வேறு இடங்களில்...நாடுகளில்.ஆனால் நடத்தியது ஒரு சொல்...R.A.F
R.A.F என்றால் என்ன?
இதைத்தான் படம் எடுத்து காட்டியிருக்கிறார் இயக்குனர் Uli Edel.
அதுவும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வேகத்தில்.
சும்மா படம் பறக்கிறது ஜெட் வேகத்தில்.
இத்தனை சூப்பர் பாஸ்ட் வேகத்தில் ஒரு உலகசினிமா நான் பார்த்ததேயில்லை.
R.A.F ஒரு மந்திரச்சொல் மாணவர்கள் மத்தியில்...
எழுபதுகளில் ஐரோப்பா முழுவதும் ஆட்டி படைத்த இயக்கம்.
R.A.F என்றாலே, அதிகாரவர்க்கம்.... ஆசனவாயில் ஆயிரம் டைனமைட் வெடித்தது போல் அலறுவார்கள்.ரஷ்யா மற்றும் சீனாவில் கம்யூனிசம் தோன்றி தழைத்த காலத்தில்....
அது ஐரோப்பாவில் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அதன் தீவிர பரிமாணம்தான் R.A.F. இதன் மிகப்பெரிய போராட்ட வரலாற்றின் கேப்ஸ்யூல் வடிவம்தான் இப்படம்.
ஈரான் மன்னர் ஷா ஜெர்மன் வருகையின் போது அவரது எதேச்சதிகார அடக்குமுறையை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி...கோஷங்கள் எழுப்பி இளைஞர் கூட்டம் அற வழியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். பொறுக்குமா அதிகார வர்க்கம்?ஷாவின் பாதுகாப்பு படையும் ஜெர்மானிய காவல் துறையும் சேர்ந்து வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தி அப்பாவி மக்களை துவம்சம் செய்கின்றன.வெடித்த துப்பாக்கி ஒரு உயிரையே குடித்து விடுகிறது.இந்த அக்கிரமத்தை..அராஜகத்தை எழுத்தில் பதிவு செய்கிறார் ஒரு பெண் எழுத்தாளர்.அவர்தான் உரிக்கா மெயினாப்.
இந்த வன்முறைக்காட்சிகளில், ஒளிப்பதிவும்...எடிட்டிங்கும்...பின்னணி இசையும் போட்டி போட்டு நம்மை பதற வைக்கிறது.
வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியம்...சேகுவேரா என்கவுண்டர்... கென்னடி படுகொலை என பல சரித்திர நிகழ்வுகளை இப்படத்தில் மிகச்சரியான இடத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார் இயக்குனர்.
ஷா வருகை வன்முறைப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, நடத்தும் ஆப்பரேசன்கள் அனைத்திலும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. முதல் நிலைப்போராளிகள் கைதாகி சிறையில் சீரழியும்போது இரண்டாம் நிலைப்போராளிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள்.இருந்தாலும் தத்துவரீதியான....ஆனால் போர்க்குணம் வாய்ந்த இந்த ஆயுதப்போராட்டம் அடக்கப்படுகிறது.
இப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் பார்க்க வைத்தால் போதும்.நம்ம ஊரு ஊழல்...அராஜக அரசியல்வாதிகளை அவர்களே களையெடுத்து விடுவார்கள்.
இந்த படம் வைத்திருக்கிறேன் தலைவரே
ReplyDeleteநல்ல விமர்சனம்,உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறீர்கள்
நன்றி நண்பரே! சிவப்பு சிந்தனை படமென்றால் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது உண்மைதான்.சேகுவேரா,மாவோ,ஹோசிமின் வாழ்க்கை வரலாறுகளை படித்ததின் சைடு எபக்ட்.
ReplyDelete"வியட்நாமில் அமெரிக்காவின் அட்டூழியம்...சேகுவேரா என்கவுண்டர்... கென்னடி படுகொலை என பல சரித்திர நிகழ்வுகளை இப்படத்தில் மிகச்சரியான இடத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார் இயக்குனர்."
ReplyDeleteஇதற்காகவே படம் பார்க்கவேண்டும் போல் உள்ளது சென்னையில் DVDV கிடைக்கும் இடம் தெரிவித்தால் மகிழ்ச்சி.
நண்பரே!இப்படத்தின் டிவிடி தங்கள் முகவரிக்கு நானே குரியரில் அனுப்புகிறேன்.என்னுடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.[9003917667]
ReplyDelete