Sep 11, 2012

Hey Ram - 2000 \ இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் வெள்ளைக்காரா ! \ ஹேராம் = 023

நண்பர்களே...

ஹேராம் பட விமர்சனம் எழுதுவதற்கே எவ்வளவு எதிர்ப்புகள் ?.
படத்தை உருவாக்க கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் ?.


படம் உருவாகும் போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பி.ஜே.பி.
தமிழகத்தில்...பிஜேபியோடு கூட்டணி போட்ட கலைஞர் ஆட்சி.
ஒவ்வொரு ஷாட் வைக்கும் போதும்...ஹிந்து,முஸ்லீம்,பிஜேபி,காங்கிரஸ்,கலைஞர்,இத்தனைக்கும் மேலாக சென்சார்.... இவை எல்லாம் மண்டைக்குள் ஓடும்.
சினிமா மொழி தெரிந்த காரணத்தால் தான் சொல்ல வந்த கருத்தை குறியீடாக்கி...அற்புதமாக பதிவு செய்து விட்டார்.
இன்னும் சொல்லப்போனால்... மேல குறிப்பிட்ட அனைவரையும்  ‘கடந்து’ விட்டார் கமல்.

சென்சாருக்கு மட்டும் ஒரு வேன் நிறைய ஆவணங்களை எடுத்துப்போய் வாதிட்டு சென்சார் வாங்கினார் எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

நல்ல படம் எடுக்க நாய் படாத பாடு படணும்.

 ‘பாடு பட்டு எடுத்த’...ஹேராமுக்குள் நுழைவோம்.


ஆர்.எஸ்.எஸ்ஸின்...
இரண்டாவது முக்கிய தலைவரான எம்.எஸ்.கோல்வால்கரை [M.S. Golwalkar ],  ‘அபயங்கராக’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரி தோன்றவில்லையா !.

 அபயங்கர், சாகேத்ராமை... ‘நல்லா வேட்டையாடு’ என வாழ்த்தியனுப்புகிறான்...
ஆயுதமேந்திய அபயங்கரின் தொண்டர்கள்...
இரு புறமும் விலகி வழி விடுவதில் ராணுவ ஒழுங்கு இருக்கும்.

பின்னணியில் மரண ஓலங்கள் ஒலிக்க...பற்றியெறியும் நெருப்புக்கு மத்தியில் ராம் ஓடுகிறான்.
சுற்றி நடக்கும் அவலங்களை காணச்சகியாமல் தப்பித்து ஒடுவது போல்  ‘நடிகர் கமலின்’ உடல் மொழி இருக்கும்.

நீண்ட நெடிய வாள்களுடன், சீக்கியர்கள் கூட்டமாக நின்று கொண்டு...
ஒரு இஸ்லாமிய இளைஞனை வெட்டிக்கொல்வதை பார்ப்பான் ராம்.
 ‘திலகமிட்ட ராமை’...  ‘ஹிந்து’ என அடையாளம் கண்டு சீக்கியர்கள் கையசைக்க... பதிலுக்கு ராமும் கையசைக்கிறான்.
இக்காட்சியின் மூலமாக  ‘பதிலடி வன்முறையில்’ ஹிந்து-சீக்கியர் கூட்டணியாக இயங்கிய வரலாறை
சொல்கிறார்  ‘இயக்குனர் கமல்’.

 ‘கலங்கலாக’ இருக்கும் வானத்தின் பின்னணியில் ...
வல்லூறுகள் வட்டமிடும்...ஒரு  ‘ஷாட்டை’ போட்டிருப்பார்
‘இயக்குனர் கமல்’.

ஹேராம் படத்தில்... வானம் நீல நிறமாக தோன்றுவதை காட்சிப்படுத்தவில்லை என  ‘ஒளிப்பதிவாளர் திரு’ ஒரு பேட்டியில் சொன்னதாக...  ‘ஹாலிவுட் பாலா’ போனில் பேசும் போது கூறினார்.
அவரிடம் பேசிய பிறகே அக்குறியீட்டை  ‘கவனித்தேன்’.
நன்றி பாலா.

கலங்கலான வானம் மேலே...
விக்டோரியா மகால் கீழே...  பின்னணியில் இருக்க...
முன்னணியில் பிணங்கள் கிடப்பதை குறியீடாக்கி உள்ளார்.
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்                                                                                                                                                                                 வெள்ளைக்காரா...

உனது பிரித்தாளும் சூழ்ச்சியை... இன்றும் ஆளுகின்ற வர்க்கம் கையாள்வதை கூடங்குளத்தில் கண்கூடாக பார்க்கிறோம்.
 
அடுத்த பதிவில் சந்திப்போம்.

காணொளி காண்க...


8 comments:

  1. தல...

    நீங்க கமல் வெளியிட்ட "ஹேராம் திரைக்கதை" புத்தகம் படிச்சிருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...ஹேராம் திரைக்கதை ஜெராக்ஸ் வைத்திருக்கிறேன்.
      ஒவ்வொரு பதிவுக்கும் படித்து வருகிறேன்.

      Delete
  2. ஹேராம் படத்தை இன்னும் ஒரு காட்சியை கூட நான் பார்த்ததில்லை.
    நீங்கள் ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு உன்னிப்பாகவும் , தொடர்புபடுத்தியும், எழுதிகிறிர்கள்,
    என்பதை நினைக்கும் போது உங்களை கண்டு வியக்கிறேன். உங்கள் விமர்சனம் படித்தால் ஹேராம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்...
    மிக விரைவில் ஹேராம் பார்க்க முயலுகிறேன். நன்றி....

    ReplyDelete
    Replies
    1. ஹேராம் பார்த்து விடுங்கள்...நண்பரே.

      Delete
  3. வெள்ளையரின் DIVIDE AND RULE POLICY இன்றும் நம் மத்தியில் உலவுவது வெட்ககேடு. இந்தியர்கள், அதிலும் தமிழர்களாகிய நாம் நம் அரசியல்வாதிகளின் இந்த செய்கையை அனுமதிதிருப்பது தான் நம் சாபகேடு. இப்படத்தில் இக்கருத்து நன்கு ஆழமாக பதிவு செயப்பட்டு உள்ள்தை எடுத்து காட்டியதற்கு நன்றி. இதற்காகவே பாராட்டப்படவேண்டிய படம். ஆனால் நம்மவர்கள் சமூகமொழி பேசும் படங்களை விமர்சிப்பது வேறு கோணத்தில் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. /// நம்மவர்கள் சமூகமொழி பேசும் படங்களை விமர்சிப்பது வேறு கோணத்தில் அல்லவா?///

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே.
      ஓ.கே.ஓகேவை காவியம் என அந்தாதி தயாரிப்பது...
      ‘வழக்கு எண்’ போன்ற சமூக காவியங்களுக்கு
      ‘இன்னா நாற்பது’ தயாரிக்கும்...
      ‘அதி’ மேதாவி... ‘ஷா’வாரிசுகள்தான்...
      வலையுலக தாதாக்கள்.

      Delete
  4. // ‘அபயங்கராக’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரி தோன்றவில்லையா ! //

    கமலை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். சினிமா மீது அவர் கொண்டிருக்கும் காதலுக்காக!

    இன்னும் நான் வியப்பிலிருந்து மீளவில்லை!

    ReplyDelete
  5. udal mannuku, uyir ulaha nayahanuku (kamalahasan) ulaha nayahanae unakaha en uyir arpanam samarpanam. Badmasri ulahanayahan kamal rocks. Kalai ulaha kadavul Kamalahasan tharkolai padai, kamal veriyarhal, madurai.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.