நண்பர்களே...
ஒரு கலைஞன் நல்ல படத்தைக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்
என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம்.
படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
ஆனால் கமல் மீது அமில மழை பொழிய ஆரம்பித்து விட்டார்கள் சிலர்.
படமே இன்னும் வெளியாகவில்லை.
டிரைலரைப்பார்த்து கதையெழுதி கருத்துச்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
ஒருவர் கமலை இந்து மதத்தீவிரவாதி என முத்திரையே குத்தி விட்டார்.
கறிக்கடைபாயை... கந்தஹார் தீவிரவாதி என்பது போல.
சமீபத்தில் கமல், புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த முக்கியமான கருத்துரை ஒன்றை வேண்டுமென்றே தவிர்த்தேன்.
காரணம்,அந்தக்கருத்துரையை, ஊதி பெருக்கி இந்துத்துவா சக்திகள் விஸ்வரூபமெடுத்து கமலை சின்னாபின்னமாக்க எத்தனிப்பார்கள்.
அக்கருத்தை இந்த நாட்டில் கமல் அளவுக்கு
தார்மீக கோபத்துடன் உக்கிரமாக எந்த சினிமாக்கலைஞனும் சொன்னதில்லை.
சொல்லவும் மாட்டர்கள் தொடை நடுங்கிகள்.
நான் கூட அப்போது நினைத்தேன்...
“எதற்கு தேவையில்லாமல் இன்னொரு வினையை தானே வலியத்தேடுகிறார்!” என்று...
படத்தை வெளியிட மாட்டோம்...என கொக்கரிக்கிறது ஒரு அமைப்பு.
குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் கலையை கற்று சில அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இரக்கமுள்ள இஸ்லாமிய நல்லோர்கள், நடு நிலையாளர்கள் இந்தச்சதிக்கு பலியாக மாட்டார்கள்.
இருந்தாலும், உங்கள் மவுனம் அவர்களுக்கான ஆதரவாக்கப்படும்.
இணைய இஸ்லாமியர்கள்...
வலைப்பதிவு,பேஸ்புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகத்தில் கருத்து தெரிவிக்கலாமே !
உறுதியாகச்சொல்கிறேன்
இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக படத்தில் ஒரு பிரேம் கூட இருக்காது.
இஸ்லாமியர்களின் கூடப்பிறக்காத சகோதரனாக...சிந்தையிலும் செயலிலும் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
அவரது பெயரிம் மட்டுமல்ல... உள்ளத்திலும் இஸ்லாமிய நட்புணர்வு
இன்றும்... என்றும்... வாழும்.
தயவு செய்து இனியும்,கமலஹாசன் என்ற கலைஞனை காயப்படுத்த வேண்டாம்.
விஸ்வரூபம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
வில்லங்கங்களும் இரண்டு மடங்காக பெருகி வருகிறது.
தமிழ் மக்களின் ஆதரவு ஆயிரம் மடங்காக பெருகட்டும் என வாழ்த்துகிறேன்.
Padam Varuma Varadha ? Ore Kulappamagam Payamagaum Ulladu.... Evvalau nal Kathirundhom. Anal Padam vandhu Pudhiya Vasoo, Sadhanai Padaika Vendum.. Ilangayilum Adhe Akkaporuthan...
ReplyDeleteஊளையிடும் கூட்டத்தை விட கமலின் பால் பற்றுள்ள இஸ்லாமியர்கள்
ReplyDeleteபல மடக்கு அதிகம்.
இக்கூட்டத்தை அவர்களே கவனித்து கொள்வார்கள்.
படம் 25ம் தேதி கட்டாயம் வெளியாகும்...
அல்லாவின் அருளோடும்...
கர்த்தரின் கருணையோடும்...
முப்பத்து முக்கோடி இந்துக்கடவுள்களின் ஆசிர்வாதத்தோடும்...
Ungal Padhil Sandhosathai Tharugiradu... Nandry..... Padhal Miga periya vasool Sadhnai padaikkattum.... Vazhthukkal
Deleteirakkamulla islamiyar!
ReplyDeleteபெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் அமைதிவிரும்பிகள் தான். பப்ளிசிட்டிக்காகவும்,அமைப்புகளின் ஆள் பிடிக்கும் வேலைக்காகவுமே இந்த பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது. கமல் என்ற மாபெரும் கலைஞன், இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர, எல்லா கடவுள்களும் அருள் செய்யட்டும்.
ReplyDeleteகமல் இந்தப் படத்தை போட்டுக் காட்டியிருக்கக்கூடாது. தவறு செய்துவிட்டார். மேலும், இத்தகைய மூர்க்கமான எதிர்ப்பு சமூகத்தில் நல்ல பிம்பத்தை உருவாக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
ReplyDeleteவிஸ்வரூபம் படத்தை வைத்து தங்கள் இருப்பை காட்டிக்கொள்ளுகிறார்கள். இதுவும் படத்திற்கு ஒரு விளம்பரமே!
ReplyDeleteவிஜையும் துப்பாக்கி படம் ரிலீசனதுகப்போரம் என்ன சொன்னாரு....
ReplyDeleteதெரியாம வச்சிட்டோம் அப்டீன்னு.. தெரியாம நடிக்க அவருக்கு(னுக்கு) என்ன அம்நீசியவா?....
கேட்குறதுக்கு யாரும் இல்லேன்னு தைரியதுலதனே இப்படி செய்றீங்க....
இதே நெலம ஒரு நாள் அவங்களுக்கும் வரலாம்...அப்போ வருத்தபடுவாங்க...
ஒருநேரம் அவங்களோட அடுத்த சந்ததியாவது பதிக்கபடுவாங்க....
இளையதலவளிக்கு தெரியல்லஅவரு கிறிஸ்துவர் அப்டீன்னு.....என்னக்கி நம்மகூட முட்டி முடியுறன்களோ அடுத்த டார்கெட் நீங்க எல்லாரும்தான்.
தி சமே திங் ஹப்பெநிங் இன் ஸ்ரீ லங்கா நொவ்.மொதல்ல ஹிந்துஸ்,இப்போ முஸ்லீம்ஸ்,இப்படி வரிசையா ஒவ்வொரு மதமும் ..........லெட்ஸ் ஸீ .
//டிரைலரைப்பார்த்து கதையெழுதி கருத்துச்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.//
ReplyDeleteஎன்னங்க இது புதுக்கதை! அப்போ இஸ்லாமிய அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காட்டியது பொய்யா? அதன்பிறகுதானே கடும் எதிர்ப்பே ஆரம்பித்தது!
நீங்கள் சொல்வதுபோல் ஒரு பிரேமில்கூட இஸ்லாமியர்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தவில்லையென்றால் எங்களுக்கும் சந்தோஷமே!
இது உங்களுக்கு எதிரான செய்தி அல்ல..!
ReplyDeleteFlash News :
http://dinamani.com/latest_news/article1432742.ece
'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'
By dn, சென்னை
First Published : 23 January 2013 08:39 PM IST
கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவங்க (மத வாதிகள்) எப்பவுமே இப்படி தான் சார்...எதாவது ஒளறிக்கிட்டே இருப்பாங்க. படத்தை தியேட்டர்ல காசு குடுத்து பார்த்தாலே போதும்.
ReplyDeleteவிஸ்வரூபம் நல்லா இருந்தா கண்டிப்பா ஓடும், இவங்க பண்ணுறதால படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி தான். அதுவும் இல்லாம ஊருக்கு எல்லாம் நல்லவன் ஆக முடியாது :):)
பெரிய அமௌன்ட் எதிர் பார்த்து இவங்க போராட்டம் பண்ணுறாங்க..அது கெடச்சா படம் சூப்பர்ன்னு அப்படியே பல்டி அடிச்சிடுவாங்க.
இங்க இது மாதிரி பிரச்னை எல்லாம் இல்ல . நான் நாளைக்கு நைட் போறேன் . இந்திய நேர படி வெள்ளி காலை 9 மணிக்கு படம் பார்த்துடுவேன்.
Please read this article and let me know ur opinion.. I was devasted when i saw the message that vishwaroopam banned for 15 days!!
ReplyDeletehttp://kovaiaavee.blogspot.in/2013/01/blog-post_23.html
இலக்கியத்துக்கு பாரதி என்றால் சினிமாவிற்கு கமல்.கமல் என்ற ஒரு கலைஞன் மட்டும் இல்லாவிட்டால் கடைசிவர நாம் கமர்சியல் சினிமாவை மட்டும் தான் பார்த்திருப்போம்.கமல் இல்லாமல் தமிழ் சினிமாவின் வளர்ச்சி நிச்சயமாக சாத்தியமே இல்லை,கமல் படத்தை தடை செய்வதற்கு பேசாம சினிமாவையே தடை செய்யசொல்லுங்க சார்.
ReplyDeleteஇன்னிக்கும் ஏதோ பிரச்சனை என்று படித்தேன்...வெறும் டைம் பாஸுக்காக படம் பார்க்கும் பழக்கம் ரசிகர்களை விட்டு விலகினால்தான் விஸ்வரூபம் போன்ற படைப்புக்கு முழுமையான ஆதரவும் வரவேற்பும் கிடைக்கும் போலும் அண்ணா..சினிமாவை சினிமாவாக பார்க்கும் பட்சத்தில் எதுக்கு மதம், இனம் போன்ற பிரச்சனைகள் எல்லாம்..ஒரு நல்ல படைப்பை எடுக்க முயற்சிப்பதுக்கு கிடைக்கும் பரிசா இல்லை தண்டனையா இவை ?
ReplyDelete