‘ஹேராம்’ என்ற ‘உலகசினிமா ஆலமரத்திலிருந்து’ தாவ...
சரியான மரத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
‘கோண்ங்கள் பிலிம் சொசைட்டி’ அடையாளம் காட்டியது.
நன்றி... கோணங்களுக்கு.
‘துருக்கி’ சரமாரியாக உலகசினிமாவுக்கு...
‘தவப்புதல்வர்களை’ தந்து கொண்டே இருக்கிறது.
அவர்களில் ‘தலைமகன்’ என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இயக்குனர்
Nuri Bilge Ceylan.
‘முன்பு ஒரு காலத்துல’...என தலைப்பிலேயே கதை சொல்ல ஆரம்பித்தவ்ர் தான் ஒரு வித்தியாசமான ‘கதை சொல்லி’ என...
தனது எல்லா படங்களிலும் நிரூபித்து வருகிறார்.
இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ' டிஸ்டண்ட் ' [ Distant ] என்ற படத்தை, செழியன் அவர்கள் ஆனந்தவிகடனில் எழுதிய போதே நாம் இவரை
அறிந்திருந்தோம்.
2011ல் இப்படத்தை இயக்கி, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய...
‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை... மீண்டும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
இனி அவரை, அள்ள விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு...
நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கைகளில் இருக்கிறது.
இருட்டில் மலைச்சரிவில் செதுக்கிய சாலையில் மூன்று வாகனங்கள் ஒளியை ஓவியமாக பாய்ச்சியபடி செல்கின்றன.
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர்,இரண்டு கைதிகள்,காவல்துறை வீரர்கள்,மற்றும் பணியாளர்கள் என ஒரு சிறு குழு ஒரு இரவு முழுக்க 'குற்றவாளிகளால்' புதைக்கப்பட்ட பிணத்தை தேடி அலைகிறார்கள்.
‘ இருக்கும் இடத்தை விட்டு...
இல்லாத இடம் தேடி...
எங்கெங்கோ அலைகிறார்கள்...
இந்த ஞானத்தங்கங்கள் ’.
அலைகிறார்கள்...அலைகிறார்கள்...அப்படி அலைகிறார்கள்.
அவர்களோடு நாமும் அலைந்து களைப்புறுகிறோம்.
ஆனால் அந்த களைப்பினூடே...
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர் ஆகிய...
முக்கிய மூவருக்கிடையில் நடக்கும் உரையாடல்கள் மூலமாக...
இப்படம்...
உயர் தளத்தில் இயங்குவதை அடையாளம் கண்டு கொள்கிறோம்.
ஒரு கட்டத்தில் களைப்பாகி... அனைவரும் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று கிராமத்தலைவர் வீட்டில் தங்கி இளைப்பாறி பசியாறுகின்றனர்.
இங்கும் ‘பவர் கட்’ வந்து சூழலை இருட்டாக்குகிறது.
‘இருட்டு’இப்படத்தின் மிக முக்கிய குறியீடாக ‘பவர்ஃபுல்லாக’ பயன் படுத்தப்பட்டுள்ளது.
உலகத்தின் அத்தனை இருட்டையும் ஒரு நொடியில் போக்கும் வல்லமை படைத்த ‘ஆதவன்’ எழும் நேரமான...
அதிகாலைப்பொழுதில்...
'இடம்' அடையாளம் காணப்படுகிறது.
எப்படி?
யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்...
‘இருட்டையே’ துணையாகக்கொண்டு... ஒரே ஒரு நாய்...
அந்தப்பிணம் இருக்கும் இடத்தை ‘கண்டு பிடித்து’...
தோண்டிக்கொண்டிருக்கும்.
‘கண்டு பிடித்த’ நாயை விரட்டி விட்டு...
இவர்களே... ‘அரும்பாடு பட்டு கண்டு பிடித்த ’
இடத்தை தோண்டுவார்கள்.
அப்போது ‘ நாய் ’ பாய்ண்ட் ஆப் வியுவில் ஒரு ஷாட் போட்டிருப்பார் இயக்குனர்.
“ அட நாய்களா...
இந்த இடத்தை கண்டு பிடிக்கவா...
இவ்வளவு கஷ்டப்பட்டீங்க !”
கைகளும்,கால்களும் கட்டப்பட்ட நிலையில் பிணம் புதைக்கப்பட்டு இருக்கிறது.
இறந்தவனது உடல்... மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கே இறந்தவனது மனைவி,சிறு வயது மகனும் காத்திருக்கின்றனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி மீது...
அச்சிறுவன் கல்லை தூக்கி அடிக்கிறான்.
வீசியெறியப்பட்ட கல்லில்... அச்சிறுவனின் ‘கோபம்’ இருக்கிறது.
அவனது ‘மொத்த கோபமும்’ அக்கல்லில் இறக்கி வைக்கப்பட்டு விட்டதை படத்தின் இறுதிக்காட்சி மூலம் நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.
‘நீதியும்’, ‘காவலும்’ விடைபெற்றுச்செல்ல ‘மருத்துவர்’ மட்டுமே இருக்கிறார்.
மருத்துவர்,
பிணத்தை அறுத்து பரிசோதிக்கும் மருத்துவர்,
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை டைப் செய்பவர்,
மற்றும் ‘இறந்தவர்’...
என இவர்களை மட்டுமே பிரதானமாக வைத்து...
இறுதிக்காட்சி பின்னப்பட்டுள்ளது.
‘லங்க்சை’ பரிசோதிக்கும் போது அதில் ‘மணல்’ இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
எனவே உயிரோடு புதைக்கப்பட்டு கொல்லப்பட்டது
தெரிய வருகிறது.
ஆனால் மருத்துவர்... அந்த உண்மையை போஸ்ட்மார்ட்டம் ர்ப்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைக்கிறார்.
ஏன் ?
இது போல...
பல கேள்விகள்... படத்தில் எழுப்பப்படுகிறது.
விடைகள், படத்திற்கு... ‘உள்ளேயும்...வெளியேயும்’ இருக்கிறது.
அவற்றில்,
வாழ்க்கையின் தத்துவங்கள்...யதார்த்தங்கள்...பரிகாசங்கள் இருக்கிறது.
நான் கண்டு பிடித்த கேள்விகளையும்...விடைகளையும் எழுதி...
எனது கோணத்தில்... இப்படத்தை நீங்கள் பார்ப்பது...
இப்படத்திற்கு நான் செய்யும் துரோகம்.
படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனி ‘அந்தாதியே’ பாடலாம்.
மலைச்சரிவுகளில் காமிராவை இடம் மாற்றி...
ஒவ்வொரு பிரேமையும் ஒவியமாக்கி இருக்கிறார்.
காட்சியில் இடம் பெற்ற வாகனங்களின் ‘ஹெட்லைட்டை’ மட்டும் துணையாகக்கொண்டு இவர் வடித்திருக்கும் ஓவியங்கள்...
நமது ‘இன்றைய’ ஓளிப்பதிவாளர்களுக்கு பாடங்கள்.
[ தமிழில் ‘பாலுமகேந்திரா’ மட்டுமே... இந்த ஆளுமையில் வல்லவர்.]
அற்புதமான ஒரு உலகசினிமாவை...
உங்களுக்கு அறிமுகம் செய்த பெருமிதத்தோடு...
விடை பெறுகிறேன்...
அடுத்து,
கோவை ஐரோப்பிய திரைப்படத்திருவிழாவில் கண்ட...
மற்றொரு ‘அற்புதத்தை’ காணத்தருகிறேன் !.
இப்படம் பெற்ற விருதுகள்...இயக்குனரின் ஏனைய படைப்புகள்...
விக்கிப்பீடீயா உபயத்தோடு...
படத்தின் முன்னோட்டம் காணொளி காண்க...

Awards
[edit]Won
- 2011 - Asia Pacific Screen Awards for Achievement in Cinematography (Gökhan Tiryaki)
- 2011 - Asia Pacific Screen Awards for Achievement in Directing (Nuri Bilge Ceylan)
- 2011 - Asia Pacific Screen Awards: Jury Grand Prize (Zeynep Özbatur)
- 2011 - Cannes Film Festival: Grand Prize of the Jury for Best Film
- 2011 - Karlovy Vary International Film Festival: Netpac Award (Nuri Bilge Ceylan)
[edit]Nominations
- 2011 - Asia Pacific Screen Awards for Best Film
- 2011 - Asia Pacific Screen Awards for Best Screenplay
- 2011 - Cannes Film Festival: Palme d'Or (Nuri Bilge Ceylan)
- 2011 - Cinemanila International Film Festival: Lino Brocka Award for International Competition
- 2011 - Oslo Films from the South Festival for Best Feature Film
Filmography
Films, Television & Video | |||||
---|---|---|---|---|---|
Year | Title | Credited as | Notes | ||
Director | Producer | Writer | |||
1995 | Cocoon (Original: Koza) | Yes | Yes | Yes | Short film. |
1998 | Small Town (Original: Kasaba) | Yes | Yes | Yes | Feature debut. |
2000 | Clouds of May (Original: Mayıs Sıkıntısı) | Yes | Yes | Yes | |
2002 | Distant (Original: Uzak) | Yes | Yes | Yes | |
2006 | Climates (Original: İklimler) | Yes | Yes | Yes | |
2008 | Three Monkeys (Original: Üç Maymun) | Yes | Yes | Yes | |
2011 | Once Upon a Time in Anatolia (Original: Bir Zamanlar Anadolu'da) | Yes | Yes | Yes |
படத்தின் முன்னோட்டம் காணொளி காண்க...
நல்ல அறிமுகத்துக்கு நன்றி தலைவரே
ReplyDeleteவருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி...நண்பரே.
Deleteபதிவுலக அகலிகை...தங்கள் ‘மிதிக்காக’ காத்திருக்கிறாள்.
Once upon a time in America" இப்போது தான் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன்... அது எப்டின்னு தெரியல. இது புதுசா இருக்கு... ம்ம்... இதையும் எடுத்துடறேன்..
ReplyDelete'Once upon' வரிசையில் இன்னொரு முக்கிய படம் இருக்கிறது.
Delete'Once Upon a time in the West'...
அதையும் பார்த்து விடுங்கள்.
அந்த 1968 படம்தானே.... ம்ம்... டவுன்லோட் பண்ணியாச்சு .. பாத்துட்டு சொல்றேன்...
Deleteஅப்புறம் என்னோட இலங்கையை அதிர வைத்த முக்கொலைகள் பாத்துடின்களா ? ஒருவேளை சினிமா பத்தி மட்டும்தான் ஆர்வம்னா... மன்னிச்சூ ...
ReplyDeleteநீங்கள் எழுதிய ‘பதிவை’படித்துதான் அச்செய்தியை தெரிந்து கொண்டேன்.
Deleteஎனக்கு சினிமா தவிற வேறு ஒன்றும் தெரியாது.
அதனால் பின்னூட்டம் இடாமல் நழுவி வந்தேன்.
அப்படியா? ஆனால் வர மறந்துடாதிங்க... அப்புறம், பாலு மகேந்திரா அவர்களின் இணைப்புக்கு நன்றி...
Deleteஆங் .. அப்புறம் த. ஒ. 1
ReplyDeleteCaminoக்கு பிறகு இரண்டு மாதம் தாண்டி ஒரு உலகசினிமா அறிமுகம். :) Camino விமர்சனம் படிச்ச உடனேயே டவுன்லோட் பண்ணியும் இன்னும் பார்க்கவில்லை தலைவரே. மன்னிச்சு... :(
ReplyDelete‘கமீனோ படம் இன்னும் பார்க்கவில்லை’ என்ற ‘உறுத்தலே’...அப்படத்தை பார்க்க வைத்து விடும்.
Deleteரொம்ப சிம்பிளான கதை மாதிரி இருக்கு.. ஆனாலும் நீங்க முழுசா சொல்லாம விட்டதால கொலைக்கு காரணம் தேட ஆர்வமாயிருக்கு. கண்டிப்பா பார்க்கனும். அந்த ரெண்டாவது அற்புதத்தையும் சொல்லிட்டா ரெண்டையும் சேர்த்து வைச்சு பார்த்திரலாம்..
ReplyDelete*அப்புறம் 'கமீனோ' பார்த்தேன்.. உங்க எழுத்தையும் தாண்டிய "மேஜிக்" படத்துல இருக்கு! ரொம்ப நன்றி!
இப்படம்... கொலைகாரனை மட்டும் குற்றவாளியாக காட்டவில்லை...
Deleteபடம் பார்க்கும் நம்மையும் குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்துகிறது.
படம் பார்க்கும் போது நான் செய்த குற்றங்கள் அணி வகுத்தது.
நம் மனசாட்சிதான்...சூப்ரீம் கோர்ட் நீதிபதி.
/// 'கமீனோ' பார்த்தேன்.. உங்க எழுத்தையும் தாண்டிய "மேஜிக்" படத்துல இருக்கு! ரொம்ப நன்றி!///
கமீனோவின் பெருமையே அதுதான்.
வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி.
Thanks. Such movies enhance the experience of watching a movie - a real treat. I fell in love with the cinematography.
ReplyDeleteநண்பரே...இப்படத்தின் ஒளிப்பதிவு பற்றிய சிறப்பம்சங்களை தனிப்பதிவே போடலாம்.
Deleteநண்பர் ‘விஜய் ஆர்ம்ஸ்டாராங்க்’ எழுதினால் அப்பதிவு இன்னும் சிறப்பாக இருக்கும்.
இப்படத்தை டவுண்லோட் செய்ய கீழுள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
ReplyDeleteBluray-rip quality 800mb
http://tinyurl.com/9c2vkqy
படம் கிடைத்துவிட்டது. இன்றே பார்த்து விட்டு உங்களை அழைக்கிறேன் :-)
ReplyDeleteஉலக சினிமா குறித்த எந்த கற்பனையும் இல்லை,வாய்ப்பும் இல்லை உங்கள் விமர்சனம் படித்த போது பார்க்கும் ஆவல் தோன்றியது . எப்படி டவுன் லோட் செய்வது? லிங்க் குறித்து கூறுங்களேன்
ReplyDelete