May 7, 2013

இளையராஜா


‘கலைகளின் கூட்டுப்பரிமாணத்தின் குழந்தை’ என்று திரைப்படக்கலை வர்ணிக்கப்படுகிறது.

ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக, மாணவனாக தீவிர வாசிப்புக்கு உட்படுத்தும்போது,
மற்ற கலைகளின் தன்மைகளை கடந்து உன்னதமான வெளிப்பாடாக இருப்பது,
திரைப்படத்தின் உயிராக உள் இழையும் இசையே. 

இசையற்ற திரைப்படத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலாது.
ஏனெனில் மவுனப்படங்களின் காலத்திலேயே பின்னணி இசைதான் நடிகனின் முகபாவத்தை கடந்த உணர்வினை நமக்குச் சொன்னது.
சாப்ளின் படங்களில் இழையும் வயலின் மூலம் நகைச்சுவையின் உள்ளார்ந்த சோகத்தை நம்மால் உணர முடிந்தது.

வசனமேயில்லாமல் வெறும் முகங்களின் அண்மைக்காட்சிகளைக்கொண்டே
நிகழும் ஒரு நிமிடக்காட்சியை ஒரு இசை அமைப்பாளர் தனது மேதமை மூலம் அழகான உயிர்ப்புள்ள காட்சியாக மாற்றி விடமுடியும்.
தட்டையான இரண்டு பரிமாணம் கொண்ட திரைப்பிம்பத்துக்கு,
உணர்வு ரீதியான முப்பரிமாணம் தருவது இசையே.
எனவே இசையை  ‘மூன்றாவது பரிமாணம்’ என்று சொல்லலாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இசையை உருவாக்குகிற ஒரு இசைக்கலைஞன் திரைப்படம் விமர்சிக்கப்படும்போது எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறான்.
 ‘பாடல்கள் இனிமை, பின்னணி இசை பரவாயில்லை’ என்பதோடு ஒரு இசைக்கலைஞனின் அங்கீகாரம் முடிந்து விடுகிறது.
இது மூன்றாம்தரமான, படத்தின் இரண்டரை மணி நேரமும் தனது சப்தங்களால் கிளுகிளுப்பூட்டுகிற ஒரு இசையமைப்பாளருக்கு பொருந்தலாம்.
தனது ஆழ்ந்த இசைப்புலமை மூலம் திரைப்பட மொழியை உள் வாங்கிக்கொண்டு திரையில் பொம்மைகளாக அசைகிற பிம்பங்களை
உயிர்ப்புள்ள மனிதர்களாக மாற்றும் இசைக்கலைஞனுக்கு இது எப்படி பொருந்தும் ?
போதுமானதாகும் ?

அவ்வாறான தகுதியுடைய தற்கால தமிழ் சினிமாவின் இசைக்கலைஞர் என
இளையராஜாவைச்சொல்லலாம்.


நண்பர்களே...
நீங்கள் படித்த கட்டுரை ஒளிப்பதிவாளர் செழியன் கைவண்ணத்தில் உருவானது.
இளையராஜாவின் இசையில், அவரது அறியப்படாத முகத்தை ஆய்வு செய்து
செழியன் எழுதியதை மினி தொடராக தருகிறேன்.

நூல்: பேசும்படம் [கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்]
எழுதியவர் : செழியன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.   

13 comments:

  1. அவர் ஒரு லெஜெண்ட் ..என்று சும்மாவா சொன்னார்கள்...காத்திருக்கிறோம்...தொடருக்காக.

    ReplyDelete
    Replies
    1. தொடரை தொடரும் நண்பருக்கு நன்றி.

      நீங்கள் இளையராஜாவோடு பயணிப்பவர் ஆயிற்றே!

      Delete
  2. நாங்களும் தொடர்கிறோம்.. ஒரு அற்புதமான இசைக் கலைஞனை பற்றிய ஆய்வை

    ReplyDelete
    Replies
    1. செழியனின் அழுகுத்தமிழில்,
      இளையராஜாவின் அருமை பெருமைகளை
      பதிவுலகில் பறைசாற்றுவதை கடமையென கருதுகிறேன்.

      Delete
  3. தமிழ் சினிமாவின் மீதான செழியனின் பார்வை ஒரு தேர்ந்த சினிமா விமர்சகனின் பார்வை.அவர் சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதற்கு 'பேசும் படம் ' ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

    ReplyDelete
    Replies
    1. தம்பி வினோத்திற்கு இரட்டை நன்றி.
      இப்புத்தகத்தை பரிசளித்து...பதிவிற்கு வித்திட்டவனே நீதானே!

      Delete
  4. உணர்ந்தவர்கள் உண்மையை அறிவார்கள்....

    ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் கட்டுரையை பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. காலத்தால் அழியா காவியங்கள் படைத்தவர் அவர்..!

    ReplyDelete
  6. This series should have been brought out long before. It is in fact a delayed tribute to the one and only musical genius. Ilayaraja is a rare genius and we are all guilty and responsible for the fact that his musical genius has not been given its proper due - such is his mastery. Thanks again and all the best.

    ReplyDelete
  7. தொடர் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. super nanbaa....waiting 4 u!!!!!!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.