வணக்கம் நண்பர்களே !
பதிவுலகை மறந்து, ‘முகநூலில்’ சிக்கிக்கிடந்தேன்.
மன்னிக்கவும்.
இனி வாரம் ஒரு படங்களையாவது அறிமுகப்படுத்தி எழுத எண்ணியுள்ளேன்.
முகநூலில் எழுதிஅறிமுகப்படுத்திய படத்தையே சற்று விரிவாக எழுதி ‘பிள்ளையார் சுழி’ போட்டுள்ளேன்.
பொறுத்தருள்க !.
Tales From The Golden Age [ Amintiri din epoca de aur ],
2009,
Romania,
138 minutes,
Directed by :
Hanno Höfer,
Razvan Marculescu,
Cristian Mungiu,
Constantin Popescu,
Ioana Uricaru.
ஐந்து குறும்படங்களை ஒன்றாக இணைத்து இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஐந்து திரைப்படங்களும் ஒரே கருத்தாக்கத்தை முன் வைக்கின்றன.
1967 - 1989 வரை ரொமேனியாவை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது.
இதில் பதினைந்து ஆண்டு காலத்தை ‘கோல்டன் ஏஜ்’ என வர்ணித்து இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள்.
அந்த ‘கோல்டன் ஏஜ்’ காலத்தை இக்குறும்படங்கள் சித்தரிக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இத்தொகுப்பில் இரண்டு குறும் படங்கள் மட்டுமே, எனக்கு காணக்கிடைத்தது.
எல்லா படங்களுமே ‘கோல்டன் ஏஜை’ காட்சிப்படுத்தி இருக்கிறது.

இப்படங்களை இயக்கிய படைப்பாளிகள், தங்கள் கலை நுட்பத்தால்...
‘கோல்டன் ஏஜ்’ ஆட்சியை விமர்சித்து விளாசி தள்ளியிருப்பதை உணர முடியும்.
ஆட்சியில் அவலங்களை, நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தி ‘களமாடியிருக்கிறார்கள்’.
ஆட்சியில் அவலங்களை, நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தி ‘களமாடியிருக்கிறார்கள்’.
‘கோல்டன் ஏஜ்’ ரொமானிய மக்களின் பொருளாதார நிலையை,
நம்ம ஊரு ‘ரெங்கசாமியும்’ அறிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக இக்குறும்படங்கள் சித்தரிக்கின்றன.
‘ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என கலைஞர் பக்கம் பக்கமாக எழுதி சித்தரித்ததை,
‘எளிமையான விஷூவலாக’ சித்தரிக்கின்றது இக்குறும்படங்கள்.
வீடு வீடாக சென்று, காலி பாட்டில்களை ஏமாற்றி வாங்கி சேகரிக்கிறார்கள் ஒரு இளம் காதல் ஜோடி.
அதை விற்று காசு பார்க்கிறார்கள்.
ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள வீடுகளில் எல்லாம் ஏமாற்றி பாட்டில்களை கவர திட்டம் போட்டு செயல் படுத்தும்போது, ‘சட்டம் போட்டு திருடும் கூட்டத்திடம்’ சிக்கி கொள்கின்றனர்.
கோழிகளை ஏற்றி செல்லும் லாரியை ஓட்டுகிறான் ஒருவன்.
போகும் போது, நடு வழியில்... அக்கோழிகள் போடும் முட்டையை விற்று காசு பார்க்கிறான்.
‘கையை நக்க மீண்டும் தேனெடுக்கும்போது’ சிக்குகிறான்.
தங்கள் பொருளாதாரத்தேவைக்காக, திருடும் அன்றாடங்காய்ச்சிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறது ரொமேனிய காவல்துறை.
சாமானியர்களை கஞ்சிக்கு அலைய வைத்த ‘பொற்காலத்தை’ கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு இருக்கிறார்கள் அற்புதமான ஐந்து இயக்குனர்கள்.
ஐந்து இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை ‘கிறிஸ்டியன் மிஞ்சு’.
இவரது படங்களை பட்டியல் இடுகிறேன்.
அனைத்தையும் பார்த்து விடுங்கள்.
- 2000 Corul pompierilor (short)
- 2000 Nicio întâmplare (short)
- 2000 Zapping (short)
- 2002 Occident
- 2005 Lost and Found - segment Turkey Girl
- 2007 4 Months, 3 Weeks and 2 Days
- 2009 Tales from the Golden Age
- 2012 Beyond the Hills
‘டேல்ஸ் ஃப்ரம் கோல்டன் ஏஜ்’ படம் பாருங்கள்.
1,75,000 கோடி ரூபாய் ஊழல் ராஜ்யசபா எம்பியும்...
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும்...
உங்கள் நினைவலைகளில் ஜோடியாக மின்னுவதை தடுக்க முடியாது.