நண்பர்களே...
கோவை அர்ச்சனா, தர்சனா தியேட்டர்காரர்கள்,
4K டிஜிடல் புரஜக்ஷன் என ‘உஜாலாவுக்கு மாறி விட்டார்கள்.
கிட்டத்தட்ட பிலிம் புரஜக்ஷன் குவாலிட்டிக்கு மிக நெருக்கமாக உள்ளது இந்த 4K டிஜிடல் தரம்.
பல தியேட்டர்களில் இன்னும் அரதப்பழசான 1K புரஜக்ஷனை வைத்தே ‘மாரடித்துக்கொண்டிருக்கிறார்கள் மாபாவிகள்’.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலின் தலைப்பான ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற தலைப்பை தேர்வு செய்த இயக்குனர் சுசீந்திரன்...
அதற்கேற்ற திரைக்கதையையும் செதுக்கி விட்டார்.
‘மனம் திருந்திய மைந்தனாக’ மீண்டும் தரமான சினிமாவுக்குள் பிரவேசித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
இனியும் ‘ராஜ பாட்டையில்’ போனால்,
‘கொட்டை தெறிக்க அடிப்பார்கள்’ என்ற உண்மையை உணர்ந்து...
கதை, திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர்கள்,
தொழில் நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்து பயணப்பட்டு இருக்கிறார் சுசீந்திரன்.
இந்த மீள் வரவு...நல்வரவு.
இன்றைய ‘டேட்டிங் காதலை’ யதார்த்தமாக அணுகி இருக்கிறது திரைக்கதை.
பிரேக்பாஸ்டில் பிரபோஸ்...
காலேஜ் இண்டர்வெல் பிரேக்கில் ‘பிரேக்அப்...
இந்த யதார்தத்தை உணர்ந்து...
இன்றைய இளைஞர்களுக்கு உடனடித்தேவையாக இக்கதையை திரைப்பதார்த்தமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
காண்டம் இல்லாமல் கண்டமாகிப்போன காதலர்களின் கதை என இக்கதையை அறிமுகப்படுத்தினால்...
இதுதான் இந்த நூற்றாண்டின் அபத்தம்.
இன்றைய ‘பாஸ்ட்புட் காதல் உலகில்’...
‘போஸ்ட்மாடர்ன் காதலர்கள்’ எப்படி இயங்குகிறார்கள்?
பெற்றோர்கள் , உற்றார்கள், உறவினர்கள், அதிகார வர்க்கம்
எப்படி எதிர்வினை புரிகிறது?
மிக நுணுக்கமாக...மிக நெருக்கமாக...மிக உண்மையாக இத்திரைக்கதை ‘வணிகப்பாதையிலேயே’ பயணித்து சொல்லி இருக்கிறது.
அதனால்தான் எல்லா ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா என்பது ஒலியும்...ஒளியும்...சேர்ந்த கலவை.
இந்த ‘பார்முலாவை’ மிகச்சரியாக கலந்து இப்படைப்பை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
‘பொண்ணு செத்து போயிட்டான்னு வாங்க’
இந்த வசனத்தை ஒரு பெண்,
தாய் + மனைவியின் குரலால்
ஏற்படுத்தும் வீர்யத்தை... விசுவலாக விளக்க முடியாது.
கிளைமாக்ஸ் காட்சியில், விசுவல் ஏற்படுத்திய தாக்கத்தை...
வசனங்கள் ஏற்படுத்தாது.
இப்படத்தின் கிளைமாக்ஸ்தான் ‘எவரெஸ்ட் ’.
‘கிளைமாக்ஸ் சிகரத்தில்’ ஏற...
ஏனைய காட்சிகள் அனைத்தும் பார்வையாளனை தயார்படுத்துகின்றன.
இருந்தும் ‘நான் ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு திணறி விட்டேன்’.
மெல்லிதயமும்...நல்லிதயமும் கொண்டோர் அனைவருக்கும் இந்த திணறல் இருக்கும்.
‘கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்.
என்னா பெர்பாமன்ஸ்!
இறுதி ஷாட்டில் குழந்தையின் அலறல் இன்னும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
அதன் எதிரொலிதான் இந்தப்பதிவு.
இயக்குனரோடு தோள் சேர்ந்து உழைத்த அத்துணை தொழில் நுட்பக்கலைஞர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
கடல், ஆதி பகவன், அன்னக்கொடி, மரியான், 555 போன்ற,
‘அரைவேக்காடு’ படங்களை எடுத்த இயக்குனர்களே...
உங்கள் தோல்வியில் பாடம் கற்கவில்லை என்றால்...
இப்படத்தின் வெற்றியில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
நல்ல சினிமாவை இணைய தளம் கொண்டாடும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி.
ஆதலால் ‘சினிமா’ செய்வீர்.
உ.சி.ர ஷாப்பிங் மாலில் 5000 ரூபாய்க்கு சம்சங் ப்ளூரே ப்ளேயர் வாங்க இங்கே செல்லவும்.
சம்சங் ப்ளூரே ப்ளேயர் பற்றிய மேலதிக தொழில் நுட்ப தகவல்களுக்கு இங்கே செல்லவும்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
நச் விமர்சனம் சூப்பர்.. ஆனா அது யாரு சார் "ஆதா"லால்??
ReplyDeleteபாராட்டுக்கும்...குட்டுக்கும் நன்றி.
Deleteஆதாலால்...ஆதலால் என திருத்தி விட்டேன்.
[நம்ம பய புள்ளக வெவரமா...
கண்ணுல விள்க்கெண்னெய் ஊத்தி பாக்குதுங்க!]
அவசியம் பார்த்துடணும்னு தோணிடுச்சு உ.சி.ர. ஸார்! என் நண்பர்கள் இருவர் நேத்து இந்தப் படம் பாத்துட்டு அவசியம் பாக்க வேண்டிய படம்னு சொன்னாங்க!
ReplyDeleteபாத்துட்டு ஒரு பதிவும் போடுங்க.
Deleteநல்ல படம் எடுத்தா இந்த பதிவனுங்க கொண்டாடுவானுங்கன்னு கோடம்பாக்கம் புரிந்து கொள்ளட்டும்.
saturday morning show reserved.
ReplyDeleteஇந்தப்படம் மக்களுக்காக எடுக்கப்பட்ட படம்.
Deleteஇந்தக்கருவை கலைப்படமாக எடுத்திருந்தால் நாம நாலு பேர் மட்டும் பாராட்டி பொட்டிக்குள் போயிருக்கும்.
நான் தமிழக முதல்வராக இருந்திருந்தால் 10 வகுப்புக்கு மேல் அத்தனை மாணவர்களுக்கும் காட்டச்சொல்லி...
‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.
//‘எனது அரசு ஆணையிட்டிருக்கும்’.// வாத்தியாரே... பலே கில்லாடியா இருக்கியே :)
Deleteஎல்லாம் உங்களை மாதிரி சிஷ்ய கோடிகளிடம் கற்ற வித்தைதான்... ‘சுவாமிநாதரே’.
Delete//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//
ReplyDeleteகதையின் சஸ்பென்சையே இப்படி சொன்னால் பார்க்காதவர்களுக்கு எப்பிடி சார் இன்டரஸ்ட் வரும்..
இந்த ஒரு வரி படம் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைக்கிறது என்பது அராஜகமான குற்றச்சாட்டு.
Deleteஅந்தக்காட்சியை எழுத்திலேயே கொண்டு வரமுடியாது.
பிறகு எப்படி சுவாரஸ்யத்தை குறைக்க முடியும்?
என்னைக்குறை சொல்ல நினைத்து சுசீந்திரனை காறி உமிழ்ந்து விட்டீர்கள்.
நல்லா சமாளிக்கிறிங்க.. குழந்தை என்ற சொல்தான் இப்படத்தின் கிளைமாக்சுக்கே முக்கியமாக இருக்கலாம்,, நான் இன்னும் படம் பார்க்கல்..பார்க்கும் போது கிளைமாக்சில் ஒரு குழந்தையை எதிர்ப்பாக்குமல்லவா என் மனசு..
Deleteபடத்தை பாருங்க...உங்க ஆவலை...எதிர்பார்ப்பை...எப்படி பொய்யாக்குகிறார் சுசீந்திரன் என்பதை உணர்வீர்கள்.
Delete‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படம் பார்த்தவர்தானே நீங்கள்.
‘தங்கச்சிக்காக ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான் அண்ணன்’ என்ற வரி... அந்த படத்தின் கிளைமாக்சை அனுபவிக்க தடை செய்யுமா?
//கிளைமாக்ஸ் குழந்தைதான்’ படத்தின் கதாநாயகன்//
நீங்கள் படம் பார்க்கவில்லை என்ற கூற்றை நம்பி சொல்கிறேன்.
நான் எழுதிய வரியை வைத்து கிளைமாக்சை விவரியுங்கள் பார்ப்போம்.
உங்கள் கற்பனை திறனை பதிவுலகம் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
காதலர்களின் கல்யாணத்துக்கு முன்பான பாதுகாப்பற்ற உறவின் மூலம் அவள் பெறும் குழந்தை பின்னாளில் அனாதையாக்கப்படலாம் இப்படித்தான் என்னால் ஊகிக்க முடிகிறது..
Deleteஇன்று இரவுக்கு ரிசர்வ் செய்து இருக்கிறேன்...
Deleteவிமர்சனம் படித்ததும் இன்னும் டெம்போ எகிறுகிறது..!!
உங்கள் ஊகம் சரி...தவறு எனச்சொல்ல மாட்டேன்.
Deleteஉங்கள் ஊகத்தை விட ...
படத்தின் கிளைமாக்ஸ் தரும் அனுபவம் மேலோங்கி இருந்தால்தான் ஒரு படைப்பாளி வெற்றி பெற முடியும்.
சுசீந்திரன் வெற்றி பெற்று இருக்கிறார்.
படம் பார்த்து விட்டு வாருங்கள்.விவாதிப்போம்.
நன்றி,,
Delete@ மலரின் நினைவுகள்
ReplyDeleteநண்பரே...படம் பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கடல் படத்தை மற்ற வீணாபோன படத்துடன் ஒப்பிட வேண்டாம் நண்பரே. இதுவரை மனிரத்ணம் நான் எடுப்பதுதான் படம் என்று சொன்னது இல்லை. அவர் எடுத்த மற்ற நல்ல படங்கலை நினைத்து பார்க்கவும், கடல் படத்தின் கதை ஜெயமோகனுடையது. அதில் அவருடைய பங்களிப்பை நன்றாகவே செய்துள்ளார். ஒரு நல்ல கிராமமும் கடலும் சார்ந்த படத்தை எந்தவிதமாண அரசியல் பிரச்சணையும் இல்லாமல் தர நினைத்து இருக்கலாம். அதில் நமக்கும் அவருக்குமான ரசனையில் புரிதலி்ல் சிரிது பிசகியருக்கலாம். அதற்க்கு அவர் மீதான நம் எதிர்பார்ப்பும் காரணம். அதர்க்காக எப்போதுமே மற்ற குப்பைகளடனே அதனை சேர்க்க வேண்டாம். மற்றபடி ஆதலால் காதல் செய்வீரின் கடைசிக் காட்சியில் உங்களுக்கு ஏற்பட்ட அணுபவமே எணக்கும். அந்தகுழந்தையின் அழுகையில் இருந்து மீளமுடியவில்லை.
ReplyDeleteகடல் படம் மணிரத்னம் + ஜெயமோகன் கூட்டுத்தவறு.
ReplyDeleteநான் மணிரத்னத்தின் மிகப்பெரிய அபிமானி.ராவணன்,கடல் என தொடர்ந்து தவறிழைத்து வருவதை காணச்சகியாமல்தான் விமர்சிக்கிறேன்.
மணி ‘ரத்னத்தை’ நிச்சயம் மீட்டெடுப்பார்.
காத்திருக்கிறேன்.
நீங்க ஆசைப்பட்ட மாதிரி 15 லட்சத்துல படம் எடுத்துரலாம் போலருக்கே.. இந்தப்படத்துக்கு என்ன செலவாயிருக்கும்னு நினைக்கறீங்க..? 15 லட்சத்துக்கு ஒரு உலகப்படம் சாத்தியமே..!! படம் பாத்துட்டு வந்து இன்னும் பாதிப்பு அடங்கல சார்..
ReplyDeleteஇதே கதையை தொழில்முறைக்கலைஞர்களை தவிற்து விட்டு...
ReplyDeleteபுதிய கலைஞர்களை வைத்து எடுத்தால் சாத்தியமே.
enaku 555 padam nalla irunthuchu na. Kadal, etc padangala vida athu paravayilla. Intha padathuku inaiku thaan poren.
ReplyDelete555 பிடித்ததா !
ReplyDeleteஇந்தப்படம் பார்த்து விட்டு கருத்து சொல்லவும்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Padam paarthuten na. Kandippaga paarka vendiya padam. Climax nokki padam arumaiya poi climax paathipa erpaduthu.
ReplyDeleteகிளைமாக்ஸ்தான் படத்தின் பலமே.
Deleteகிளைமாக்ஸ்தான் முந்தைய காட்சிகளின் பலவினத்தை மறைத்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது.
வழக்கம் போல நச்....பார்க்கனும்...
ReplyDeleteதலைவாவை சிங்கப்பூரில் பார்த்தீர்களே அது பற்றி பதிவிடக்கூடாதா!
Delete