நண்பர்களே...
‘ மீண்டு ’ வந்து விட்டேன்....
ஹேராமில்...
இப்போது நாம் காணவிருக்கும் காட்சிமிக முக்கியமானது...
கமல் ஒரு இந்துத்வா வெறியர் என்பதற்கு முக்கிய சாட்சியாக இக்காட்சியையே ‘கமல் எதிர்ப்பாளர்கள்’ குறிப்பிடுவார்கள்.
இது உண்மையா ? என ஆராய்ந்ததில் இரண்டு உண்மைகள் கிடைத்தன.
அந்த உண்மைகளை பதிவின் இறுதியில் சொல்கிறேன்... வாருங்கள்.
பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமியிடம் இருந்து கிடைத்த ‘ஞானத்தால் ’
சாகேத் ராமின் ‘ வெறி ’ அடங்கி ‘ நெறி ’ ஆக்கிரமிக்கும் நேரம்...
தடை போட வருகிறது ‘விதி’ அல்லது ‘தருணம் ’.
சாகேத்ராமும்...அபயங்கரும்...துப்பாக்கியோடு ஒருவரை ஒருவர் எதிர் கொள்கிறார்கள்.
அபயங்கருக்கு பக்கபலமாக வந்திருக்கும் கூட்டத்தின் கைகளில் ஆயுதங்கள் பளபளக்கின்றன...கண்களில் வன்முறை பளபளக்கின்றன.
யார் இவர்கள் ?
சரித்திரத்தை பக்கம் ...பக்கமாக படித்து நான் தெரிந்து கொண்டதை சில வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.
மனித சரித்திரத்தில்...முக்கிய பங்கு வகிக்கிறது மதம்.
‘ மிஷினரி ’ அமைப்பு கொண்ட ‘ மதமே ’...தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து உயிரோடு இயங்கி வருகிறது .
இந்த உண்மையை தெரிந்து கொண்டவர்கள்....
‘ இந்து மதத்திற்கும் ’ இப்படி ஒரு மிஷினரி அமைப்பை 1925 ல் தொடங்கி இருக்கிறார்கள்.
அதுவே ‘ஆர்.எஸ்.எஸ் ’.
ராணுவப்பயிற்சியும்...கட்டுப்பாடும்...ஒரு சேர கற்பிக்கப்பட்டு...
செலுத்தப்பட்ட கூட்டத்தை... சாகேத்ராம் எதிர் கொள்வதை...
‘ இயக்குனர் ’ கமலின், ‘ ஷாட் கம்போஷிசனை ’ வர்ணிக்க எனது ஒட்டு மொத்த திரையறிவும் தேவைப்படுகிறது.
ஆயுதங்களோடு, ஆயத்தமாக ராணுவ அணிவகுப்போடு...
அணி வகுத்திருப்பதை...
கேமராவின் ‘பேணிங் ஷாட்டும்’...
இளையராஜாவின் ‘பேங்க் பேங்க் ’ இசையும்...
பார்வையாளர்களுக்கு ‘ வந்திருப்பவர்கள் யார் ? ’என அடையாளம் காட்டுகிறது.
இக்காட்சியின் அனைத்து ஷாட்களிலும்... ‘ போர்ஸ் & பவர் ’ இருக்கிறது.
இது ‘திருவின்’ திருவிளையாடல்.
ராமின் பூணூலை அடையாளம் கண்டு கொண்ட அபயங்கர்... ‘அபிவாதயே ’ சொல்ல ஆரம்பிக்கிறான்.
‘அபிவாதயே’ என்றால் என்ன ?... என்பதை எனது பதிவுலக நண்பர் தெளிவாக விளக்கினார்.
அவருக்கு என் நன்றி.
‘அபிவாதயே ’ என்பது பிராம்மணர்களின் விசிட்டிங் கார்டு.
தனது குலம்..கோத்திரம்...இன்னார் வாரிசு...எனச்சொல்லி பெரியவர்களை வணங்கும் பழமையான முறை.
இன்றைய தலைமுறை... ‘அபிவாதயேயை’ சுருக்கி ‘ஹாய்’
என இரண்டெழுத்து மந்திரத்தால் வழிபடுகிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நண்பர்.
‘அபிவாதே’ ஆங்கில மொழியாக்கம்....
அபயங்கர் அபிவாதயே சொல்லும் போது...
‘ செமி சர்க்கிள் ட்ராலி ஷாட்டில் ’படம் பிடித்து காட்டியுள்ளார்
‘ இயக்குனர் ’ கமல்.
‘ வந்திருப்பவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள் ’ என அடையாளப்படுத்தி உள்ளார்.
ஏன் ? அரை வட்டம் ஷாட் போட்டு நிறுத்தினார்?...
அந்த வட்டத்தில் ‘ இது வரை ’ சாகேத்ராமும் இல்லை.
‘ படைப்பாளி ’ கமலும் இல்லை.
இருந்திருந்தால்... ‘ முழு வட்டம் ஷாட் ’ போட்டு முடித்திருப்பார்
‘ இயக்குனர் ’ கமல்.
இந்த குறுகிய வட்டத்தில் ‘ படைப்பாளி கமல் ’ இல்லாமல் இருப்பதை
‘ தெளிந்த ’ மனம் படைத்தவர்கள் மட்டுமே உணர முடியும் .
Vande Materam
‘வேட்டை’ எனபது மன்னர் ஆட்சியின் குறியீடு.
மிருகங்களை வேட்டையாடுவது மன்னாராட்சி பொழுது போக்கு. ‘வேட்டையை’பற்றி... ஹேராமில் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
‘வேட்டைக்கு’ வர விரும்பவில்லை என்பதை...
‘ பின்னோக்கி நகர்ந்து... உடல் மொழியால்’ உணர்த்துகிறார் நடிகர் கமல்.
முதலில் சாகேத்ராம்-அபயங்கரை ‘ஷாட் கம்போசிஷேனில்’ நெருக்கமாக காண்பித்தவர்...
‘பின் வாங்கலுக்குப்பிறகு’....
‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போசிஷேன் ’ [Size Of The Shot ] மெத்தடை உபயோகித்து...
சாகேத்ராம்---------அபயங்கர் இடைவெளியை அதிகப்படுத்தி காண்பித்திருப்பார்.
‘ சைஸ் ஆப் த ஷாட் ’ என்பது சினிமா மொழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கதாபாத்திரம் எந்த அளவு கம்போஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கதைச்சூழலை பொறுத்து...இயக்குனர் தீர்மானிக்கும் விஷயம்.
ஹேராமில், ‘ படைப்பாளி கமல் ’.... ‘ சைஸ் ஆப் த ஷாட்’ மூலம் சொல்லும் விஷயம்...
‘ வன்முறையிலிருந்து விலகி நிற்க விரும்புகிறான் சாகேத்ராம் ’
ஏனென்றால் ஹேராமில்...இந்த காட்சிக்கு பிறகு... சாகேத்ராம் ‘சுயநலத்துடன்’ எந்த இடத்திலும் வன்முறையில் இறங்கவில்லை.
*********************************************************************************
‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போஷிசனில் ’ என்னை மிகவும் கவர்ந்த
‘ இன்னொரு லட்டை’ ...
தின்ன ஆசை இருந்தால்.... தொடருங்கள்.
தமிழ் திரையுலகின் மாமேதைகளுள் ஒருவரான மகேந்திரனின்
‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் அக்காட்சி இருக்கிறது.
“ என்னை அநாதையாக்கி விட்டுப்போகாதே ” என கெஞ்சி நிற்பார் ரஜினி.
இங்கே ரஜினியை பெரிதாக ‘ஷாட் கம்போசிஷேன்’ செய்திருப்பார் மகேந்திரன்.
ரஜினியை விலக்கி ஷோபா செல்லும்போது...ஷோபாவை பெரிதாக்கி...ரஜினியை சிறிதாக்கி ஷாட் கம்போசிஷேசன் செய்திருப்பார்.
ஷோபா மனம் மாறி... ‘ பாசமலர்கள்’ ஐக்கியமான பிறகு...
நார்மல் கம்போசிஷேஷன் செய்திருப்பார் மகேந்திரன்.
தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில் ‘முள்ளும் மலரும்’ ஒன்று என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
**********************************************************************************
இனி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
“ ஐயா...எங்களுக்கு இரண்டு உண்மை தெரிஞ்சாகணும் ”
“ அடடே..மறந்து விட்டேன்.
ஒன்று...கமல் ஜாதி,மத வெறியன்....
என இக்காட்சியை வைத்து ‘ கெக்கேபிக்கியவர்கள் ’....
நடிகர் கமல்...இயக்குனர் கமல்...படைப்பாளி கமல் என பிரித்துப்பார்க்க பழகாதவர்கள்....என்ற உண்மை.
இரண்டு... ‘அலைந்து திரிபவனுக்கு’....
‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.
ஹேராமின் இக்காட்சியை... காணொளியில் காண்க....
முள்ளும் மலரும் காணொளி காண...

Of Kaushik, son of Vishwamitra...
Of Kaushik, thrice blessed...
Of Kaushik, the high priest
of Yajur Veda...
Of Kaushik,
l bear my lineage.
அபயங்கர் அபிவாதயே சொல்லும் போது...
‘ செமி சர்க்கிள் ட்ராலி ஷாட்டில் ’படம் பிடித்து காட்டியுள்ளார்
‘ இயக்குனர் ’ கமல்.
‘ வந்திருப்பவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள் ’ என அடையாளப்படுத்தி உள்ளார்.
ஏன் ? அரை வட்டம் ஷாட் போட்டு நிறுத்தினார்?...
அந்த வட்டத்தில் ‘ இது வரை ’ சாகேத்ராமும் இல்லை.
‘ படைப்பாளி ’ கமலும் இல்லை.
இருந்திருந்தால்... ‘ முழு வட்டம் ஷாட் ’ போட்டு முடித்திருப்பார்
‘ இயக்குனர் ’ கமல்.
இந்த குறுகிய வட்டத்தில் ‘ படைப்பாளி கமல் ’ இல்லாமல் இருப்பதை
‘ தெளிந்த ’ மனம் படைத்தவர்கள் மட்டுமே உணர முடியும் .
Vande Materam
(Salutation to the Mother Goddess)
Would you like
to hunt with us?
‘வேட்டை’ எனபது மன்னர் ஆட்சியின் குறியீடு.
மிருகங்களை வேட்டையாடுவது மன்னாராட்சி பொழுது போக்கு. ‘வேட்டையை’பற்றி... ஹேராமில் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
‘வேட்டைக்கு’ வர விரும்பவில்லை என்பதை...
‘ பின்னோக்கி நகர்ந்து... உடல் மொழியால்’ உணர்த்துகிறார் நடிகர் கமல்.
முதலில் சாகேத்ராம்-அபயங்கரை ‘ஷாட் கம்போசிஷேனில்’ நெருக்கமாக காண்பித்தவர்...
‘பின் வாங்கலுக்குப்பிறகு’....
‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போசிஷேன் ’ [Size Of The Shot ] மெத்தடை உபயோகித்து...
சாகேத்ராம்---------அபயங்கர் இடைவெளியை அதிகப்படுத்தி காண்பித்திருப்பார்.
‘ சைஸ் ஆப் த ஷாட் ’ என்பது சினிமா மொழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கதாபாத்திரம் எந்த அளவு கம்போஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கதைச்சூழலை பொறுத்து...இயக்குனர் தீர்மானிக்கும் விஷயம்.
ஹேராமில், ‘ படைப்பாளி கமல் ’.... ‘ சைஸ் ஆப் த ஷாட்’ மூலம் சொல்லும் விஷயம்...
‘ வன்முறையிலிருந்து விலகி நிற்க விரும்புகிறான் சாகேத்ராம் ’
ஏனென்றால் ஹேராமில்...இந்த காட்சிக்கு பிறகு... சாகேத்ராம் ‘சுயநலத்துடன்’ எந்த இடத்திலும் வன்முறையில் இறங்கவில்லை.
*********************************************************************************
‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போஷிசனில் ’ என்னை மிகவும் கவர்ந்த
‘ இன்னொரு லட்டை’ ...
தின்ன ஆசை இருந்தால்.... தொடருங்கள்.
தமிழ் திரையுலகின் மாமேதைகளுள் ஒருவரான மகேந்திரனின்
‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் அக்காட்சி இருக்கிறது.
“ என்னை அநாதையாக்கி விட்டுப்போகாதே ” என கெஞ்சி நிற்பார் ரஜினி.
இங்கே ரஜினியை பெரிதாக ‘ஷாட் கம்போசிஷேன்’ செய்திருப்பார் மகேந்திரன்.
ரஜினியை விலக்கி ஷோபா செல்லும்போது...ஷோபாவை பெரிதாக்கி...ரஜினியை சிறிதாக்கி ஷாட் கம்போசிஷேசன் செய்திருப்பார்.
ஷோபா மனம் மாறி... ‘ பாசமலர்கள்’ ஐக்கியமான பிறகு...
நார்மல் கம்போசிஷேஷன் செய்திருப்பார் மகேந்திரன்.
தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில் ‘முள்ளும் மலரும்’ ஒன்று என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
**********************************************************************************
இனி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
“ ஐயா...எங்களுக்கு இரண்டு உண்மை தெரிஞ்சாகணும் ”
“ அடடே..மறந்து விட்டேன்.
ஒன்று...கமல் ஜாதி,மத வெறியன்....
என இக்காட்சியை வைத்து ‘ கெக்கேபிக்கியவர்கள் ’....
நடிகர் கமல்...இயக்குனர் கமல்...படைப்பாளி கமல் என பிரித்துப்பார்க்க பழகாதவர்கள்....என்ற உண்மை.
இரண்டு... ‘அலைந்து திரிபவனுக்கு’....
‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.
ஹேராமின் இக்காட்சியை... காணொளியில் காண்க....
அருமையான விவரணை. அசத்தல்கள் தொடரட்டும்
ReplyDeleteஇந்தப்பதிவுக்கு பின்னூட்டம் வராமலே போனது சற்றுக்கவலையளித்தது. ‘சைஸ் ஆப் த ஷாட்’ போன்ற பதங்களை இனி விவரிக்கலாமா? தவிற்கலாமா? என்ற கேள்வி இரண்டு நாளாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.
Deleteஉங்களது பின்னூட்டம்...
‘நிமிர்ந்து நில்...
தொடர்ந்து செல்...
தோல்வி கிடையாது தம்பி...’
என்ற பாடலுக்கு கனோட்டேஷன் ஆகி விட்டது.
நன்றி நண்பரே!
இம்புட்டு நுணுக்கம் இருக்கா....அடேங்கப்பா தெரியாத விடயம் தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஅசத்தறீங்கன்னே! பின்னூட்டம் வருதோ இல்லையோ நீங்க பாட்டுக்கு எழுதுங்க.
ReplyDeleteநன்றி கோபி...
Deleteதாங்கள் கருந்தேள் பதிவில் ராஜேஷுடன் நடத்துய ஆரோக்கிய விவாதத்தை மிகவும் ரசித்தேன்.
எதிர் வாதம் செய்த ராஜேஷ் அவர் பாணியிலிருந்து விலகி ‘முற்றிலும் புதிய பாணியில்’ விவாதித்திருந்தது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
அந்த விவாதம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
படிசீங்களா! ரொம்ப சந்தோஷம். விவாதங்கள் சர்ச்சையாக இருக்கலாம், சண்டையாக இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். அப்போதான் புது விஷயங்கள் வெளிய வரும்.
Deleteநான் ஒரு பெரிய நடிகரோட 'புகழ்' பாடும் வலைதளத்துல, எதிர்கருத்துக்களை எவ்வளவு தான் நாகரீகமா சொன்னாலும், அந்த வலைதளத்தை நடத்துரவருக்கும், அந்த நடிகரோட 'பக்தர்களுக்கும்' 'ஏனோ' கோபம் வந்து ரொம்ப கேவலமா திட்டிபுடறாங்க. ரொம்பவே வருத்தமா போயிடுது. அதனால நான் அதுல பின்னூட்டம் போடறதை சுத்தமா நிறுத்திட்டேன்.
அசத்திடிங்க.... நல்ல பதிவு. நடிகர் , மனிதர் என்பதி முடிச்சு போடுவது தவறு.. நானும் முன்னைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டு உள்ளேன். எனது தளத்துக்கும் வாருங்கள். எனது தளத்தில் பியானிஸ்ட் ஒரு கண்ணோட்டம்.
ReplyDeletehttp://varikudhirai.blogspot.com/2012/09/the-pianist-film-review-in-tamil.html
வருகைக்கு நன்றி நண்பரே...
Deleteகமல் என்ற தனி மனிதனை நான் இங்கு கொண்டு வரவேயில்லை.ஹேராமில்... கமல் என்ற நடிகனையும்,கமல் என்ற எழுத்தாளரையும்[ கதை,திரைக்கதை,வசனம்],கமல் என்ற இயக்குனரை மட்டுமே நமக்கு விமர்சிக்க உரிமையும்,கடப்பாடும் உள்ளது.
இந்த எல்லைக்கோட்டுக்குள் மட்டுமே இருந்து கொண்டு விமர்சிக்கிறேன்.
இந்த எல்லைக்குள் இருந்து ‘எதிர் விமர்சனம்’ செய்ய வந்தால் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.
.. ‘அலைந்து திரிபவனுக்கு’....
ReplyDelete‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.
>>>
ஒத்துக்கறேன் நண்பா...
நண்பா...இப்படி பப்ளிக்கா ஒத்துக்கிறதுக்கு வீரம் வேண்டும்.
Deleteவீரத்திருமகனை புரோபைல் படமா வைத்திருக்கிற உன்னிடம்...வீரத்துக்கு பஞ்சமா இருக்கும்!.
"யாரேன தெரிகிறத"
ReplyDeletehttp://multistarwilu.blogspot.in/
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த முள்ளும் மலர் காட்சியை ரசித்து பலமுறை பார்த்திருக்கிறேன். உண்மை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில் முள்ளும் மலரும் ஒன்று.
ReplyDeleteA nice analysing from you
ReplyDelete