Mar 14, 2013

பாலாவை பாராட்டுகிறேன்.


நண்பர்களே...
தமிழ் சினிமாவை உலக சினிமா தரத்துக்கு உயர்த்திப்பிடிக்கும் வல்லமைகளில் பாலாவும் ஒருவர்.
நான் கடவுள் தந்த அதிர்ச்சிக்கு இணையாக...
உலகில் எந்த உலக சினிமாவும் இது வரை தந்ததில்லை.

செம்பட்டையன், கறை படிந்த பல்லன், மாறு கண்ணன், நர மாமிச பட்சிணி என அவர் வீதியோர விளிம்புகளையே கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்துவதை வழமையாக கொண்டவர் பாலா.
கமல் - ரஜினி கையில் கிடைத்தால் கூட அவர்களையும் மாற்றிச்சித்தரிக்கும்
மந்திரக்காரன் பாலா.



படைப்பாளிகள் உள்ளும் புறமும் வேறாகத்தான் இருப்பார்கள்.
புறத்தோற்றத்தை புனுகு பூசி காட்டுபவர்கள் மத்தியில் பாலா மட்டும்தான் தனியாக நிற்கிறார்.
தன்னைப்பற்றிய பிம்பத்தை தானே உடைத்தெறிவதில் அந்த போராளிக்கு  நிகர் யாருமே கிடையாது.
‘ தனக்கு  ‘மனநிலை பிறழ்வு’ இருக்கு’
‘கஞ்சா பழக்கம் இருக்கு’
என அதிரடியாக தன்னை எழுத்தில் வெளிப்படுத்தியவர் பாலா.

 ‘பரதேசியின்’ அதிரடியான டீஸரை வெளியிட்டு புயலை கிளப்பி உள்ளார்.
அனைத்துமே புனைவு காட்சிகள்தான்.
நிழலை நிஜமாக்கி அனைவரையும் நம்ப வைத்து...
கொதிக்க வைத்து...
ஜெயித்து விட்டார்.

இயக்குனர் இங்மார் பெர்க்மன் ஸ்டைலில் டீசரை அமைத்துள்ளார் பாலா.
உதாரணமாக ஒரு பெண் தனது  ‘குறியை’ உடைந்த பாட்டில் கொண்டு சிதைப்பதை காட்சிப்படுத்தி நம்மை பதற வைப்பார்.
அடுத்தக்காட்சியிலேயே அந்தப்பெண் ‘டாக் டாக்’கென்று  நடப்பதை காட்டி முந்தைய காட்சியை மறுப்பார் பெர்க்மன்.
பார்வையாளராகிய நாம்தான்...
‘ஓ..அந்தக்காட்சி...அவளது கற்பனைக்காட்சி’
என்ற விளக்க உரையை நமக்கு நாமே  எழுதிக்கொள்ள வேண்டும்.
அல்லது....பெர்க்மனுக்கு படமெடுக்கத்தெரியவில்லை என பதிவெழுத வேண்டும்.
விஸ்வரூபத்துக்கு அப்படித்தானே சிலர் பதிவெழுதினார்கள்.

இப்படி ஒரு விளம்பரத்தை...
எந்த படைப்பாளியும் கனவில் கூட கற்பனை செய்ய மாட்டான்.
பாலாவுக்கு மட்டும்தான் இந்த கற்பனை ஊற்றெடுக்கும்.
திரையில் வடித்துக்காட்டும் ஆண்மையும் இருக்கும்.

மாபெரும் அதிர்ச்சிக்கு ஆடியன்சை தயார் செய்யும் உத்தியாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
திரையில் வெடிக்கும்  நிபுணனின்... கதகளியாட்டத்தை காணத்தயாராகி விட்டேன்.

வெள்ளையன் கசக்கி பிழிந்த ரத்ததில் ஒரு துளியை
ஆவணப்படுத்த முனைந்திருக்கும் பாலாவுக்கு...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பற்றியெறியும் பனிக்காட்டை வெள்ளித்திரையில் காணுங்கள்.

 ‘அவன் இவன்’ இயக்கியது எவன் ? என உரிமையோடு கோபித்த எனக்கு
பாசத்தோடு பாராட்ட கடைமையும் இருக்கிறது.
பரதேசியில் வாய்ப்பளித்திருப்பார் பாலா என ஆணித்தரமாக நம்புகிறேன்

சர்ச்சை கிளப்பிய காணொளி காண...


இந்திய இயக்குனர்  ‘அனுராக் காஷ்யப்’ பாலாவைப்பற்றியும்...
பரதேசி படத்தை பற்றியும் புகழ்ந்துரைப்பதை
தமிழ் சப்-டைட்டிலுடன் காணொளியில் காண்க...



அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

41 comments:

  1. எங்கும், எதிலும், யாருக்காகவும் வராத மனிதாபிமானம் இப்பொழுது இந்த டீசரைப் பார்த்தபின் பலருக்கும் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. பாலா ஒரு சைக்கோ, சேடிஸ்ட் என்பதில் ஆரம்பித்து எதையெதையோ பேசியும், எழுதியும் வருகிறார்கள்... படம் வெளிவந்து வெற்றி பெற்றவுடன் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      பாவம்...அவர்கள் பரிதாபமானவர்கள்.
      பாலாவின் பொறியறியாமல் சிக்கிய அணில்கள் அவர்கள்.

      Delete
    2. டீசர்-ல கடைசியா சிரிக்கிறாரு பாருங்க..எனக்கு எப்டி இருக்குன்னா நம்ம விமரிசனத்துக்கு பொறந்த பயபுள்ளைகள பாத்து, "ம்ம்..கிளப்புங்கள்..அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டும்" அப்டிங்கற மாதிரி:):) பயபுள்ளைக நெனச்ச மாதிரியே செய்யுதுக..

      Delete
    3. ///டீசர்-ல கடைசியா சிரிக்கிறாரு பாருங்க..///

      இதுதான் பாலாவின் அக்மார்க் குறும்பு.

      Delete
  2. இயக்குனர் பாலா மட்டுமே இப்படியான ஒரு TEASER வெளியிடுவார்.அவரால் மட்டுமே அது முடியும்.பாலா ஒரு தேர்ந்த படைப்பாளி

    ReplyDelete
    Replies
    1. ‘பாலா ஒரு படைப்பாளி’ என ‘வெள்ளையன்’ கண்டு கொள்ளும் தருணம் வந்து விட்டது.

      Delete
  3. Padam paarka migundha aavaludan irukinren. Inru iravu kaatchi kandippaga sella vendum. Andha "teaser" paarthu OK OK hero adhitha comment paartheergala ...

    ReplyDelete
    Replies
    1. ஓகே ஓகே ஹீரோ சந்தானம்தானே...
      அவர் கமெண்ட் பார்க்கவில்லை.

      Delete
  4. பாலா செய்தாரோ... யாரோ... நல்ல விளம்பர யுக்தி...

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் இது பாலாதான்.
      இப்படிப்பட்ட ஐடியா பாலாவின் மூளையில் மட்டுமே உதிக்கும்.

      Delete
  5. பாலாவின் எல்லா படங்களுமே ஒரு தைரியமான வித்தியாசம் தான் ...அவன் இவன் உள்பட... அதனால் பரதேசியையும் எதிர்பார்க்கிறேன்... முக நூலில் பல விமர்சனங்கள் பார்த்தேன் அதற்கான படக்காட்சியை இணைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மேடம் நீங்க...பாலாவின் அதி தீவிர ரசிகை என ஒத்துக்கொள்கிறேன்..

      Delete
  6. ஸார்.. அது புனையப்பட்ட காட்சிகளாய் தோன்றவில்லை.. பாலாவிடமிருந்து இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றாகப்பாருங்கள்...ஆனந்த்.
      பாலா அடிப்பது போல நடித்துக்காண்பிக்கிறார்.
      அவர் செய்வதை நடிகர்கள் செய்வதை தொடரும் காட்சிகளில் பார்க்கலாம்.
      இயக்குனர் இங்மார் பெர்க்மன் பாணியில் டிரைலரை அமைத்திருக்கிறார் பாலா.

      Delete
  7. தமிழ்சினிமாவின் வைரக்கல் பாலா ...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் நண்பரே.

      Delete
  8. When someone see this trailer for first time they will get angry, but if they think for a while, they will understand the reality and the need for it.

    Balachander-um Bharathiraja-um adikatha adiya.. thita. Behind the scenes could have been kept "behind".

    ReplyDelete
    Replies
    1. நடிகர்களை அடிச்ச காலமெல்லாம் மலையேறிப்போயாச்சு.

      இப்போதெல்லாம் கெஞ்சலும்...கொஞ்சலும்தான்.

      காதல் படத்தில் இறுதிக்காட்சியில் சந்தியாவுக்கு அழுகையே வரவில்லையாம்.
      வாழ்க்கையில் இது வரை அழுததேயில்லை என்று சொல்லி சிரித்துக்கொண்டே இருந்தாளாம் சந்தியா.
      வேறு வழியில்லாமல் பாலாஜி சக்திவேல் அழுது காட்டியிருக்கிறார்.
      அவர் அழுததை பார்த்து...அவர் மேல் பரிதாபப்பட்டு சந்தியா அழுதாளாம்.
      இத்தகவலை என்னிடம் சொல்லி சிரித்தார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

      Delete
  9. பாலசந்தர் துணை இயக்குனர்களையும் கூட அடிப்பார் பாரதிராஜாவும், என்று எப்பவுமே பேசப்பட்டு இருக்கிறது .அடித்து வேலை வாங்குவது வழமை போலும் ஆனாலும் இது ஒரு மலின விளம்பர யுக்தியாக தெரிகிறது .

    ReplyDelete
    Replies
    1. பாலா அடிக்கவேயில்லை.அடிப்பது போல் நடித்து உங்களை நம்ப வைத்திருக்கிறார்.

      இந்த கிரியேட்டிவிட்டியை ‘மலின விளம்பர உத்தி’ என கூறக்கூடாது.

      பெண்களை ஆபாசமாக சித்திரித்து விளம்பரம் செய்யவில்லையே பாலா.

      Delete
  10. He is not ill-treating the actors. He is just showing them how to act. But most of the people who criticize Bala never seemed to be realized that. We can expect the every scene of this teaser in the movie, acted by somebody else instead of Bala.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் எழிலருவி.
      நன்றி.

      Delete
    2. இங்கே எம்ஜியாரை திரையில் அடிக்கும் நம்பியாரை அந்தகாலத்து பாட்டிகள் திட்டிதீர்ப்பர்கள் என்று கேள்விப்பட்டு, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா சொல்றாங்களேன்னு நெனச்சிருக்கேன். இன்னும் நம்ம மக்கள் அப்படியேதான் இருக்கங்கபோல!

      Delete
    3. சினிமா fieldல உள்ள பலரே அத புரிஞ்சுக்கல என்றது தான் சோகம் ...

      Delete
  11. கல்லையும் நடிக்க வைக்கக் கூடிய திறமையான இயக்குனர்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...கல்லை சிலையாக்கும் சிற்பிதான் பாலா.

      Delete
  12. பாலா நடித்து காட்டினார் என்கிறீர்கள் சிலர். அது உண்மையானால் reality in the making, reality teaser என்று ஏன் போட வேண்டும்? இதை யார் போட்டது?

    ReplyDelete
    Replies
    1. நாம் பதிவு எழுதி விட்டு...கவர்ந்திழுக்க ‘கண்டமேனிக்கு’ தலைப்பிடும் உத்திதான் அது.

      Delete
    2. That was what happened in the shooting spot. What was happened real is called reality. What do you find wrong in that word?

      Delete
    3. @உலக சினிமா ரசிகன்
      அவ்வாறு நான் செய்ததில்லை...

      @எழிலருவி
      First try to get the meaning for "reality in the making".... here reality means really beating...
      i do understand it may be a dupe...but for that there is no need to put "reality in the making" understand?.... every movie is made this way...so you can call "paradesi in making"....so calling a dupe as "reality' is height of stupidity

      Delete
    4. @உலக சினிமா ரசிகன் அவர்கள் பொய்யாக தலைப்பிட்டுள்ளனர் என்ற உங்கள் வாதம் சற்று ஏற்ப்புடையதே

      Delete
  13. பாலாவிடம் எனக்கு ஒரு பெரிய வருத்தம். அவரை உயரமான இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்(றோம்). ஆனால் அவர் மணிரத்தினத்தின் அசிஸ்டென்ட்டாக இருக்க ஆசை என்று சமீபத்தில் சொல்லியிருந்தது வேதனையாக இருந்தது. அல்லது அதெல்லாம் ஒரு வேளை இப்போ வந்த teaser மாதிரி சும்மா ஒரு இதுவாக இருக்குமோ?

    ReplyDelete
    Replies

    1. \\\ மணிரத்தினத்தின் அசிஸ்டென்ட்டாக இருக்க ஆசை...\\\

      கலைஞர்கள் அனைவருமே உணர்ச்சி ஊற்றுக்கள்.
      உணர்ச்சிவசப்பட்டு பேசும் வார்த்தைகளில் அர்த்தம் தேடக்கூடாது.

      Delete
  14. http://verppulukkal.blogspot.in/2013/03/blog-post_4887.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை படித்து விட்டேன்.
      பாலாவை மிகச்சரியாக புரிந்து எழுதி உள்ளீர்கள்.
      நன்றி.

      Delete
  15. விகடனில் வெளிவந்த "இவன்தான் பாலா", அவரை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தியது. அதில் அவரது வார்த்தை பிரயோகம், உருவகங்கள் அபாரம்!!!

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசனுக்குப்பிறகு தன் சுயத்தை அப்பட்டமாக வெளீப்படுத்தியது
      பாலாதான்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  16. தமிழ்சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்துபவர்கள் என நான் மதிப்பது இருவரைத்தான் 1)பாலா 2) மணிரத்தினம்... எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சரி பாலா படத்தில் நடித்தால் அவன் மிகச்சிறந்த நடிகன் என நான் ஏற்றுக்கொள்வேன்(பலர் இப்படித்தான் என நம்புகின்றேன்)

    ReplyDelete
  17. பரதேசி படம் குறித்த தங்களின் முன்னோட்டத்திற்கு நன்றி ... நான் படம் பார்த்து விட்டேன்,மிகவும் சிறப்பாக இருந்தது ... இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை.. அடிகடி அத்ர்வாவும் மன்னிக்கவும் ''ராசாவும்'' இல்லை இல்லை ''ஓட்டு பொறிகியும்'' , அந்த தேஇலை தோட்டமும் இல்லை இல்லை ''பச்சை மலையும்'' நினைவுக்கு வந்து கொண்டு இருகின்றன ... இ ன்று நான் தங்களின் பக்கத்தை சொடுக்கும் முன்னரே படம் குறித்த விமர்சனத்தை எதிர்பார்த்து சொடுகிநேன்... அனால் சற்று ஏமாற்றும் இருந்தாலும் ''பரதேசி'' திரைப்படம் குறித்த தங்களின் முன்னோட்டம் தனிசிறப்பு ... திரைப்படத்திற்கு பெரும்பங்கு அளித்த நாஞ்சில் நாடனுக்கு பெரும் நன்றி... தங்களின் விமர்சனத்தை விரைவில் எதிர்பார்த்து......

    ReplyDelete
  18. thangalin paarka vendia ulaga cinemakalil.. paradesi idam pidika pogiridhu..... eppothay sollivittan,,, migavum magilchiyaga erukirathu.. padam partha thirupthi,,,

    ReplyDelete
  19. டீசர் நன்றாக இருக்கிறது. நடிகர்களை அடிப்பதில் தப்பில்லை. அவர்கள் கூலிக்குதான் வேலை பார்க்கிறார். முதலாளி அக்கூலிக்குத்தக்க வேலை வாங்குவதில் தப்பில்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.