Sep 7, 2012

Hey Ram-2000 \ இரண்டு கைகளால் இமயத்தை மறைக்க முடியுமா? \ ஹேராம்=21

நண்பர்களே...
நாம் இப்போது அலசிக்கொண்டிருக்கும் காட்சி...
ஹேராமிலேயே மிக முக்கியமான காட்சியாக கருத வேண்டி உள்ளது.
சித்தாந்தத்தில் உந்தப்பட்ட அபயங்கரும்,எந்த சித்தாந்தத்தையும் பின்புலமாக கொள்ளாத சாகேத்ராமும் சந்திக்கும் இக்காட்சியை  ‘இருத்தலியல் சூழலில்’ படைப்பாளி கமல் வடிவமைத்துள்ளார்.

இருத்தலியல் [ Existentialism ] என்றால் என்ன?
விக்கிப்பீடீயாவை தேடி படித்துக்கொள்ளுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Existentialism

தமிழில் படிக்க....

இருத்தலியல் பற்றி தமிழ் விக்கிப்பீடீயா காண...

ஆங்கிலம் தெரிந்தவர்கள்....தமிழ் விக்கிப்பீடீயா பக்கம் போகாதீர்கள்.
உயிருக்கு உத்தரவாதமில்லை.

*********************************************************************************


இது போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு என் ஆசான் சுஜாதா அந்தாதியே பாடியிருக்கிறார்..

 “தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும்.
 அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. 
இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது.”

***********************************************************************

இருத்தலியல் பற்றி... தமிழ் விக்கிப்பீடீயாவிலிருந்து, சிறு பகுதி ...

 தனி நபரே அவரது சொந்த வாழ்க்கைக்கு மற்றும் அவ்வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் வாழவும்,[7][8] பல இருத்தல் தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள் துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவை இருப்பினும் பொருளளிக்க பொறுப்பானவர் என்பதை நிலைநிறுத்தினார்.[9]
[என்னய்யா...மொழி பெயர்ப்பு இது....படிச்சுட்டு இருக்கும் போதே ஆசனவாயில் புகை வருது.]

ஹேராமில்,இருத்தலியல் எவ்வாறு பொருந்துகிறது?
சாகேத்ராம் தன் காதல் மனைவியுடன் ஒரு சாதரணனை போல வாழ ஆசைப்பட்டான்.
ஊரே ரணகளமாக இருக்கையில் இவன் கிளுகிளுப்பாக இருந்தான்.
ஆனால்  ‘காமப்பசி கொண்ட ஒருவனால்’ அழைத்து வரப்பட்டவர்கள் வந்தார்கள்...கொன்றார்கள்.
கோபத்தில் கொலைகளை செய்து மிருகமாக மாறிய நிலையில்
பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமி...  ‘சரேபேஸ்வரராக’ காட்சி கொடுத்து சாகேத்ராமனை சாந்தப்படுத்துகிறாள்.
[ சரேபேஸ்வரர்-இரணியனைக்கொன்று உக்கிர மூர்த்தியாக மாறி விட்ட நரசிம்மரை சாந்தப்படுத்திய சிவனின்அவதாரம் ]
நாகரீக மனிதனாக திருந்திய வேளையில் ‘வேட்டையாடலாம்...விளையாடலாம்... ’என அழைக்கிறான் அபயங்கர்.
இவ்வளவுதாங்க... ‘இருத்தலியலில்’ ஹேராமுக்குள் நாம் இது வரை பார்த்த காட்சிகள்...
இன்னும் காட்சிகளை தொடர்ந்து காணவிருக்கிறோம்.

*********************************************************************************

ஆனா,ஹேராமுக்குள் எதுவுமே இல்லைன்னு கருந்தேள் தொடர்ந்து  ‘நாட்டியமாடிகிட்டே’ இருக்காரு.
நான் அவர்  ‘முட்டியை உடைக்க’ தொடர்ந்து  ‘தில்லானா’ வாசிச்சுகிட்டே இருப்பேன்.
சத்தியமா சொல்றேன்... ‘இருத்தலியலை’ சொல்லாம ஹேராமை ஓட்டிடலாம்னுதான் நெனச்சேன்.
 ‘கருந்தேள்தான்’ விடல.

*********************************************************************************

 ‘இருத்தலியல்’ ஹேராமுக்குள் இருப்பது  ‘மைக்ரோ லெவல்’ [ Micro Level ].
 ‘காஸாபிளாங்காவில் ’ இருப்பது  ‘மேக்ரோ லெவல்’ [ Macro Level ] .
இரண்டாம் உலகப்போரில்  ‘பிரான்ஸ்’ இருந்தது...  ‘இருத்தலியல் சூழல்’.

எத்தனையோ போர்களில்...எத்தனையோ நாடுகளை வென்ற  ‘வல்லரசான’ பிரான்ஸ்,  ‘ஜெர்மனியிடம் அல்லது ஹிட்லரிடம்’  கம்ப்யூட்டர்  ‘ஆன்’ ஆக எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட விரைவாக சரண்டர் ஆனதை... தத்துவஞானிகள்
ஆராய்ந்தார்கள்....ஆராய்கிறார்கள்....ஆராய்வார்கள்.
இச்சூழலை மையமாக வைத்து பின்னப்பட்டதே  ‘காஸாபிளாங்கா’
 [Casablanca \ 1942 \ English \ Directed by Michael Curtiz ].
காசாபிளாங்காவை...  ‘அறிமுகப்படுத்தி’ ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்.

சரித்திரத்தை... திரைக்கதையாக்க...  ‘ரிச்சர்ட் அட்டன்பரோவின்’ காந்தி மற்றும்  ‘பெட்ரோலூசியின்’ லாஸ்ட் எம்பரர் ஆகிய இரண்டு படங்களுக்கு...  தலா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆனால் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே உழைத்து...ஹேராமை உருவாக்கி
தரத்தில்  ‘காந்தியை’ தாண்டினார்...
‘ லாஸ்ட் எம்பரரை ’ தொட்டார் கமல்...
இதை விரிவாக பின்னால் வரும் பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

பத்தாண்டுகள் கழித்து நான் இன்று ஹேராமை கொண்டாடி வருகிறேன்.
நூறாண்டுகள் கழித்து என்னை விட சிறப்பாக ஹேராமை கொண்டாட வேறொருவன் வருவான்.
அதற்கான தகுதி ஹேராமிற்கு இருக்கிறது.

அடுத்த ஹேராம் பதிவிற்கு...  நண்பர் ‘ஹாலிவுட் பாலா’ உதவியிருக்கிறார்.
ஏன்?எதற்கு? எப்படி?...அறிய காத்திருங்கள்.
  




17 comments:

  1. சத்தியமா ஒன்னும் விளங்கல..உங்கள மாதிரி நிறைய உலக படம் பார்க்கணுமோ...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
      எல்லோரும் வெள்ளந்தியா இப்படி உண்மையை ஒத்துக்க மாட்டாங்க...
      புரியல...அப்படின்னு சொல்றதுக்கு பதிலாக...புடிக்கலன்னு சொல்வாங்க...சிலர்.
      அதைக்கூட ஏத்துக்கலாம்.
      ஆனா ஹேராமுக்குள் ஒண்ணுமேயில்லைன்னு ஜல்லியடிக்கிற கோஷ்டிகள்தான் டேஞ்சர் பார்ட்டிகள்.
      நாமதான் சூதானமா இருக்கணும்.

      Delete
  2. Though a long time reader of you blog, this is the first time I am posting a reaction. I must say that I find your analysis of HEY RAM really compelling and engaging.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி நண்பரே...

      Delete
    2. This is a humble request. As a part of your analysis, would it be possible for you to analyse each character in this film seperately?as a sort of a character sketch. I loved the way the different characters were shaped in this fil and would like your detailed analysis of the same. And please write a seperate blog on the music of Ilayaraja - I feel this work was one of his masterpieces.

      Delete
    3. Since I am new to posting , I do have a problem with typing in Thamizhl( which is what I really want to do). Kindly bear with me. என்னை நண்பராக ஏற்றது உள்ளத்திற்கு உவகை அளிக்கின்றது.

      Delete
    4. நண்பரே...
      உங்கள் வேண்டுகோளை... கட்டளையாக ஏற்று எழுதுவேன்.

      Delete
  3. I SAW THE HEY RAM - OPENING SHOW IN NAGPUR( HINDI VERSION ) WITH MY FRIENDS.MOST OF THEM ARE NOT UNDERSTOOD THE FILM , BUT I CHELLENGED THEM THIS IS THE BEST MOVIE AND I SAID ANANDA VIKATAN WILL GIVE MORE THEN 50+ MARKS THIS MOVIE.IT GOT 60 MARKS.NEXT DAY I SAW TAMIL VERSION IN MUMBAI.

    TILL DATE I LOVE THIS MOVIE FRAME BY FRAME LIKE YOU.RAM FIRST TIME HE FOUGHT FOR HIS WIFE ( HINDU ) LATER STAGE HE FOUGHT FOR HIS FRIEND ( MUSLIM ). THAT TIME ONLY HE REALISE THE LOSE IS HAPPENED TO HUMAN. HE UNDERSTOOD BOTH SIDE AND WANT TO APPOLIZE FROM GANDI JI.

    THIS FILM IS NOT GOT REWARD - BUT DESERVED FOR LOTS AND LOTS.

    THANK YOU FOR YOUR ANALYSIS.KEEP IT UP.


    MUTHUKRISHNAN.S

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவில் தங்களைப்போன்றவர்கள் வருகை புரிந்து பின்னூட்டமிட்டது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
      நன்றி.

      Delete
  4. ONE OF THE BEST DIALOUGE IN THE MOVIE IS " YOU ARE SOUTH INDIAN - YOU DONT KNOW THE PAIN OF PARTICIAN" RAM REPLIED ' I KNOW THE PAIN ' .

    ReplyDelete
    Replies
    1. இதனால்தான் இப்படத்தை ‘இந்தியப்படம்’ என கவுரவித்தார் என் ஆசான் சுஜாதா.

      Delete
  5. உங்கள் ஒவ்வொரு ஹேராம் பதிவிலும் புதிதாக ஒரு வார்த்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. இந்த வார்த்தைகள் அனைத்தையும் சொல்ல வழி வகுத்த படைப்பாளி கமலுக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  6. //ஆனா ஹேராமுக்குள் ஒண்ணுமேயில்லைன்னு ஜல்லியடிக்கிற கோஷ்டிகள்தான் டேஞ்சர் பார்ட்டிகள்.
    நாமதான் சூதானமா இருக்கணும்.//

    அது எதுக்குன்னா கமல் ஒரு டம்மி அப்படீன்னு உரக்க தண்டோரா போட்டாச்சு. இப்போ என்னடான்னா நீங்க கமல்னா யாருன்னு பட்டய கிளப்பறீங்க. இந்த மாதிரி ஒரு Quality counter அவிங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. எங்கடா நாம கமலை டேமேஜ் ஆக்கலாம்னு பார்த்தா இந்த ஆளு நமக்கு ஆப்பு வைக்கிறாரேன்னு உதறல் இருக்குறதால தான், இப்படி இன்னும் பிடிவாதமா, ஈனஸ்வரத்துல அதெல்லாம் ஒன்னும் கிடையாதுன்னு மொனகிட்டு இருக்காங்க. ஈகோதான்னே காரணம். எங்க கமலை பத்தி ஒரு நல்ல விஷயம் எழுத சொல்லுங்க பார்ப்போம்.

    விடாதீங்கண்ணே. கமல் தும்முனாலும் தப்பு, இருமுனாலும் தப்பு. ஏதோ அவர் இங்க ஒண்ணுமே செய்யாம சும்மா ரீல் ஒட்டிக்கிட்டு இருக்காருன்ற மாதிரி இவங்க எழுதுறது தான் கடுப்பா இருக்கு. 'மத்தவங்கள' பத்தி ஏதாவது எழுத சொல்லுங்க பார்ப்போம். அவங்க ஆளுங்க பிரிச்சு மேஞ்சுடுவாங்க. அந்த 'மத்தவங்க' சும்மா பம்மாத்து காமிச்சே ராக்கெட் விட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதுங்க விடுற ராக்கெட்ல ஆயிரம் ஊத்தல் இருக்கு. அதை பத்தி ஒரு வார்த்தை வெளிய வராது. அவங்க படத்தை பத்தி பேசாம, அவங்க மனிதருள் மாணிக்கம், எவ்வளவு எளிமை தெரியுமா? இவ்வளவு வசதி இருந்தாலும் காப்பர் பாட்டம் வச்ச ஜட்டி போடாம காட்டன் ஜட்டி தான் போடுறாங்கன்னு ஒரே ஐலசா தான்.

    உழைக்கிறவங்களுக்கு, உண்மையா இருக்குறவங்களுக்கு இங்க மரியாதை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தைரியத்தை எண்ணி வியக்கிறேன்.
      பூசணிக்காயை போட்டு உடைச்சீட்டீங்க.

      இனி இன்னும் வீர்யத்துடன் ஹேராம் பதிவுகள் வரும்.
      காரணம் படத்தை அப்படி எடுத்திருக்கிறார்.
      ‘ஆரோகணம்தான்’...‘அவரோகணம்’ இல்லை.

      Delete
    2. Gopi..

      //அவங்க மனிதருள் மாணிக்கம், எவ்வளவு எளிமை தெரியுமா?//

      இது அவரிடமிருந்து "கவர்" வாங்கும் மீடியாக்கள், வாங்கிய காசுக்கு பரப்பியவை

      Delete
  7. வணக்கம் சார்,
    உங்களின் பதிவுகள் ரொம்பநாளாக படித்து கொண்டு வருகிறேன், நீங்கள் எழுதுவது சில புரிகிறது, பல புரிய மாட்டேங்குது. ஆனால் யாருடனும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு.
    உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துகள் சார்,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.