Jan 31, 2013

எம்ஜியாருக்கு நடந்தது கமலுக்கும்...






நண்பர்களே...
கமலுக்கு ஏற்பட்ட கதியை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இன்றைய தலைமுறையினர் அறிந்திராத பழைய வரலாறை நினைவு கூர்ந்து சொல்கிறேன்.


எம்.ஜி.யார் உலகம் சுற்றும் வாலிபன் என்றொரு படத்தை வெளிநாடுகளில் படமாக்கி இயக்கி தயாரித்தார்.
அவர் திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு அதிமுகவை தொடங்கிய காலம்.
அப்போது மிருக பலத்துடன் இருந்த கருணாநிதியின் திமுக அரசு,
 உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட பல இடைஞ்சல்கள் கொடுத்தது.
படத்தின் நெகட்டிவை கொளுத்தவே சதி செய்யப்பட்டது.
எல்லா சதிகளையும் எம்ஜியார் முறியடித்து படத்தை வெளியிட்டார்.
படம் வெளி வரப்போகிறது என்ற போஸ்டரை தமிழ்நாடெங்கும் கிழித்து வீசப்பட்டது.
எம்ஜியார் சூளுரைத்தார்.
“ விளம்பரமேயில்லாமல் என் படத்தை வெற்றியடையச்செய்வேன்”
ஒரு விளம்பரம் கூட இல்லாமல் படம் 250 நாடகளுக்கு மேல் ஓடியது வரலாற்றுச்சாதனை.

அதைத்தொடர்ந்து வந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் அனைத்திலும் வெற்றி வாகை சூடினார்.
அவர் உயிரோடு இருக்கும் வரை திமுகவினருக்கு அஞ்ஞாத வாசம்தான்.

பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ராட்சஷ பலத்தோடு மத்தியில் ஆட்சி செய்த போது அவரது தேவைக்காக நாடெங்கும் அவசர நிலையைப்பிரகடனப்படுத்தி மிசா சட்டத்தை அமல் படுத்தினார்.
அப்போது ‘கிஸா குர்சிகா’ என்ற படத்தை  நெகட்டிவையே கொளுத்தி
அட்டூழியம் செய்தது காங்கிரஸ் மத்திய அரசு.
தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள்.
இந்திரா காந்தியையே தோற்கடித்து,
காங்கிரஸ்ஸையும் நாடெங்கும் குழி தோண்டி புதைத்தார்கள்.


விஸ்வரூபமும் தடை செய்யப்பட்டுள்ளது.
மற்றவற்றை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.



6 comments:

  1. அந்தக் கால எம்ஜியாரை இந்தக்கால கமலாக பார்க்கின்றீர்கள் , மிகவும் நன்றி .

    கமல் கலங்கவேண்டாம் , எதற்கும் காலம் பதில் சொல்லும் .

    ReplyDelete
  2. படம் பாக்க பெங்களூர் வாங்க ...ரிலிஸ் ஆயிடுச்சி

    ReplyDelete
  3. சரியான தருணத்தில், வரலாற்றிலிருந்து சரியான ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளீர்கள். நன்றி! கமல் வெல்வது உறுதி, இதுவும் வரலாறு ஆகும்...

    ReplyDelete
  4. உண்மை தான்... Legend is always a LEGEND...

    ReplyDelete
  5. கவலைபடாதே நண்பா. நிச்சயமாக இந்த படத்தை தமிழ்நாட்டிலேயே பார்போம். எதிர்பவர்களுக்கு எலக்ஷனில் பாடம் கற்பிப்போம்.

    ReplyDelete
  6. சார், பெங்களூர் போலாமா???

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.