Oct 3, 2012

Hey Ram \ 2000 \ ஜாக்கி சேகர் நிலை என்ன ? \ ஹேராம் = 024

நண்பர்களே...
நேற்று காந்தி ஜெயந்தி அன்று கலைஞர் தொலைக்காட்சியில்,
‘காந்தி’ [ Gandhi \ 1982\ India & U.K  \ Directed by Richard Attenborough ] திரைப்படத்தின் தமிழாக்கமும்,
‘ஹேராம்’ [ Hey Ram \ 2000 \ India \ Directed by Kamal Hassan ] திரைப்படமும் திரையிடப்பட்டது.


 ‘காந்தி’ திரைப்படத்தை விட தரத்தில் உயர்ந்த  ‘ஹேராமை’ முக்கிய நிகழ்வாக...
மாலை நேரத்தில் [பிரைம் டைமில்] திரையிட்ட,
கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி.

ஏற்கெனவே,ஹேராமால் மனநிலை பாதிக்கப்பட்ட காரிகனுக்கு, வழக்கம் போல் மண்டைக்கு ஏறி விட்டது.
ஜாக்கி சேகர் எழுதிய,  ‘நடிகர் திலகத்தின் தெய்வமகன்’ பற்றிய பதிவில்...
காரிகன், ஹேராமையும்,என்னையும் சாடி பின்னூட்டம் போட்டு விட்டது.
ஜாக்கி சேகர் பதிவைக்காண ‘கிளிக்’கவும்.

இப்பின்னூட்டத்தை வெளியிட்ட ஜாக்கி சேகருக்கு, தார்மீகப்பொறுப்பு  இருக்கிறது.
ஹேராம் பற்றி எழுதிய தரக்குறைவான விமர்சனத்துக்கு உங்கள் பதிலென்ன?
அக்கருத்தை,மறுத்து விளக்கமளிக்கா விட்டால்...
காரிகன் கருத்துடன் தாங்கள் ஒத்துப்போகிறீர்கள் என எடுத்துக்கொள்ள வேண்டி வருகிறது.
ஜாக்கி சேகரின் நிலை அறிய காத்திருக்கிறேன்.    

27 comments:

  1. உலகசினிமா ரசிகனுக்கு..... அங்கே என் பதிவில் காரிகனுக்கு சொன்ன பதில் இதோ...

    நேற்று பின்னுட்டம் வெளியிடப்படும் போதே பதில் எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.. பட் என் நிகழ்சியின் எடிட்டிங்கில் உட்கார்ந்து விட்டேன்.. அதனால் பதில் போடவில்லை... அதுக்குள் நீங்க பதிவே போட்டு விட்டீர்கள்.. இதோ அவருக்கான பதில்...

    =============

    அன்பின் காரிகன்..
    யாரை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றீர்கள் என்பது புரிகின்றது...ஆனால் ரசனைகள் எல்லோருக்கும் வேறானவை.. இந்த காட்சியையே குப்பை என்று சொல்லுபவர்களும் உண்டு... அது போலத்தான் ஹேராம் திரைப்படத்தை பற்றி நீங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்...

    எனக்கு மிகவும் பிடித்த படம் ஹேராம்... அந்த திரைப்படத்தில் உள்ள உழைப்பும், சின்ன சின்ன விஷயத்துக்கு கூட கமல் காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல், இயக்கிய விஷயங்களை நான் அறிவேன்.....ஹேராம் படத்துக்கு ஷூட்டிங் போய் விட்டு அங்கே வேலை பார்த்து வந்தவர்கள் அப்படத்தின் மேங்கிங் பற்றி சிலாகித்து என்னிடம் பேசியது எனக்கு தெரியும்...

    உங்களுக்கு கமல் பிடிக்கவில்லையா? அல்லது உலக சினிமா ரசிகனை பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..

    சிவாஜிக்கு பிறகு நடிப்பிலும் சரி... தொழில்நுட்பத்திலம் சரி... சினிமா அதிகம் தெரிந்த ஒரே தமிழ் நடிகர்.. கமல் மட்டுமே....

    ஹேராம்திரைப்படம்... பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமலிடம்.. நிறைய பேருக்கு படம் புரியவில்லையே என்று கேள்வி கேட்ட போது..? கமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    அது படைத்தவனின் தவறு அல்ல என்று சொல்லி விட்டு போய் விட்டார்....

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள நண்பர் ஜாக்கி சேகர் அவர்களே...
      தங்கள் பின்னூட்டம்...
      தங்கள் நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக விளக்குகின்றன.
      மிக்க நன்றி.

      Delete
    2. நடிப்பு சரி
      தொழில் நுட்பத்திற்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு

      Delete
  2. அன்பின்
    உலகசினிமா ரசிகன்...

    பொதுவாக வலையுலகில் நடக்கும் எந்த பிரச்சனையிலும் அதிகம் கலந்து கொள்ளமாட்டேன்... எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.

    என்னை பற்றி எந்த விமர்சனம் சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு போய் விடுவேன்...

    எதெச்சையாக உங்கள் ஹேராம் பதிவை வாசித்தேன்... அந்த படத்தை யாரும் அனுகாத வேறு கோணத்தில் அனுகி இருந்தீர்கள். ரசித்துப்படித்தேன்.. மிக மிக அற்புதமான படம்...

    போன் செய்து பேசலாம் என்று நினைத்தேன்.. அலுவல் காரணமாக மறந்த விட்டேன்..

    கமலுக்காக இதே பதிவுலகில் ஒரு காலத்தில் வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட்டு இருக்கின்றேன்... அது சண்டை அல்ல.. லாஜிக்கான பாயிண்டுகள்... அதை சொல்லிவிட்டு நகர்ந்து, அடுத்த வேலை பார்க்க போய் விடுவேன்.. அதன் பிறகு அது குறித்து 200 பதிவுகள் வந்தாலும் பதில் சொல்ல மாட்டேன்...

    இதுதான் என் நிலைப்பாடு..

    கற்றது தமிழ் ராம் என் நண்பர்.. அரிடம் அந்த படம் ரிலிசான போது ரொம்ப ரொம்ப சூடனா விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்தன..

    என்ன சார்... இப்படி எல்லாம் உங்க படத்தை பத்தி கிழி கிழின்னு கிழிக்கறாங்க என்றேன்..

    என்னவேனா கிழிக்கட்டும்.. படத்தை ரிலிஸ் பண்ணியாச்சி.. நான் என்ன சொல்ல வந்தேனோ? அந்த கருத்தையும் சொல்லியாகிவிட்டது...
    எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்... நாம அதுக்கு பதில் சொல்லி நேரத்தை வீனாக்ககூடாது... அடுத்த படத்தை பத்தி பேசுவோம் வாங்க... என்றார்..

    உங்களுக்கு ராம் சொன்னது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்..

    நேரமிருப்பின் போன் செய்யவும்.....

    உங்கள் தளம் என்பதால் என் பதிலை சொல்லி இருக்கின்றேன்...

    நன்றி..


    ReplyDelete
    Replies
    1. நண்பரே...இந்த காரிகன் தனது தளத்தில் ஹேராமில் இருக்கும் குறைகளை பதிவாக எழுதட்டுமே!
      தில்லானா மோகனாம்பாளில் மனோரமா சொல்வது போல் சொல்கிறேன்...
      “இரண்டையும்தான் சனங்க பாக்கட்டுமே!”
      அதை விடுத்து பொத்தாம் பொதுவாக குறை சொல்லி காலம் தள்ளுவதையே பொழைப்பாக வைத்திருக்கிறது.

      நிறைய பேச வேண்டி உள்ளது.
      போனில் பேசுகிறேன்.
      நன்றி.

      Delete
  3. காரிகன் மறுத்தால் என்ன? ஜாக்கி சேகர் அதை வெளியிட்டால் என்ன? ஹே ராம் நல்ல படம் என்பது மாறப்போவதில்லை அல்லவா? விட்டு விடுங்கள். The heartburn is just not worth it. Let us respectfully disagree with each other!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      உண்மை, வாசலுக்கு வந்து செருப்பை போடுவதற்குள்...
      பொய், உலகத்தையே சுற்றி வந்து விடும்.
      எனவே, பொய் புறப்படுவதற்குள்... பொசுக்கி விட வேண்டும்.
      இது எனது கொள்கை.

      Delete
  4. உடனடி பதிவா....நாம நேர்ல மீட் பண்ணுவோம்..

    ReplyDelete
  5. ஆஹா...நான் ரெடி.
    ஜீவாவை சந்தித்தால்,சாப்பாடு கிடைக்கும்...
    என்பது சான்றோர் வாக்கு.

    ReplyDelete
  6. Seriously, I don't think this deserves a seperate blog. The more you try to bring attention to things which are unworthy, the more you highlight the same. I am waiting for your real blogs.

    ReplyDelete
  7. நண்பரே...சமயத்தில் ‘டீக்கடை பெஞ்சு விவாதம்’...
    சூடாகவும் சுவையாகவும் அமைந்து விடும்.
    அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.

    ReplyDelete
  8. காரிகன் போன்றவர்களுக்கு, கமல் என்ற கலைஞன், சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்து விட்ட வயிற்றெரிச்சல்

    ReplyDelete
  9. அன்பின் திரு.பாஸ்கரன் அண்ணா,
    காரிகன் தனது வாந்திகளை பல இடங்களில் எடுத்து வருகிறார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை.
    அவருடைய கீழ்த்தரமான விமர்சனங்களால் ஹே ராம் என்ற உன்னத திரைப்படத்தின் தரமோ அல்லது இந்திய சினிமாவின் அதன் பங்களிப்போ குறைய போவதில்லை.

    காரிகன் குறிப்பிட்டது போன்று அவள் அப்படித்தான் ஒரு தமிழில் வந்த சிறந்த படம். மாற்று கருத்துக்கு இடமேயில்லை. காரிகன் குறிபிடுவது என்னவென்றால் அதுதான் தமிழில் வந்த சிறந்த திரைப்படம். (மற்றையது அந்த நாள் , நான் இதுவரை அந்த படத்தை பார்க்க வில்லை)

    காரிகன் தமிழில் இதற்க்கு பின் வந்த சிறந்த திரைப்படங்களை ஏற்று கொள்ளவேயில்லை. இது ஒரு வகை பாசிசம். தான் சிறந்தது என்று கூறுவதை எல்லோரும் ஏற்று கொள்ளவேண்டும் என்று கூறுவது.

    தனக்கு பிடிக்காததை யாராவது புகழ்ந்தால் அவர்களை சகட்டு மேனிக்கு தாக்குவது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...காரிகனுக்கு நன்றி சொல்வீர்கள்.
      எனது அடுத்தப்பதிவு காரிகனுக்கு அர்ப்பணிக்கப்போகிறேன்.

      Delete
  10. உங்கள் "ஹேராம்" பதிவுகளை படித்தபின் முதல்முறையாக கமல் ரசிகனாக இல்லாமல் படத்தை பார்த்தேன் ( கமல் ரசிகனாக மதுரை-அமிர்தம், விருதுநகர்-உதயம், கோவை-யமுனா திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன் )...

    காலையில் கலைஞரில் போட்ட "காந்தி" படத்தையும் பார்த்தேன்...

    "காந்தி" படத்தில் காந்தி இறக்கும் போது அவர் "ஹேராம் ஹேராம்" என்று இரண்டு முறை கூறி விட்டு இறப்பார்..

    கமலின் "ஹேராம்" படத்தில் மட்டும் தான் சுட்டவுடன் ஒன்றும் கூறாமல் இறப்பார்... அப்படி தான் இறந்ததாக வரலாறும் கூறுகிறது.... இதை கூட கமல் மிகச் சரியாக பதித்திருக்கிறார்...

    இந்து முஸ்லீம் பிரச்சினையை கூட எவ்வளவு துணிச்சலாக அணுகியிருக்கிறார் கமல்!!!!

    என்னை போன்ற பாமர ரசிகர்களயும் வேறு கோணத்தில் "ஹேராம்" படத்தை பார்க்க வைத்த "உலக சினிமா ரசிகனுக்கு" நன்றிகள் கோடி!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      அடுத்தப்பதிவில் எழுத இருந்த மேட்டரில் உள்ள ஒரு பகுதியை...
      உங்கள் பின்னூட்டத்திலேயே தெரிவித்து விட்டீர்கள்.
      நன்றி.

      Delete
  11. சிவாஜி சிறந்த நடிகர்தான்.. ஆனால் அவர் நடிப்புக்கான தீனி போடும் எந்த பாத்திரமும் அவருக்கு வாய்க்கவில்லை என்பது என் எண்ணம்.. தெய்வமகன்உட்பட.. ஜாக்கி போல இயல்பாகவே உணர்ச்சி வசப் படுபவர்களுக்கு தெ. ம நல்ல படமாகத் தெரியும்.. அவ்வளவே.. அது உண்மையில்லை என்பது என் எண்ணம்.. .ஹெராம் புரியாத படம்ல்ல .. ஒன்றிப் போய்ப் பார்த்தால் அது சொல்லும் சேதி ஏராளம்.. heyram போன்ற படங்களின் தோல்வி சிறந்த ரசனை தோற்றுப் போவதைய குறிக்கும்..

    ReplyDelete
  12. heyram milestone in tamil cinema

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திலிருந்து மாறுபடுவதற்கு என்னை மன்னிக்கவும்.
      Hey Ram milestone in Indian cinema.

      Delete
  13. //கமல் என்ற கலைஞன், சிவாஜி என்ற நடிகனை ஓவர் டேக் செய்து விட்ட//
    என்ன காமெடி இது ?
    நான் சிவாஜி , க்மல் இருவரின் ரசிகன் தான் .. கமல் என்ற பன்முக கலைஞனோடு சிவாஜி என்ற இணையற்ற நடிகனை ஒப்பிடுவதே அபத்தம் . கமல் சினிமாவின் முழு கலைஞன் என்ற முறையில் இணையற்றவர் என்றால் , நடிகன் என்ற முறையில் சிவாஜி-க்கு இணை எவரும் கிடையாது , அவர் சிஷ்யன் கமல் உட்பட.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      தங்கள் கருத்தில் நானும் உடன் படுகிறேன்.
      இருவருமே ஒப்பிடக்கூடாத சிகரங்கள்.

      Delete
  14. அண்ணே, ஜாக்கியோட பதிவுல இதை போட்டு இருக்கேன். வருமான்னு தெரியலை.

    காரிகன், கமல் மேலேயும், உ சி ர மேலேயும் உங்களுக்கு இருக்குற காண்டு புரியுது. ஆனா இவ்வளவு நாள் கழிச்சும், சம்பந்தம் இல்லாம, இங்கேயும் உங்க சொம்பை தூக்கிட்டு வந்து 'தீர்ப்பு' சொல்றது கொஞ்சம் ஓவரு.

    யாருமே பார்க்காத படம் நல்ல படம் இல்லைன்னு சொல்றதுல இருந்தே தெரியுது, உங்க 'அதிமேதாவித்தனம்'. ஒரு வேளை உங்களுக்கு 'கந்தசாமியும்', 'சிறுத்தையும்' காவியங்களா இருந்து இருக்கலாம். அதுக்காக உங்களை மாதிரி உலக அனுபவம் உள்ள மேதைங்க எல்லாம் ஹே ராமை குறை சொன்னா, பாவம் கமல் மாதிரி ஒரு 'வளர்ந்து வர்ற' கலைஞருக்கு எவ்வளவு கஷ்டம்?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கோபி அவர்களே...
      காரிகனுக்கு நான் கடமை பட்டுள்ளேன்.
      ‘குப்பை’ என்ற ஒரு சொல்லில் விளக்கிய ஹேராமை...
      நான் ‘கோமேதகம்’ என விளக்க மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரையே எழுத வேண்டி உள்ளது.
      நம்மை பட்டை தீட்டும்... வசவாளர்கள் வாழ்க!.

      Delete
  15. சண்டியர் கரன் என்பவர் காரிகனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் தமிழின் இணையற்ற நடிகனான சிவாஜியை ஒரு சாதாரண நடிகனைப்போல எண்ணி எதையோ உளறி இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கமல் பாணி தனி. சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை தன் பக்கம் பார்க்க வைத்தவர். கமலே கூட இந்த கருத்தை விரும்ப மாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. சிவாஜி சுயம்பு.
      அந்த சுயம்புலிருந்து கிளைத்து செழித்ததுதான் கமல்.

      கமலின் நடிப்பிற்குள் சிவாஜி வியாபித்திருக்கிறார் என்பதை கமல் தனது நெருங்கிய நண்பர்களிடம் சிலாகித்துப்பேசுவார்.

      Delete
  16. நண்பர்களே...
    நண்பர் சண்டியர் கரன்,
    கமலின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக இட்ட... பின்னூட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
    அன்புடன்,
    உலகசினிமா ரசிகன்.

    ReplyDelete
  17. அய்யா தங்களது heyram தொடர் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.