ஓய்விலிருப்பவர்கள்...
எண்பது வயது தாண்டியவர்கள்...
‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது.
இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் ?
இப்படி ஒரு கேள்வி, ‘பாப் நெல்சனுக்குள்’ [ Bob Nelson ] எழும்பியதால்...
அற்புதமான திரைக்கதை உருவாகிறது.
உருவான திரைக்கதை,
‘அலெக்ஸாண்டர் பைன்’ [ Alexander Payne ] இயக்கத்தில்...
‘நெப்ராஸ்கா’ என்ற காவியமாக வெள்ளித்திரையில் வடிவமைக்கப்படுகிறது.
‘ப்ரூஸ் டேர்ன்’ [ Bruce Dern ] என்ற நடிகரின் ஆற்றலால்,
ஒரு முதியவரது வாழ்க்கை உயிரோட்டமாக பதிவாகிறது.
Nebraska | USA | 2013 | 110 min | Directed by : Alexander Payne
நூறு மைல் வேகத்தில்...
வாகனங்களின் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
சாலையின் ஓரம்...
தள்ளாத வயதில்...தளர் நடையில்...ஒரு முதியவர்.
‘ரோந்தடிக்கும்’ காவல்துறை அதிகாரி பார்வையில், முதியவர் படுகிறார். விசாரிக்கிறார்.
“ எங்கே போறீங்க? ”
“ ”
“ எங்கேயிருந்து வர்றீங்க ? ”
“ ”
காவல்துறை அதிகாரியின் கேள்வியாலும், உடல் மொழியாலும்... மனிதநேயம் வெளிப்படுகிறது.
முதியவர், காவல்துறை அதிகாரியின் கேள்விகளுக்கு,
கண்ணசைவாலும், உடல் மொழியாலும் ‘பதிலை’ சொல்கிறார்.
“ இந்தா...அங்க போய்ட்டு இருக்கேன் ”
“ இந்தா...அங்க இருந்து வர்றேன் ”
முதியவரின் உடல் மொழியிலேயே,
யாரையும் லட்சியம் செய்யாத...அலட்சியம் வெளிப்படுகிறது.
கட்.
முதல் காட்சி முடிவடைகிறது.
அற்புதமான பின்னணி இசையில், ‘டைட்டில்கள்’ தொடர்கிறது.
ஒரு இளைஞன் வருகிறான்.
காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதியவரை நோக்குகிறான்.
விசாரிக்கிறான்.
வீட்டுக்கு அழைக்கிறான்.
மறுக்கிறார்.
“ ஏன் ? ”
“ ஒரு மில்லியன் டாலர் எனக்கு பரிசு விழுந்திருக்கு.
அதை வாங்கப்போணும்”
சட்டைப்பையிலிருந்து பரிசு கூப்பனை எடுத்து நீட்டுகிறார்.
பையன் பார்க்கிறான்.
“இது ஏதோ, டுபாக்குர் கம்பெனியின் டுபாக்கூர் பரிசு”
தந்தை பிடிவாதமாக மறுக்கிறார்.
சமாதானம் செய்து அழைத்துச்செல்கிறான்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.
‘சற்றும் மனம் தளராத விக்கிரமன்’ வேதாளத்தை அழைத்துக்கொண்டு
பரிசை வாங்க புறப்படுகிறான்.
இந்தப்பயணமே அற்புதமான ‘ரோடு மூவி’யாகிறது.
இப்படம்,
‘பாலகன்’ முதல் ‘பழுத்தப்பழம்’வரை,
பாடம் பகிர்கிறது.
எளிமையாக எடுத்துரைக்கிறது.
பொறுமையாக போதிக்கிறது.
இக்கருப்பு - வெள்ளை காவியத்தை கட்டாயம் பாருங்கள்.
உற்றார்- உறவினரையும் பார்க்க வையுங்கள்.
அதுதான் முக்கியம்.
கருப்பு - வெள்ளை காவியங்கள் மேல் எனக்கிருக்கும் காதலை இக்காவியம் இன்னும் அகலப்படுத்தி இருக்கிறது.
இக்காவியம், கருப்பு- வெள்ளையில் படமாக்கப்பட்டதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போமா !
The film was shot in black and white because Payne said he wanted to produce an "iconic, archetypal look".
According to cinematographer Phedon Papamichael, the choice was to use "the poetic power of the black and white in combination with these landscapes and of course the landscapes are playing a huge role in this story".
The choice of black and white was made against distributor Paramount Vantage's wishes.
The film was shot with Arri Alexa digital cameras and Panavision C-Series anamorphic lenses.
ஆறு ஆஸ்கார் விருதுகளை அள்ள காத்திருக்கிறது இக்காவியம்.
அடைய வாழ்த்துவோம்.