Aug 28, 2012

புரட்சித்தலைவர்...திரையிட்ட நடிகர் திலகம் படம்.

நண்பர்களே...
கடந்த சில நாட்கள் நடந்த சண்டை... ‘தரம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்டது.
நடப்பதை மிகுந்த கவலையுடன் நேரிலும்...போனிலும்...பின்னூட்டத்திலும் தெரிவித்தார்கள் நண்பர்கள்.
குறிப்பாக பதிவுலக நண்பர்கள் கீதப்பிரியன்,பேபி ஆனந்தன்,ராஜ்,கிஷோகர் ஆகியோர்.
நடந்த அனைத்திற்கும் நானே பொறுப்பு ஏற்றுக்கொண்டு காயப்பட்ட அனைவரிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அடிப்படையில்...நான் ஒரு மிருகம்.
எனது பள்ளி,கல்லூரி நாட்களில் நான் செய்த அராஜகம் அளவில்லாதது.
நானும் எனது நண்பர்களும்... ‘நோட்டரியஸ்’ என்றே அறியப்பட்டவர்கள்.
 ‘திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ’ இறுதி ஆண்டில்... ‘மாணவர் விழாவில்’ நானும்...எனது எட்டு நண்பர்களும் நடத்திய கலாட்டாவில்...
டிஸ்மிஸ் செய்யப்பட்டோம்.

ஏற்க்கெனவே... இரண்டாம் வருடத்தில் செய்த  கலாட்டாவினால்... ஹாஸ்டலை விட்டு தூக்கியெறியப்பட்டிருந்தோம்.
எனவே திருச்செந்தூரில்... வீடு எடுத்து தங்கி இருந்தோம்.
எங்களோடு தங்கி இருந்தவர் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர்.
அந்த தைரியத்தில் நாங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல....
தினமும் புட்டி,குட்டி,வம்புச்சண்டையோடுதான்  வாழ்ந்தோம்.

[எனது  'A' ONE வாழ்க்கையை பதிவு போடவா?...நூறு பதிவுகளைத்தாண்டும்.]

கல்லூரி நாளில் நண்பர்களை வைத்து  ‘பிராக்ஸி’ கொடுக்க வைத்து...
 அதே நேரத்தில் நண்பனுக்காக... பங்காளிச்சண்டையில்...
ஒருவனை வெட்டி இருக்கிறேன்.

வழக்கில் சேர்க்கப்பட்டு... நானும் எனது நண்பனும் கல்லூரி
 ‘வருகைப்பதிவேட்டை’  சாட்சியாக வைத்து வெளியே வந்து விட்டோம்.
எனது நண்பன் இப்போது ஹைகோர்ட் பிரபல வக்கீல்.
அவனை ஏற்கெனவே எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
[என் ஒருவனைத்தவிற டிஸ்மிஸ் செய்யப்பட்ட எட்டு பேருமே  கிரிமினல் வக்கீலாகி விட்டர்கள்.]

சுருக்கமாக சொல்கிறேன்...கற்பழிப்பு என்ற ஒரு குற்றத்தை தவிர மீதி அனைத்துமே செய்து இருக்கிறேன்.
அவை அனைத்துமே கேவலமான மிருக வாழ்க்கை.
அதிலிருந்து தப்பிக்க தினமும் முயற்சி செய்கிறேன்.

திரைப்படத்துறைக்கு வந்த பிறகே மனிதனாக வாழ ஆரம்பித்தேன்.
இருந்தும் அந்த மிருகம் அவ்வப்போது உயிர் பெற்று ஆட்டம் போடுகிறது.

உலகசினிமாவை நேசித்தாலும்...தமிழ் சினிமாவை உயிராக சுவாசிப்பவன்.
அதை பழிப்பவர்களை எதிரியாக பார்க்கத்துவங்கி விடுகிறேன்.

எனது பதிவுலக நண்பர்களுக்கு...ஒரே ஒரு வார்த்தை.
நகைச்சுவையாக என்னை எவ்வளவு வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம்.
ரசித்து சிரித்து விட்டு போய் விடுவேன்.
இப்போதும் சொல்கிறேன்...  ‘கொழந்தை இந்தக்கலையில் மாஸ்டர்’.

ஆனால் என்னை சீரியஸாக்க, ஒரு வார்த்தை போதும்....
அதன் பிறகு நான் மிருகம்தான்.

கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்ட நடிகர் திலகம் நக்கல்கள் அனைத்தும் சென்னை மயிலாப்பூர் ஹ்யூமர் கிளப்பில் சொல்லப்பட்டவை...
[நான் அதில் மெம்பராக இருந்தவன்.
அந்த மேடையில் தமிழ் சினிமாவை நக்கலாக பேசியதற்காக...
‘பிராம்மண வெறியன்’ எஸ்.வி.சேகரோடு நேரடியாகவே சண்டை போட்டிருக்கிறேன்.]
முதலாவதை... கமலா தியேட்டர் அதிபரே சொன்னது.
இரண்டாவதை... சொன்னவர் நடிகர் ராஜேஷ்.

நடிகர்திலகமும்...மக்கள் திலகமும் இருவருமே நண்பர்கள்தான்.
ஆனால் தொழில் போட்டியில் இருவருமே எதிரிகளாக நடந்து கொள்வார்கள்.
பிரச்சனை என்று வந்து விட்டால் இருவருமே விட்டுக்கொடுப்பதில் போட்டி போடுவார்கள்.
அதனால் இருவருமே இறுதி வரை நண்பர்களாக வாழ்ந்தார்கள்.

பர்சனல் மேட்டரில் சிவாஜி... பிரபுவை துப்பாக்கியால் சுட்டதாக...
 ஒரு செவி வழி செய்தி ஒன்று உண்டு.
அப்போது புரட்சித்தலைவர்தான் முதல்வர்.

 ‘துப்பாக்கியை சிவாஜி துடைத்துக்கொண்டிருந்த போது...
 தவறுதலாக கை பட்டு... வெடித்து பிரபுவுக்கு காயம்...’
 என்று பத்திரிக்கை செய்தி வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..

எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?
  ‘தில்லானா மோகனாம்பாள்’
ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...

 “ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே 
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
 ‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும்  காட்ட விரும்புகிறேன்.”
என்றார். 

அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.

11 comments:

  1. கலக்கல் பதிவுய்யா...

    ReplyDelete
  2. சண்டை தீர்ந்ததில் மகிழ்ச்சி!
    //அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//
    இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன்!

    ReplyDelete
  3. நல்ல படங்களை நேசிக்கும் நீங்கள் மென்மையானவராக தான் இருக்க இயலும். மேல் குறிப்பிட்ட பதிவில் நீங்கள் மிருகமாக இருந்ததற்க்கான வருத்தத்தை விட, பெருமையே தெரிகிறது. மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே..

    ReplyDelete
  4. //அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//

    எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  5. //அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.//

    யெஸ் ... யெஸ். ஹீ இஸ் பேக்.

    ReplyDelete
  6. எல்லா பதிவுகளயும் அழித்து விட்டீர்கள். நல்லது,
    நீங்க இந்த சண்டை எல்லாம் விட்டு ஒழிச்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம்..

    ReplyDelete
  7. ஆவலுடன் உங்களை எதிர்பார்க்கிறோம் அண்ணா...
    அருமையான ஒரு உலக சினிமா பற்றி எழுதுங்கள்..
    படிக்க ஆவலாக இருக்கிறோம்..
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
  8. உங்க ஏ ஒன் பத்தி தெரிஞ்சுக்க ஆசை.....

    ReplyDelete
  9. ஒரு மாறுபட்ட பதிவு.. ஆனா அவ்ளோ கோபகாரரா நீங்க.. கொழந்தை மாதிரி இருந்தீங்களே..

    ReplyDelete
  10. ஏதோ சின்னப்பயல் எனது பேச்சையும் சபையில் எற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!

    ///அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்///

    இதோ ! அதே பழைய உற்சாகம் திரும்பிடிச்சில்ல, இந்த சினிமா ரசிகனை தான் நான் நேசிக்கிறேன். அவனிடமிருந்து மட்டுமே ஆரோக்கியமான பதிவுகள் வரும். கோபத்திலும், எரிச்சலிலும் நல்ல படைப்புக்கள் வெளி வரமுடியாது. மிக்க நன்றி ஐயா! மோதல் முடிந்து காதலுடன் பதிவுகளை தாருங்கள்.

    அதிலும் குறிப்பாக அந்த "ஏ" வன் அனுபவங்களை பதிவாக இட்டால் வெள்ளிவிழா காணும். காரணம் அடுத்தவன் சமாச்சாரம் அறிவதில் தமிழனுக்கு உள்ள ஆசையின் மேல் உள்ள அசையாத நம்பிக்கையில் சொல்கிறேன். ஹி..ஹி..ஹி...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.