Apr 26, 2011

கோ படத்தை பாருங்கள்

கோ படத்தை பாருங்கள் என்று எழுதியிருக்கிறாயே அது உலகசினிமாவா என்று கேட்டு அடிக்க வாராதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.
ஒரு சின்ன பிளாஷ் பேக்....

என் நண்பர் இயக்குனர் சுரேஷ்  “படம் பண்ணப்போறேன்.கதை டிஸ்கசனுக்கு வரணும்”என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கூப்பிட்டார்.எப்போ வரணும்....எப்போ வரணும் என்று கேட்டு வேறு வழியில்லாமல் நாளைக்கு வாங்க என்று அனுமதியளித்தார்.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் இரவு பத்துக்கு கோவையிலிருந்து புறப்பட்டேன்.சொகுசு பேருந்து என்று அதன் நெற்றியில் எழுதியிருந்தது.என்னுடைய புஷ்பேக் சீட் ஜார்ஜ் புஷ்ஷே வந்தாலும் அசையமாட்டேன் என்று சொல்லிவிட்டது.முன்னாடி இருந்த சீட் அநியாயத்துக்கு பின்னாடி சாஞ்சு வந்து என் மடியில் படுத்துக்கொண்டது.ஆனாலும் எனக்கு கோபமே வரவில்லை.ஏன்னா சீட்டில் இருந்தது தாப்சி ரேஞ்சில் இருந்தது.
பஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இரவு பத்துக்கு பஸ் புறப்பட்டது.
ஹாரனைத்தவிர எல்லாமே சத்தம் போட்டது.

 எப்படியோ தூங்கி முழிச்சி பாத்தா காலை பத்து மணி.வெளியே பார்த்தா சென்னையைக்காணோம்.முன் சீட் தாப்ஸியை கேட்டேன்.ஜஸ்ட் இப்பத்தான் வேலூர் பாஸ் ஆச்சு என்று அலுத்தாள்.ஒரு வழியா ஒரு மணிக்கு கோயம்பேடு வந்துச்சி.இறங்கும்போது டிரைவரிடம் கேட்டேன்
  “ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை ?”
“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”
 “வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.

“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான்  என மிக மெல்லிய கூட்டம்.

 “சார்..ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு...அதை பக்காவா டெவலப் பண்ணா போதும்”ஆரம்பித்தார் சுரேஷ்.
 “சூப்பர் ஹிட் படமா பண்ணிரலாம்.நாட்டை சொல்லுங்க”
 ‘ஸ்டேட் ஆப் ப்ளே’ன்னு ஒரு ஹாலிவுட் படத்தை இண்டியனைஸ் பண்ணி வச்சிருக்கேன்.

வெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.

நம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு..                       பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...
ரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....

ரமேஷ்:   சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..

சுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.
நக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...
நம்ம ஹீரோ தடுக்கிறாரு.

சதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..

சுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா!சூப்பர்..சூப்பர்.

சுரேஷ்:சார்..இந்த சீனுக்கு நல்ல படம் சொல்லுங்க.

நான்: பேங்க் ராபரிக்கு இன் சைட் மேன் பெஸ்ட் சாய்ஸ்.
ஹீரோ சேஸிங் சீனுக்கு மிசன் இம்பாசிபிள் பார்ட் டூ பொருத்தமா இருக்கும்.டாம் கூரூஸ் பைக்ல ஸ்டண்ட்டெல்லாம் பண்ணி  துப்பாக்கியால சூட் பண்ணுவாரு.நம்ம ஹீரோ  ஸ்டில் கேமரா ஷூட் பண்ணட்டும்.ஆனா நம்மூர்ல ஏது நக்ஸலைட்?

சுரேஷ்: ஆந்திராவில இருந்து வர்றாங்க..அப்படி வச்சுக்கலாம்.

நான்:தமிழ் பேசுற நக்சலைட் ஆந்திராவில் என்ன பண்றாங்க?லாஜிக் இடிக்குதே?

சதீஷ்: சார் ...நாம தமிழ்ப்படம் எடுக்குறோம்.உலகசினிமா இல்லை.நம்ம ரசிகருங்க லாஜிக் பாக்க மாட்டாங்க.

சுரேஷ்:அப்புறம் நாம நம்மூரு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி மேட்டரை சரியா மிக்ஸ் பண்ணிட்டா படம் ரெடி.

சதீஷ்: சார் படம் எனக்கு விசுவலா ஒடுது.நாம ஆந்திரா என்.டி.ஆர் மேட்டரையும் நுழைச்சிரலாம்.

நான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே!

சுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.

நான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.

சுரேஷ்:சார் படம் ரெடி...வாய்யா முருகேசு..உக்கார்..ரெடி பண்ண கதையைக்கேளு.

கதை முழுவதும் கேட்ட முருகேஷ்:லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் சொல்றேன்..நீங்க சொன்ன மேட்டர் அப்படியே இந்த வாரம் ரீலிசான கோ படத்துல இருக்கு. நாம டூ லேட்...கே.வி.ஆனந்த் முந்திட்டாரு.

சுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.
நண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ?

25 comments:

  1. ராம்சாமி4/26/2011 6:02 PM

    சூப்பர் சார்.நெத்தியடி.ஆனா இவனுங்க திருந்துற மாதிரி தெரியல.ட்ரைலர் பாத்தப்பவே இங்க்லீசு பட காப்பின்னு தெரிஞ்சிடிச்சு.

    ReplyDelete
  2. தலைவரே,
    ஹாஹாஹா,எனக்கு கேவி ஆனந்த் என்னும் போதே இதுவும் காப்பி தான்னு தெரியும்,ஆதவன் படத்திலும் இதே கதைதான்,மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸை கேவலமாக சிதைத்தும்,ப்ளாக் டயமண்ட்,சஹாரா,கம்பெனி பட சீன்களை அநியாயத்துக்கு உருவியும் இருந்தார். எனக்கு ஸ்டேட் ஆஃப் ப்ளே படம் பார்க்கும் போதே அதை நம்மாட்கள் சீக்கிரம் உருவுவுவார்கள் என்று தெரியும்,கோ இன்னும் பார்க்கவில்லை,முதலில் கண்டுபிடித்து சொன்னதற்காக பாராட்டை பிடியுங்கள்.மாநகர சொகுசு பேருந்துவில் தப்ஸி ரேன்சில் பொண்ணுங்க வருமா?யாராவது போய் ஏமாற போறாங்க?பார்த்து

    ReplyDelete
  3. ஒரு சின்ன செய்தி
    ரெட் காரிடார் என்பது பாரதத்தில் நக்சலைட் ஆக்கிரமைப்பு உள்ள மாநிலங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்.
    http://en.wikipedia.org/wiki/Red_corridor
    அதில் ஆந்திராவின் துயர நிலையைப் பார்க்க
    http://upload.wikimedia.org/wikipedia/commons/9/95/The_Red_Corridor_ver_1.PNG

    நக்சலைட் போராட்டத்தை மோகன்லாலின் ஷிக்கார் படத்தில் அருமையாக கையாண்டிருப்பார்கள்.அதில் சமுத்திரக்கனியும் லட்சுமி கோபாலசுவாமியும் நக்ஸலைட் தம்பதியாக வருவர்.

    ReplyDelete
  4. மிக அருமையான சிறுகதை....வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  5. இதற்கு நல்ல தலைப்பு வைக்க வேண்டுகிறேன்..."நோகாமல் நுங்கு தின்பது என்றால் என்ன...ஒரு பின்நவீனத்துவ பார்வை..." எப்புடி....

    ReplyDelete
  6. அப்படியே உள்ளதே..இத்தனை படமா அதான் கோ போர் இல்லாமல் இருந்தது.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி.நண்பர் ராமசாமி அவர்களே! உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவருகிறது.அப்போது கே.வி.ஆனந்த் நம் மண்ணில் விளைந்த ஒரிஜினல் கதைக்கு மாறிவிடுவார்.கே.வி.ஆனந்தின் 'தேமாவின் கொம்பத்து' ஒளிப்பதிவுக்கு இன்றும் நான் அடிமை.

    ReplyDelete
  8. வணக்கம் கீதப்பிரியன்.கே.வி.ஆனந்த் முதல் படம் கனாக்கண்டேன் சரியாகப்போகாததில் தடம் புரண்டுவிட்டார்.நீங்கள் குறிப்பிட்டதில் சிறு திருத்தம்... அவரது இரண்டாவது படம் அயன்...அப்புறம் என் பஸ் பயணம் நிஜம்.பிரேக் சரிவர வேலை செய்யவில்லை என்பதும் நிஜம்.டிரைவர் இரவில் டீ சாப்பிட நிறுத்தும்போது மற்றொரு டிரைவரிடம் புகாராக கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

    ReplyDelete
  9. நக்சலைட் பற்றிய தகவலுக்கு நன்றி.இவர்களைப்பற்றி ஊடகங்களின் பரப்புரைதான் மிகப்பெரிய வன்முறை.வாய்ப்பு கிடைத்ததும் ஷிக்கார் பார்த்து விடுகிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதப்பிரியன்.

    ReplyDelete
  10. வாம்மா குழந்தாய்....உன்னுடைய மழலைக்குறும்பை ரசித்தேன்...சிரித்தேன்...
    //"நோகாமல் நுங்கு தின்பது என்றால் என்ன...ஒரு பின்நவீனத்துவ பார்வை..."// இந்த தலைப்பை உபயோகிக்க இன்னொரு இயக்குனர் வாய்ப்பு தருவார்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. பெரிய தவறே நடந்துவிட்டது
    அயனைதான் ஆதவன் என்று விட்டேன்,மன்னிக்க,பாடாவதி படங்கள் இரண்டுமே,தெளிய தெளிய வைத்து திருவிழாவில் தொடர்ச்சியாக டெக் வைத்து 3 படங்கள் போடுவது போல வாந்தி அது,அதை புதிய முயற்சி,கன்னி முயற்சி என்று எல்லோரும் புகழந்தனர்,ஐயகோ,அந்த வில்லன் மகா எரிச்சல்,அதுவும் அந்த நண்பன் பாத்திரம்,அடக்கடவுளே!!! எப்படி காப்பி அடித்தார் என்று பார்ப்பதற்காக பொறுமையாக பார்த்தது,சூர்யா கேட்கவே வேண்டாம்,சரவனா ஸ்டோர் சட்டை விளம்பரத்துக்கு கூட வருவார்,இது போல பெரிய இண்டர்நேஷனல் பராஜக்ட் என்றால் விடுவாரா?சிதைத்துவிட்டார்.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம்.நான் குறிப்பிட்ட அத்தனை படங்களையும் பார்த்தவர்களுக்குத்தான் கோ படம் நெருடும்.இப்படத்தை தேர்தல் முடிந்த பிறகு வெளியிட்டதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது.மே 13க்கு அப்புறம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  13. சரவணாஸ்டோர் சர்வாதிகாரத்தின் மிகப்பெரிய அடையாளம் நண்பரே...அங்காடித்தெரு அவர்களது அராஜகத்தை ஒரு சதவீதத்தைதான் தொட்டுக்காட்ட முடிந்தது.ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் சுரண்டல்தான் சரவணாஸ்டோர் பிரமாண்டம்.
    சரவணாஸ்டோர் பற்றிய எனது கொதிப்பை எழுத தனிப்பதிவு வேண்டும்.வாய்ப்புக்கு நன்றி கீதப்பிரியன்.

    ReplyDelete
  14. தலைப்பை படித்துவிட்டு அலறியடித்து ஓடிவந்தேன்... பிரமாதமா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  15. என் இனிய இயந்திரா மேட்டரை விட்டுட்டீங்களே...

    ReplyDelete
  16. // ஆயிரக்கணக்கான உழைப்பாளிகளின் சுரண்டல்தான் சரவணாஸ்டோர் பிரமாண்டம்.
    சரவணாஸ்டோர் பற்றிய எனது கொதிப்பை எழுத தனிப்பதிவு வேண்டும். //

    அந்த இடுகையை எதிர்நோக்குகிறேன்... Advance வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நண்பர் பிரபாகரன் வருகைக்கு வணக்கம்.கோ பற்றிய உங்கள் பதிவில் எனது கருத்தை பின்னூட்டமாக தெரிவித்தேன்.நீங்கள் ஆந்திரா காரமாக பிச்சு உதறியிருந்தீர்கள்.நான் எனது கோபத்தை ஒளித்து வைத்து இனிப்பு பூசி வெளிப்படுத்தி உள்ளேன்.
    என் இனிய யந்திரா நான் படித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அதனால் நினைவில்லை.என் இனிய ஆசானின் கதை அல்லவா அது.இன்றே வாங்கி படித்து விடுகிறேன்.சரவணா ஸ்டோர் பற்றிய பதிவுக்கு மே 13வரை காத்திருக்கவும்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. கனாக்கண்டேன் கூட கேவி ஆனந்தின் சொந்த சரக்கு கிடையாது.அது சுபாவின் நாவல்.அதை சிறிதே மாற்றி அப்படியே எடுத்திருப்பார்கள். :)
    கே.வி.ஆனந்த் படம் எடுத்தால் அது கட் காப்பி என்பதை சொல்லவே வேண்டாம்.சரவணா ஸ்டோர்ஸ் பற்றி நீங்கள் சொல்வது மிக உண்மை.அங்கே நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முகத்திலும் ஏதோ ஒரு சோகமோ, களைப்போ கண்டிப்பாக இருக்கும்.

    ReplyDelete
  19. அந்த கண்ணிவெடி சீன் நோ மேன்ஸ் லேன்ட் படமா ?

    கவனிக்க வில்லையே ..............

    ReplyDelete
  20. நண்பரே இலுமி!வணக்கம்.கனாக்கண்டேன் சுபாவிடம் கே.வி.ஆனந்த் முறைப்படி அனுமதி பெற்று எடுத்திருப்பார்.அயன்,கோ ஆகிய படங்களில் இவர்கள் இணைந்தே பணிபுரிவதிலேயே விளங்குகிறது.படம் பண்ணினால் அங்காடித்தெரு மாதிரி பண்ணவேண்டும்.ஒரு நல்ல படத்தை பல தடவை பார்ப்பேன்.மறுமுறை பார்க்க அச்சப்பட்டு...தவிற்த்த படம் அங்காடித்தெரு.அந்தப்படம் முழுக்க சரவணாஸ்டோரின் அழுக்குகள்தான்.

    ReplyDelete
  21. வாங்க அஞ்சாசிங்கம்...நிச்சயமாக அது நோ மேன்ஸ் லேண்ட்தான்.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. ஹீ ஹீ . . உங்ககிட்ட பேசின அன்னிக்கே இந்தப் படத்தைப் பார்த்துபுட்டேன். ஆனா இன்னும் எழுதல. . சலிப்பு தான் காரணம். அப்புறம், போன பதிவுக்கு பின்னூட்டம் போட முடில. ஏதோ பிரச்னை . . இந்த மாதிரி புக்குகளை நிறைய அறிமுகப்படுத்துங்க . . இந்த விமரிசனத்தை, கே. வி ஆனந்துக்கு அனுப்பவும். .

    பி.கு - உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது :-)

    ReplyDelete
  23. நண்பரே...உங்கள் ஸ்டைலில் கோ பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    அடுத்த பதிவு ஆர்.டி.எக்ஸ் மாதிரி வெடிக்கும்.அற்ப்புதமான கவிதை நூல் அது.
    கே.வி.ஆனந்த் கோ தந்த வெற்றியில் மிதப்பில் இருப்பார்.அடுத்தப்படத்துக்கு ஹாலிவுட் பட டிவிடிகளாக பார்த்து தள்ளுவதாக கேள்வி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. Sir... i don knw who u are.. but have u wantched all these hollywood movies

    ReplyDelete
  25. before u comment pls do watch all the movies.. and stop posin as an intellect coz u r nt one

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.