நண்பர்களே...
விஸ்வரூபம் அட்வான்ஸ் புக்கிங் சென்னையில் துவங்கி விட்டது என
பேஸ்புக் செய்திகள் வந்து விட்டது.
வழக்கம் போல கோவை மவுனம் காக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ சவுண்டை குருதிப்புனலில் அறிமுகப்படுத்தினார் கமல்.
விருமாண்டி படத்துக்கு ஒரே ஒரு பிரிண்ட் மட்டும் ‘ டி.எச்.எக்ஸ் சவுண்ட்’ சர்ட்டிபை பண்ணப்பட்ட பிரிண்ட் போட்டார்.
ஏனென்றால் தமிழ் நாட்டில் டி.எச்.எக்ஸ் சவுண்ட் சர்ட்டிபைடு தியேட்டர் ஒன்றே ஒன்றுதான் இருந்தது.
அது சென்னையில் உள்ள சத்யம் தியேட்டர்.
[T.H.X SOUND SYSTEM = ஸ்டார் வார்ஸ் என்னும் பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தை எடுத்த ஜார்ஜ் லூகாஸ்ஸின் கம்பெனி.]
ஆரோ 3 டி சவுண்ட் செய்யப்பட்ட தியேட்டர்கள் பற்றிய தகவலை கமல் தனது பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
லிஸ்டை பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது.
கோவையில் ஒரு தியேட்டர் கூட இந்த லிஸ்டில் இல்லை.
ஒரு வேளை, எல்லா தியேட்டர்காரனுங்களும் ,
கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்காரர்களிடம் அட்வான்ஸ் வாங்கிட்டானுங்களா !
[ கோவையில் பழைய தியேட்டர்களை,
கண்ணன் டிபர்ட்மெண்ட் ஸ்டோர் அதிபர்கள் விலைக்கு வாங்கி
மளிகை கடையாக்கி வருகிறார்கள்.]
மதுரைக்காரங்க கொடுத்து வச்சவங்க...
இரண்டு தியேட்டரில் ஆரோ 3டி சவுண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
புண்ணியவான்களூக்கு ‘ சொக்கநாத மீனாட்சி’ அள்ளி அள்ளி கொடுக்கணும்.
விஸ்வரூபம் படமே அவர்களுக்கு கொட்டி கொடுக்கும்.
சேதி கேட்டு, கோயம்புத்தூர் வியாபாரிகளுக்கு மூலத்திலிருந்து மூளை வரை தீப்பிடிக்கணும்.
நான் சென்னையில் 25ம்தேதியே விஸ்வரூபம் பார்க்கவிருக்கிறேன்.
26ம் தேதி மதுரையில் பார்க்கவிருக்கிறேன்.
மதுரை அலப்பறையில்... படம் பாக்க ஜோரா இருக்கும்.
அவிய்ங்க கொண்டாட்டமே...ஜிகர்தண்டாதான்.
வரேன் மதுரைக்கு.
வண்டி கட்டி வாரேன்.
வரலாமா...
ஆரோ 3டி சவுண்ட் தொழில் நுட்பத்தில் உருவான,
உலகிலேயே இரண்டாவது திரைப்படமான விஸ்வரூபத்தை பார்க்கவும்....காது குளிர கேட்கவும் உதவிய
‘கலா பூர்வ முதலாளிகளை’ பாராட்டி வாழ்த்துகிறேன்.
அப்ப 25 மற்றும் 26 ' ரேட்டை தீபாவளி ' தான் உங்களுக்கு....................விஸ்வரூபத்தின் திரைவிமர்சனத்தை எத்ர்நோக்கியுள்ளேன்.அதற்க்கு மட்டும் அதிக நேரம் செலவிட்டு விரிவாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDelete25ம்தேதி தமிழர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
Deleteவியாதி கோஷ்டிகளுக்கு வயிறெரியும்.
விரிவான விமர்சனம் எழுத காத்திருக்கிறேன்.
Kandippa ! Vandarai Vazhavaikkum- Madurai. Pasakara payaga ooru :)
ReplyDeleteவரவேற்புக்கு நன்றி.
Deleteகமல் நாமம் வாழ்க
ReplyDeleteசினிமா உள்ள வரை அவரது நாமம் ஜெபிக்கப்படும்....
Deleteதுதிக்கப்படும்.
சந்தேகப்படுபவர்கள் நூறாண்டு கழித்து பிறந்து தெரிந்து கொள்ளவும்.
தல உங்க எழுத்த பார்த்தே படம் பார்க்கிற ஆசையை தூண்டிவிட்டது அதாவது முதல்நாளில் ...ஏனென்றல் நானும் கமல் படங்களை முன்பு முதல் ஷோ பார்த்தவன்.
ReplyDeleteமுதல் நாள் கொண்டாட்டம்...அது தனி ரகம்.
Deleteகொண்டாட வாழ்த்துகிறேன்.
நல்ல வேலை ...இந்த வாரம் வீட்டுக்கு (கோவை) போய் படம் பார்க்கலாம்னு நெனச்சேன் ...இங்க "மைசூர் "-லையே ஆரோ 3D ரிலீஸ் ஆகுது செம ........
ReplyDeleteதீபாவளி பொங்கல் வந்தப்ப கூட இவ்வளவு சந்தோசம் இல்ல.. விஸ்வரூபம் ரிலீஸ் அவ்வளவு சந்தோசமா இருக்கு..
ReplyDelete