Dec 4, 2013

தினமும் இறக்கிறாள்...பிறக்கிறாள்....அவள் அப்படித்தான்.

கோவா திரைப்பட திருவிழாவில், 'உலக சினிமா’ பிரிவில் திரையிடப்பட்ட படம்...

The Ravine of Goodbye | 2013 | Japan | Directed by : Tatsushi Ohmori


கல்லூரியில் படிக்கும் போது தனது நண்பர்களாலேயே கற்பழிக்கப்பட்ட பெண்...
அந்தத்துயரத்தை தூக்கி சுமந்து கொண்டே செல்கிறாள்.
செய்த பாவத்துக்கு பரிகாரமாக,
அந்தத்துயரத்தை துடைக்க...
அவள் போகுமிடமெல்லாம் துரத்தி துரத்தி போகிறான் ஒரு நண்பன்.
அவள்,‘புண்ணுக்கு புனுகு பூச வந்த புருஷனே போடா’ என்பாள் ஒரு கணம்.
‘வாழ்வளிக்க வந்த வசந்தமே வாடா’ என்பாள் மறுகணம்.
படத்தின் இறுதி வரைக்கும் இவர்கள் பயணம் இப்படியே தொடர்கிறது.



இறுதியில்,
ஓடிப்போகிறாள் அவள்...
‘அவள் அப்படித்தான்’.
தேடிப்போகிறான் அவன்.
‘அவனும் அப்படித்தான்’.

இப்படத்தின் திரைக்கதை, ‘வேறொரு புள்ளியில் துவங்கி’ நத்தையாக பயணித்து திணற வைக்கிறது.
இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமும்,
நம்மை வசியப்படுத்தி ‘வழி காட்டி’ கூட்டிச்செல்கிறது.
‘அசாதரணமான சட்டகங்களில்’ அசத்தி இருக்கிறார் இயக்குனர். 



திரைக்கதை எழுதி இயக்கிய 'Tatushi Ohmori' உலக சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்தைப்பிடிப்பார்.


இப்படம் ‘உண்மையான உலக சினிமா ரசிகர்களுக்கு’ உவகையளிக்கும்.
‘உள்ளொளியால்’ உளுத்துப்போய், உருக்குலைந்த உலக்கைகளுக்கு ‘உப்புக்கரிக்கும்’.

8 comments:

  1. உவகை தருகிறது உங்களின் பார்வை..!

    ReplyDelete
  2. அவள் அப்படித்தான் மஞ்சுபோல எப்பொழுதும் சோகத்தையே சுகமாக சுமக்கிறாளா இந்த பட நாயகி?

    ReplyDelete
  3. ஆம்...மஞ்சு போலவே சோகத்தை சுமக்கும் போது இறக்கிறாள்.
    துறக்கும் போது பிறக்கிறாள்.

    ReplyDelete
  4. கடைசியாக பார்த்த படம் someone special, அது ஒரு கொரியன் படம். அது ஏனோ தெரியல ஆங்கில படங்களில் ஒன்றி இருக்க முடிகிறது. ஆனால் இது போன்ற ஜப்பான் மற்றும் கொரியன் படங்களில் கதை நன்றாக இருந்தாலும் ஒன்றி இருக்க முடிவதில்லை, காரணம் அவர்களின் தோற்றமா என்று தெரியவில்லை, இது போன்ற படங்களில் யாரை பார்த்தாலும் ஒரே மாதிரியே இருக்கின்றனர். ஆனால் தங்களின் விமர்சனம் பார்த்த பின் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Same feeling...start to watch some Korean movies...

      Delete
  5. Korean படங்களில் Action கலந்த படங்கள் தான் எனக்கு பார்க்க பிடிக்கும்

    ReplyDelete
  6. வித்தியாசமான அறிமுகம்..ஆனால் இன்னும் விரிவான பார்வை தேவை... ‘அசாதரணமான சட்டகங்களில்’ அசத்தி இருக்கிறார் இயக்குனர். - இதற்கு ஏதாவது சான்று கொடுத்து இருக்கலாம்... அப்போதுதான் இந்த் படங்களை எப்படி ரசிக்க வேண்டும் என எல்லோருக்கும் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. அசாதரணமான சட்டகங்களை அனுபவிக்க முடியும்...விவரிக்க முடியாது. பிக்காசோ ஓவியங்களை எப்படி வார்த்தைகளில் கொண்டு வரமுடியும்?

      Delete

Note: Only a member of this blog may post a comment.