Jan 26, 2013

VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபத்திற்காக விமானத்தில் பறந்தேன்.


நண்பர்களே...
விஸ்வரூபத்தை சென்னையில் ஆரோ3டியில் பார்க்க ஆசைப்பட்டது தப்பாகி விட்டது.
படம் தடை செய்யப்பட்டு விட்டதால் தவித்தேன்.
அண்டை மாநிலத்தில் பெங்களூரில் பார்த்து விடலாம் என நினைத்தால் அங்கும் தடையென செய்தி வந்தது.
கேரளாவில் படம் வெற்றிகரமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்ற செய்தியை நண்பர் விஜய் சொல்லி உயிரூட்டினார்.

செய்தி கேட்டதும் துள்ளி குதித்து சென்னை விமான நிலையத்தில்
‘ஸ்டாப் பிளாக்கில்’ பிரத்யட்சமானேன்.
ஜெட் ஏர்வேய்ஸ்,ஸ்பைஸ் ஜெட்,ஏர் இந்தியா, இண்டிகோ எல்லாமே ஹவுஸ்புல்.
முற்றிலும் மனம் தளர்ந்த விக்கிரமனாய் என்னுடைய டிராவல் ஏஜெண்டை தொடர்பு கொண்டேன்.
மாலை 7.15 மணிக்கு ஸ்பைஸ் ஜெட்டில் ஆன்லைன் மூலமாக இடம் பிடித்து கொடுத்தார்.
சரியான நேரத்திற்கு பிளைட் புறப்பட்டு 8.15 லேண்டாகியது.
நண்பர் விஜய்  ‘போலோ’காரில் பிக்கப்பண்ணி பறந்தார்.
தமிழ்நாடு பார்டர் தாண்டி வேலந்தாவளம் என்ற சிற்றூரில் தனலட்சுமி என்ற தியேட்டரை 9.45 மணிக்கு அடைந்தோம்.
படம் ஸ்டார்ட் ஆகி, டைட்டிலில் எழுதி இயக்கியவர் ’கமல்ஹாசன்’ என்ற பெயர் ஒளிரும் போது...
எழுந்த தியேட்டர் ஆரவார வெடித்தருணத்தில் நுழைந்தோம்.

படம் பற்றி விமர்சனம் பிறகு எழுதுகிறேன்.
பாராட்டத்தக்க அம்சங்களில் முக்கியமான சிலவற்றை சொல்லுகிறேன்.

[ 1 ] நான் ஏற்கெனவே சொன்னது போன்று,
விஸ்வரூபத்தில்  இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு பிரேம் கூட இல்லை.
மாறாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக படம் இயங்குகிறது.
படத்தை தடை செய்ய வேண்டும் என்று நியாயப்படி அமெரிக்கர்கள்தான் போராட வேண்டும்.
ஒரு சில இஸ்லாமியர்கள் இயக்கும் போராட்டத்தில்...
ஒரு சதவீதம் கூட நியாயம் இல்லை.

[2 ]  முதன் முறையாக ஒரு இந்தியப்படம் ‘தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லர்’ இலக்கணப்படி எடுக்கப்பட்டுள்ளது.
தீமெட்டிக் ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு சிறந்த ஹாலிவுட் உதாரணம் ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் வெளி வந்த ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’.

பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் ஆக்‌ஷன் திரில்லர் மட்டுமே எடுக்கப்படும்.
அமெரிக்காவை தூக்கி பிடிக்கும் விதமாக,
ராணுவமோ, தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ இயங்கி
‘அமெரிக்கா வென்றது அல்லது காப்பாற்றியது’ என்ற
சுப முடிவு திரைக்கதைப்போக்கு இருக்கும்.
எதிர் தரப்பை கணக்கிலெடுக்காத ஒரு தலைப்பட்சம் அப்பட்டமாக இருக்கும்.
உ.ம் :  ராணுவம் = Saving Private Ryan,
தனி மனிதன் = Rambo, மற்றும் அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்கள்.
குழு = Act Of Valor.

[ 3 ] ஆயிரக்கணக்கான ஹாலிவுட் படங்களை பார்த்த ரசிகர்களையே மிரட்டி விட்டார் கமல்.
‘மேக்கிங் கிங்’ என மீண்டும் நிரூபித்து உள்ளார்.

[ 4 ] படத்தில் ஒரு சண்டைக்காட்சி வருகிறது.
ஹாலிவுட்டை விட ஒரு படி மேலே போய் விட்டார்.
கனல் கதகளியாட்டம் அந்த சண்டை.
தீவார் படத்தில் அமிதாப் பச்சன் போடும் பைட்தான் இந்திய சினிமாவின் உச்சம்.
இன்றிலிருந்து விஸ்வரூபமே முதலிடம்.

[ 5 ] வில்லன் தப்பித்துப்போகும் ஹாலிவுட் கிளைமாக்ஸ் இருக்கிறது.
எனவே இரண்டாம் பாகம் நிச்சயம்.

[ 6 ]  தொழில் நுட்பத்தில், 900 கோடியில் உருவாகும் ஹாலிவுட் நேர்த்தியை... 90 கோடி பட்ஜெட்டில் கொடுத்ததே கமலின் இமாலய சாதனை.

[ 7 ] கதக் வாத்தியாராக கமல் காட்டும் நளினத்திற்காகவே படத்தை பத்து முறை பார்க்கலாம்.

[ 8 ]  படத்தில் கிஸ்ஸடிக்க வாய்ப்பிருந்தும்...
‘கிஸ்’கிந்தா காண்டம் இல்லாமல் இரண்டு குஜ்லிகளை வைத்து வேறொரு வகையில் தன் ரசிகர்களுக்கு தீனி போட்டது புதுமையே.

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பெருமைப்படும் வகையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு சோற்றை பதம் பார்ப்போம்.
உயிர் போகும் பேராபத்து வரும் போது நாம் இஷ்ட தெய்வத்தை துதிப்போம்.
விஸ்வரூபம் படத்தில் கதாநாயக பாத்திரம் ஏற்றிருக்கும் கமல்ஹாசன் அல்லாவை தொழுகிறார்.
இந்த ஒரு காட்சி போதும் கமல்ஹாசன்  என்ற படைப்பாளியின் நேர்மைக்கு.
அராஜகமாக அடம் பிடித்து போராடாதீர்கள் போராட்டவாதிகளே.
தமிழகத்தில் படம் வெளியாக குரல் கொடுப்பவர்களே உண்மையான இஸ்லாமியர்கள்.
படத்தை எதிர்ப்பவர்களை நரகத்தில் தள்ளி தண்டிப்பார் அல்லா.

படம் முடிந்து வெளியே வரும் போது நள்ளிரவுக்காட்சிக்காக திரண்டிருந்த கூட்டம் படத்தைப்போலவே பிரம்மாண்டம்.


19 comments:

  1. சூப்பர் சார்...எனக்கும் நீங்கள் சொல்வது எல்லாம் தான் தோன்றியது. படத்தை அல் கொய்தா தான் எதிர்க்க வேண்டும், முஸ்லிம்ஸ் அல்ல.
    நோலன் படம் போல் இந்த படத்திலும் விவாதிக்க, ஆராய் நிறைய விசயங்கள் இருக்கிறது. விவாதிப்போம்.

    ReplyDelete
  2. இந்த அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.. இந்த படத்தை தடை செய்ய வேண்டி போராடுபவர்கள் இந்த படத்தைப் பார்த்த பின் மனம் மாறுவார்கள்.

    ReplyDelete
  3. புதிய தலைமுறை சேனலில் படம் தடை செய்ய பட்ட அன்று இரவு விவாதம் நடந்தது.அதில் பேசிய ஒரு முஸ்லிம் இயக்க தலைவரிடம் கேட்ட்க்கபட்ட கேள்வி ஆப்கானில் நடப்பதை காட்டும்போது வேறு எப்படி காட்டுவது என்று கேள்வி.அதற்க்கு அவர் சொன்ன பதில் "கமலை யார் ஆப்கானில் நடப்பதை எல்லாம் எடுக்க சொன்னது ? வேறு கதையே கிடைக்கவில்லையா ? இன்னும் எடுக்க படாமல் எவ்வளவோ கதைகள் இருக்க இவர் ஏன் ஆப்கன் விஷயம் எல்லாம் எடுக்கிறார்.?

    இது எப்படி இருக்கு ?

    ReplyDelete
    Replies
    1. Soooooooper..............

      Delete
    2. It seems, they (political party who against this) need another kanna alwa sapida asaiya ....... :)

      Delete
  4. உங்கள் விமர்சனத்திற்காகத்தான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. விமானத்தில் பறந்து நீங்க பார்த்தது, சினிமாவில் உங்களுக்கு இருக்கும் அதீத காதலைக் காட்டுகிறது... ஆவலுடன் இருந்தேன் ஏமாற்றிவிட்டார்கள் சார்

    ReplyDelete
  6. //அற்புதமான படத்தை பார்த்து ரசிக்க நம் தமிழ் மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை./// பெங்களூர்ல கூட ஏமதிட்டங்கட

    ReplyDelete
  7. படம் ஸ்டார்ட் ஆகி டைட்டிலில் எழுதி இயக்கியவர் ’கமல்ஹாசன்’ என்ற பெயர் ஒளிரும் போது தியேட்டர் ஆரவாரத்தில் வெடித்த தருணத்தில் நுழைந்தோம்.////

    சூப்பரு.... விமானத்துல வந்தது வீண் போகல..

    ReplyDelete
  8. Bangalore - 1st day - started from noon shows - 18 movie hall - Housefull shows

    ReplyDelete
  9. @scenecreator!நீங்களும் புதிய தலைமுறையின் கருத்துரையாடல்களை பார்த்தீர்களா? இந்த இயக்கத்தலைவர்களையெல்லாம் நம்பி இஸ்லாமியர்கள் போனால் சமூகம் உருப்பட்ட மாதிரிதான்.

    @ரசிகன்!உங்களுக்கு பறந்து சென்று படம் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே.என்னைப் போன்ற சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நிரந்தரமாக படம் பார்க்காமல் செய்து விட்டார்கள் கலாச்சார தீவிரவாதிகள்.எங்களுக்கு ரசனை இழப்பு,கமலுக்கு முதலீட்டு இழப்பு,இந்தியாவிற்கு அன்னிய செலவாணி இழப்பு என மொத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள் இந்தியாவிற்கு எதிரான சமூக,மத தீவிரவாதிகள்.

    ReplyDelete
  10. நானும் தலைவர் படத்தை காளஹஸ்தியில் பார்த்தேன்.. தி (ஒன்லி) கிங் ஆஃப் இண்டியன் சினிமா!!

    ReplyDelete
  11. ஸார், படம் பாத்தாச்சு...

    வரும், வராதுன்னு பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருந்தார்கள். என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்ற முடிவில் இங்கு பெங்களூரு Innovative Multiplexல் book செய்திருந்தேன். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இன்று அனைத்து ஷோக்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது :-)

    அனைவரும் படம் பார்த்துவிட்ட பிறகு விவாதிக்க பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது... காத்திருப்போம்...

    ReplyDelete
  12. பக்கத்தில் இருபதனால் அருமை தெரியவில்லை. கனடாவில் விஸ்வரூம் செய்தி இணைத்துள்ளேன், பாருங்கள்
    http://www.tamilstar.com/tamil/moviereview-id-viswaroopam-movie-review-viswaroopam-movie--viswaroopam-kamal-haasan-kamal-haasan-movies-tamil-cinema-tamil-movies---review121.htm

    ReplyDelete
  13. தீவார் படத்தில் அமிதாப் பச்சன் போடும் பைட்தான் இந்திய சினிமாவின் உச்சம்.

    Pls. give any link, i like to see this fight sequence.

    ReplyDelete
  14. வண்க்கம் நண்பரே,
    கருமமே கண்ணாக படம் பார்த்து விட்டீர் வாழ்த்துக்கள். அல் கொய்தா வின் ஆதரவாளர்கள் சிலர் கிளப்பும் புரளியே பட எதிர்ப்பு!! அல் கொய்தாவைக் காட்டினால் படம் பார்த்துத சிலர் கோபப் பட்டால் வேற என்ன சொல்வது?
    அந்த கோமாளிக சொல்லைக் கேட்டு முஸ்லிம்கள் !! நிச்சயமாக இது ஒரு வரலாற்றுத் தவறு!!

    நன்றி!!

    ReplyDelete
  15. Sir,
    I planned meticulously to see Vishwaroopam. We went to Vijayawada on 26.01.2013.
    Evening our group visited Goddess Ammavaru Kanakadurga. After that we landed at Gandhi Nagar,
    where 25 theatres spread in that location. Vishwaroopam released in Yuvaraj complex and Venkata Swana Complex both were already packed for first and second show. We bought Rs.30/-ticket like Rajini and Koundamani purchase their ticket in the film “Mannan” style. (Only 50 tickets they will give.) After seeing the movie my group filled with Joy and Happiness, as we were touched Mount Everest. In the 20th minute (fight sequence) Kamal rasikas gave bill applause with viseel.

    ReplyDelete
  16. I planned meticulously to see Vishwaroopam. We went to Vijayawada on 26.01.2013.
    Evening our group visited Goddess Ammavaru Kanakadurga. After that we landed at Gandhi Nagar,
    where 25 theatres spread in that location. Vishwaroopam released in Yuvaraj complex and Venkata Swana Complex both were already packed for first and second show. We bought Rs.30/-ticket like Rajini and Koundamani purchase their ticket in the film “Mannan” style. (Only 50 tickets they will give.) After seeing the movie my group filled with Joy and Happiness, as we were touched Mount Everest. In the 20th minute (fight sequence) Kamal rasikas gave bill applause with viseel.

    ReplyDelete
  17. vethanthavalam dhanalakshmi....? i also seen there... nice movie.
    my review is here....

    http://feelthesmile.blogspot.in/2013/01/blog-post_27.html

    expecting your comments....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.