நண்பர்களே...
பிரமிடு சாய்மீரா என்ற நிறுவனம் ‘மர்மயோகி’ தயாரிப்பு தொடர்பாக
கமல் மீது மோசடி வழக்கு தொடர்ந்ததாக பத்திரிக்கைச்செய்திகள் வந்தன.
நான் இது குறித்து எனது திரையுலக நண்பர்களிடம் விசாரித்தேன்.
கிடைத்த தகவல் திகைப்பிலாழ்த்தியது.
அவர்கள் கூறிய தகவல்களின் சாராம்சம்...
‘பிரமிடு சாய்மீரா’ நிறுவனம் ஏகப்பட்ட 'கார்ப்பரேட் தில்லுமுல்லுகளை' செய்துள்ளதாம்.
கடந்த காலத்தில் தமிழ்நாடெங்கும் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து
நடத்தியது சாய்மீரா.
அதற்கான ஒப்பந்தப்படி தியேட்டர்களுக்கு குத்தகை பணம் தராமல் நிறைய பேரை ஏமாற்றி உள்ளதாம்.
இந்த மோசடி நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படம் பூஜை போட்டது.
கமலை வைத்து ‘மர்மயோகி’ தயாரிப்பதாக... பூஜை மட்டும் போட்டது.
இதற்கெல்லாம் காரணம் என்ன ?
இதற்கு சற்று பின்னோக்கி போக வேண்டும்.
சாய்மீரா மோசடி நிறுவனம் தீடிரென்று பெரிய ஸ்டார் படங்களை மொத்தமாக விலைக்கு வாங்கி தியேட்டர்களில் திரையிட்டது.
இதன் ஆரம்ப கால ஜொலிஜொலிப்பில் சாய்மீரா ஷேர்கள் ஷேர் மார்கெட்டில் உயரே சென்றது.
சாய்மீரா வெளியிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்கவே
சாய்மீரா ஷேர்கள் அதல பாளத்துக்கு சரிந்தன.
சாய்மீரா நிறுவனத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்கள்,
சாய்மீரா ஷேர்களை ‘அடிமாட்டு விலைக்கு’ வாங்கி பதுக்கினர்.
கமலை தங்களது வலையில் வீழ்த்தி ஒப்பந்தம் போட்டு ‘மர்மயோகி’ பூஜையை பிரம்மாண்டமாக நடத்தினர்.
பத்து இயக்குனர்களை வைத்து ஒரே நேரத்தில் பத்துப்படத்திற்கும் பூஜை போடப்பட்டது.
சாய்மீரா ஷேர்கள் இப்போது அதிக விலைக்கு உயரத்தொடங்கியது.
‘பதுக்கி வைத்தவர்கள்’ நல்ல விலை வந்ததும் எல்லா ஷேரையும் விற்று
கொள்ளை லாபம் பார்த்து விட்டனர்.
அதோடு மர்மயோகி & பத்துப்படத்தயாரிப்பு அனைத்தையும் ஊற்றி மங்களம் பாடி விட்டனர்.
சாய்மீரா என்ற ‘டுபாக்கூர்’ நிறுவனத்தின் பங்கு வர்த்தக சூழ்ச்சி அறியாமல் சிக்கியவர்கள் கமலும், ஏனைய பத்து இயக்குனர்களும்தான்.
சூழ்ச்சிகள் நிலைப்பதில்லை.
உண்மை உழைப்பு தோற்பதில்லை.
திரையுலகம், பதிவுலகம் எல்லா உலகிற்கும் இது பொருந்தும்.
2013ல் அனைவருக்கும் வெற்றியின்
‘விஸ்வரூப தரிசனம்’கிடைக்க வாழ்த்துகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteதங்களுக்கு புத்தாண்டு இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.
சாய்மீரா தன்னிடம் பங்கு போட்ட மக்களுக்கு மட்டும் நாமம் சாத்தவில்லை. தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களுக்கும் சாத்தியது. எனக்கும், அண்ணன் உண்மைத்தமிழனுக்கு சம்பளப்பாக்கி இன்னும் மிச்சமிருக்கிறது :-(
ReplyDeleteஉழைத்தவனுக்கு கூலி தராதவன் அய்யோவென்று போவான்...
Deleteஎன்ற சான்றோர் வாக்கு இருக்கிறது நண்பரே.
ஏமாற்றி வாழ்பவர்கள் நிலைத்திருக்க முடியாது.
அனுபவ் பவுண்டேஷன், ரமேஷ் கார்ஸ், சிநேகம் பைனான்ஸ் வரிசையில் இருப்பவர்கள் சாய்மீரா.
இப்பதிவிற்கு கருத்துரைத்து வலு சேர்த்தமைக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி ஐயா................. விஸ்வரூபம் இப்பவே முன்பதிவில் 300 கோடியை தாண்டிவிட்டதாமே உண்மையா?........... உண்மையாக இருந்தால் சந்தோசம்... நன்றி
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா.... விஸ்வரூபம் முன்பதிவு 300 கோடியை தாண்டிவிட்டதாமே உண்மையா ?
ReplyDeleteஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்நாடு LIST OF HOLIDAYS
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Deleteநன்றி.
Happy New Year sir.................
ReplyDeleteபெருந்தலைவரின் உண்மைத்தொண்டரே...
Deleteஉங்களது ஆரோக்கியமும்,ஐஸ்வர்யமும் என்றும் வளர வாழ்த்துகிறேன்.
Happy New year to you and your family members!!
ReplyDeleteநண்பரே...
Deleteதூய்மையான நட்புக்கு சொந்தமே...
தாங்களும், தங்கள் சுற்றமும் நட்பும் வாழ்க வளமுடன்!
எது கமல் ஏமாந்துடர
ReplyDeleteசிங்கத்தை சிறு நரிகள் ஏமாற்றி விடும்...எப்போதாவது.
Deleteji
ReplyDeletewish you and your family a happy prosperous successful and healthy 2013. Welcome to Chennai soon in 2013.
anbudan
sundar g rasanai chennai
தங்களுக்கும்...தங்கள் உற்றார் உறவினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Deleteநண்பரின் நல்வாழ்த்து என்னை சென்னையிலும் ஜெயிக்க வைக்கும்.
நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழனின் வாக்கு பலிக்கும்.
Deleteஎன் கனவுகள் ஜெயிக்க தங்களைப்போன்ற நல்லவர்களின் அன்பும் ஆசியும் அவசியம் தேவை.
குன்றாத ஆரோக்கியமும்...வளருகின்ற ஐஸ்வர்யமும் பெற்று சிறப்புடன் சுற்றமும் நட்பும் கூடி வாழ வாழ்த்துகிறேன்.