நண்பர்களே...
கோவா திரைப்பட திருவிழாவில் 33 படங்களை மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்களை மட்டுமே பார்க்க அனுமதிச்சீட்டு வழங்குகிறார்கள்.
துவக்க நாளான 20-11-1013 அன்று கோவா அரசின் சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
துவக்க நாள் படமாக ‘டான் ஜுவான்ஸ்’ திரையிடப்பட்டது.
உலக சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமான ஒருவரான ‘ஜிரி மன்ஸில்’ [Jiri Menzel ] இயக்கி இருந்தார்.
இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி ‘கோவா திரைப்பட திருவிழா’ பெருமை தேடிக்கொண்டது.
துவக்க விழாவை பார்க்க எனக்கு ஆர்வமேயில்லை.
ஆனால் துவக்க விழா படமான ‘டான் ஜூவான்ஸை’ எப்படியாவது பார்த்து விட வேண்டும் என திட்டமிட்டேன்.
துவக்க விழா நடைபெறும் அரங்கின் வாசலில் நின்று ‘பிக்பாக்கெட்’ போல நோட்டமிட்டேன்.
சரியாக குறி வைத்து வலை வீசீனேன்.
‘மராத்திய மீன்’ சிக்கியது.
அவர் துவக்க விழாவுக்கு வரும் நடிகர்களை பார்க்க மட்டுமே வந்தவர்.
அவரிடம் இருக்கும் துவக்க விழா திரைப்படம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடம் கொடுத்தார்.
எனக்கு அனுமதிச்சீட்டு வழங்கிய ‘மராத்திய கர்ணன்’,
ரஜினியை மிகவும் பாசத்துடன் விசாரித்தார்.
துவக்க விழாவில் கமல் கலந்து கொண்டது அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கக்கூடும்.
கமல் கோவா திரைப்பட திருவிழா துவக்க விழாவில் கலந்து கொள்வது ‘நிகழ்ச்சி நிரலில்’ இல்லை.
ஆனால் அடுத்து நாள் கோவா பத்திரிக்கைச்செய்திகளில் கமலே முதன்மையாக இருந்தார்.
ஜிரி மன்ஸிலை புகழ்ந்து தள்ளியே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார்.
துவக்க விழா திரைப்படத்தை துவக்கிப்பேச ‘சுகாசினி’ வந்திருந்தார்.
சுருக்கமாக நான்கு வரிகள்தான் பேசினார்.
அவ்வளவு சுருக்கமான... மொக்கைப்பேச்சை உலகில் யாராலும் வழங்கி இருக்க முடியாது.
விழா நாயகர் ‘இயக்குனர் ஜிரி மன்ஸிலின்’ ஜாலியான பேச்சு அனைவரையும் வசீகரித்தது..
ஆனால் அவரது படம் ‘டான் ஜூவான்’ வசீகரிக்கவில்லை.
சிங்கத்துக்கு வயதாகி விட்டது.
ஜிரி மன்ஸில் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் இதோ...
[உபயம்: விக்கிப்பீடீயா ]
துவக்க நாளுக்கு முந்தைய நாளான 19-11-2013 அன்று, ‘பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக்காட்சியில்’...
‘பன்றி’ என்ற மராத்திய திரைப்படம் பார்த்தேன்.
என்னா படம் அது!.
மிரட்டி விட்டார் அறிமுக இயக்குனர் நாகராஜ்.
FANDRY | Marathi | 2013 | Directed by : Nagaraj Manjule
இப்படத்தின் இயக்குனர் நாகராஜுக்கு இதுவே முதல் படம்.
இதற்கு முன்பு ஒரு குறும் படம் இயக்கி தேசிய விருதை பெற்று உள்ளார்.
கிராமத்தில் பன்றியை வளர்த்து மேய்க்கும் ஒரு தலித் குடும்பத்தின் வாழ்வியலை எந்த வித பாசாங்கும் இல்லாமல் அப்பட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
‘கால்ச்சட்டை காதலை’ சொல்வது போல் மிகப்பெரிய தலித் அரசியலை பேசி இருக்கிறார் இயக்குனர்.
நகைச்சுவையை படம் முழுக்க விரவி நய வஞ்சக ஜாதி அரசியலை ‘நச்சென’ சொல்லி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என சினிமாவின் அத்தனை துறைகளும் அற்புதமாக ஜொலிக்கிறது.
படத்தின் இறுதி காட்சியில் ‘உயர் ஜாதி வெறியனை’ பார்த்து...
‘தேவடியாப்பையா’ என தலித் சிறுவன் உக்கிரமாக உச்சரிக்கிறான்.
இதை விட பொருத்தமான வசனம் உலகிலேயே இருக்க முடியாது.
இந்தப்படம் மும்பை திரைப்பட விழாவில் ‘நடுவர்கள் சிறப்பு விருதை’ பெற்றுள்ளது.
ஜீ தொலைக்காட்சி குழுமம் இப்படத்தை நாடெங்கும் வரும் ஜனவரியில் திரையிட இருக்கிறது.
உலக சினிமா நேயர்கள் தவற விட்டு விடாதீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Year | English title | Original title | Notes |
---|---|---|---|
1960 | Prefabricated Houses | Domy z panelů | School film |
1963 | Our Mr. Foerster Died | Umřel nám pan Foerster | School film |
1965 | Concert '65 | Koncert 65 | Short documentary |
1965 | Crime at the Girls School | Zločin v dívčí škole | Segment "Crime at the Girls School" |
1966 | Pearls from the Deep | Perličky na dně | Segment "Smrt pana Baltazara" (The Death of Mr. Balthazar) |
1966 | Closely Watched Trains | Ostře sledované vlaky | |
1968 | Crime in a Music Hall | Zločin v šantánu | |
1968 | Capricious Summer | Rozmarné léto | |
1969 | Larks on a String | Skřivánci na niti | Banned and not released until 1990 |
1974 | Altered Landscapes | Proměny krajiny | Short documentary |
1974 | Who Looks for Gold? | Kdo hledá zlaté dno | |
1976 | Seclusion Near a Forest | Na samotě u lesa | |
1978 | Those Wonderful Movie Cranks | Báječní muži s klikou | |
1980 | Cutting It Short | Postřižiny | |
1981 | Tři v tom | TV theatre | |
1982 | Krasosmutnění | TV film | |
Dr. Johann Faust, Praha II., Karlovo nám. 40 | TV theatre | ||
1984 | The Snowdrop Festival | Slavnosti sněženek | |
1985 | My Sweet Little Village | Vesničko má středisková | |
1986 | Chocolate Cop | Die Schokoladenschnüffler | |
1989 | End of Old Times | Konec starých časů | |
1981 | Audience | TV film | |
1991 | Beggar's Opera | Žebrácká opera | |
1993 | Life and Extraordinary Adventures of Private Ivan Chonkin | Život a neobyčejná dobrodružství vojáka Ivana Čonkina | |
1998 | Jacobowski a plukovník | TV film | |
2002 | Ten Minutes Older | Segment "One Moment" | |
2006 | I Served the King of England | Obsluhoval jsem anglického krále | |
2013 | The Don Juans[7] | Donšajni[8] |
‘பன்றி’ என்ற மராத்திய திரைப்படம் பார்த்தேன்.
என்னா படம் அது!.
மிரட்டி விட்டார் அறிமுக இயக்குனர் நாகராஜ்.
FANDRY | Marathi | 2013 | Directed by : Nagaraj Manjule
இப்படத்தின் இயக்குனர் நாகராஜுக்கு இதுவே முதல் படம்.
இதற்கு முன்பு ஒரு குறும் படம் இயக்கி தேசிய விருதை பெற்று உள்ளார்.
கிராமத்தில் பன்றியை வளர்த்து மேய்க்கும் ஒரு தலித் குடும்பத்தின் வாழ்வியலை எந்த வித பாசாங்கும் இல்லாமல் அப்பட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
‘கால்ச்சட்டை காதலை’ சொல்வது போல் மிகப்பெரிய தலித் அரசியலை பேசி இருக்கிறார் இயக்குனர்.
நகைச்சுவையை படம் முழுக்க விரவி நய வஞ்சக ஜாதி அரசியலை ‘நச்சென’ சொல்லி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என சினிமாவின் அத்தனை துறைகளும் அற்புதமாக ஜொலிக்கிறது.
படத்தின் இறுதி காட்சியில் ‘உயர் ஜாதி வெறியனை’ பார்த்து...
‘தேவடியாப்பையா’ என தலித் சிறுவன் உக்கிரமாக உச்சரிக்கிறான்.
இதை விட பொருத்தமான வசனம் உலகிலேயே இருக்க முடியாது.
இந்தப்படம் மும்பை திரைப்பட விழாவில் ‘நடுவர்கள் சிறப்பு விருதை’ பெற்றுள்ளது.
ஜீ தொலைக்காட்சி குழுமம் இப்படத்தை நாடெங்கும் வரும் ஜனவரியில் திரையிட இருக்கிறது.
உலக சினிமா நேயர்கள் தவற விட்டு விடாதீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
சரியான பொருத்தமான வசனம்...
ReplyDeleteநீங்க எங்கேயோ போகோணும்...!!!
கோவா திரைப்பட திருவிழாவுக்கு ஆண்டு தோறும் போகும் பாக்கியம் கிடைத்தாலே போதும்....நண்பரே!
Deleteவணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி...நண்பரே!
Deleteநண்பர் கலாகுமரன் என் மீதுள்ள அன்பை அதிகமாக்கி...
என் பொறுப்பையும் அதிகமாக்கி உள்ளார்.
வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongratulations Sir
நன்றி.
Deleteநிறைய நேரம் எடுத்து , விரிவான பதிவாக. போடவும்
ReplyDeleteஎன்னால் இயன்ற வரை விரிவாக சொல்கிறேன்.
DeleteHow you try got tickets ?
ReplyDeleteIs it it available for common men's ?
இணையத்தின் மூலமாகவே நாம் அனுமதி பெற முடியும்.
Deleteஅனுமதி,தங்கும் விபரம் என விரிவாக...தனிப்பதிவை வெளியிடுகிறேன்.
கோவா திரைப்பட விழாவிற்கு சென்றுவந்தமை குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்தது சிறப்பு! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteமராத்திய இயக்குனர்கள் பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் அவர்கள் படைப்புகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன,சதிஷ் மன்வாரின் காப்ரிஸ்சா பாவூஸ், துஹ்யா தர்மா கோன்சா? நிஷிகாந்த் காமத்தின் மும்பை மெரி ஜான்,டோம்பிவிலி ஃபாஸ்ட்,உமேஷ் விநாயக் குல்கர்னியின் விஹிர்,நீங்கள் சொன்ன நாகராஜ் மஞ்சுலே என நிறைய குறிப்பிடலாம், இது போல சுயநலமில்லாத பொதுநலம் சார்ந்த படைப்புகள் தமிழில் எப்போது வரும்?என ஏக்கமாய் இருக்கிறது,67 கோடியில் 67 சமூக அவலம் சொல்லும் படங்கள் எடுக்க முடியுமா?முடியாதா?ஆனால் அதற்கான வெளி இங்கிருக்கிறதா?
ReplyDeleteநாம் இத்தகைய முயற்சியை எடுக்காமலே இருக்கிறோம் என்பதை கோவா திரைப்பட விழா எனக்கு உணர்த்தியது.
Deleteஇது பற்றி விரிவான பதிவை எழுதுகிறேன்.
67 கோடி தேவை இல்லை நண்பரே...67,000/- ரூபாய் போதும்!
அர்ப்பணிப்பு உள்ள படைப்பாளிகள் ஒன்று சேர்ந்தால் இது சாத்தியம் என்பதை ‘கோவோ திரைப்பட திருவிழா’ மூலம் உணர்ந்து கொண்டேன்.
நன்றி சார்..
ReplyDelete