நண்பர்களே!
ஹேராம் தொடரை உலகசினிமாக்களின் பதிவுகளோடு இணைத்து எழுத திட்டமிட்டுள்ளேன்.
பின்னூட்டங்களில் உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.
ராம்-அபர்னா காதல்....காமமாக கமழ்கையில்...நமக்கு அற்புதமான கவிதை கிடைக்கிறது.
[திரைக்கதையிலிருந்து]
அபர்னா கூறும் வங்கமொழிப்பாடல்,பிரபல கவிஞர் ஜிப்னானந்த தாசின் கவிதை...
வானிலே வெண்ணிலா
கானகப்பாதையில் சிறுத்தையின்
உடல் வாசனை.
என் இதயம் புள்ளிமான் போல.
இந்த இரவின் அமைதியில்
நான் எந்த வழியில்
போய்க்கொண்டிருக்கிறேன்.
என் உடலின் மீது
வெள்ளி இலைகளின் நிழல்.
புள்ளிமானை எங்கும் காணோம்.
நான் போகும் தூரமெல்லாம்
தங்கமான் - பயிரை,அறுவடை செய்யும்
அரிவாள் போல அரை நிலா.
அந்த நிலா,மெல்ல மெல்ல,
நூற்றுக்கணக்கான பெண்மான்களின்
விழிகளின் உறக்க இருளுக்குள்
அமிழ்ந்து கொண்டிருக்கிறது.
[கவிதை... கலவியில் முடிகிறது]
இப்பாடலின் ஆரம்பத்தில் பியானோவை...ராம் ஒரு கையாலும்...அபர்னா ஒரு கையாலும் இசைப்பது போல் வடிவமைத்திருப்பதை பாராட்ட நான் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
நண்பர்கள்... எங்கிருந்து சுட்டது என்று தேடிக்கொண்டிருக்கட்டும்.
கலவி முடிந்ததும்....அபர்னா கீழுதட்டை கடித்தவாறு, “கராச்சியில என்ன சாப்டீங்க”என்று கேட்பது...100% பூர்ண திருப்தி சம்போகம் என்பதன் குறியீடு.
அம்ஜத்தின் மனைவி வாங்கிக்கொடுத்த தாலியை கட்டும் ராம்...அபர்னாவின் விருப்பப்படி பேனா ரெட் இங்கால் திலகமிடுகிறான்.
இந்நிகழ்வுகளும் பச்சை வர்ணமிட்ட பிரேமிற்க்குள்... ஷாட் கம்போசிஷேசன் பண்ணீயிருக்கிறார் இயக்குனர் கமல்.
காதல் வயப்பட்டிருக்கும் போது ஆபத்தை உணராமல் இருப்பது வீரபாண்டிய கட்டபொம்மனிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
“இன்பம் பொங்கும்... வெண்ணிலா வீசுதே...”
என்ற பாடலில் வெள்ளையத்தேவனும் [ஜெமினி கணேசன்],
வெள்ளையம்மாளும் [பத்மினி] காதல் மயக்கத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு வரும்.
ஆபத்தை அறியாது காதலர்கள் இன்புற்றிருப்பதை கண்ட...
வீரபாண்டிய கட்ட பொம்மன் [சிவாஜி கணேசன்] உடை வாளால் பாம்பை விரட்டி விடுவார்.
“காதலிப்பதில் தவறில்லை...பாம்பு வருவது கூட தெரியாமல் காதலில் மெய் மறந்திருப்பது தவறு” என இடித்துரைப்பார்.
தளபதி சூழ்நிலையை கவனிக்க தவறிய குற்றத்தை... சிவாஜியின் டயலாக் டெலிவரி& மாடுலேஷனில் குறியீடாக்கப்பட்டிருக்கும்.
ஹேராமில்... அபர்னா சூழ்நிலையை எடுத்துச்சொல்லி எச்சரித்தும் ராம் அசட்டை செய்கிறான்.
ஆபத்தை தடுத்து காப்பாற்ற வேண்டிய இடத்தில் கட்டபொம்மன் இல்லை.....வெள்ளைக்காரன் இருக்கிறான்.
இதனால் வருகின்ற பாதிப்பை அடுத்தப்பதிவில் காண்போம்.
இக்காட்சியின் காணொளி காண்க....
********************************************************************************** இந்தப்படம் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும். 2010ல் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்... மரியோ வர்காஸ் லோசா [Mario Vargas Llosa]. இவரது எழுத்துக்களில் பாலியல் சற்று தூக்கலாகவே இருக்குமாம். அவரது மாஸ்டர் பீஸ் படைப்புகளில் ஒன்றான இக்கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் Francisco Jose Lombardi. பெரு நாட்டு ராணுவ வீரனான பேஞ்சோ கடைந்தெடுத்த ராமன். மனைவி கொடுக்கும் 'பில்டர் காபியை' தவிர... வேறு ஒன்றும் குடித்திராத பரமப்பசு. ராணுவ உயர் அதிகாரிகள் இவன் தலைமையில் ஒரு ரகசிய ஆப்ரேஷனை நடத்த திட்டமிடுகின்றனர். திட்டம் இதுதான். அமேசான் காடுகளில் பணி புரியும் பெரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு... பாலியல் தொழிலாளிகளை சப்ளை செய்வது. ஏனென்றால் இந்த காஞ்ச மாடுகள்... சொந்த நாட்டு கம்பம்புல்லை மேய்வதை தடுப்பதற்க்காக. அதிகார வர்க்கம்...தாங்கள் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்காக...எந்த அளவுக்கும் கீழே இறங்கும் என்பதுதான் இப்படத்தின் செண்டர் பாய்ண்ட். பேஞ்சோ வேண்டாவெறுப்பாக இப்பொறுப்பை ஏற்கிறான். உத்தம மனைவியோடு ஸ்தலத்துக்கு வந்து சேருகிறான். லோக்கல் பாலியல் விடுதியிலுள்ள பெண்ணின் துணையோடு, பாலியல் பெண்களை தேர்வு செய்கிறான். பெரு நாட்டு தேசியக்கொடியின் வர்ணத்தில் யூனிபார்ம் அணிவிக்கிறான். பாலியல் தொழிலாளிகளிலேயே, ஸ்பெஷல் அட்ராக்ஷன்...கொலம்பியானா என்றழைக்கப்படும் ஓல்கா. பிப்டி கேஜி... வெடி மருந்து. அந்த ஊர் ஆண்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று...கொலம்பியானாவுடன் படுத்தவர்கள். இரண்டு...படுக்க துடிப்பவர்கள். கடமை வீரன் கந்தசாமியை... கஷ்டப்பட்டு வீழ்த்துகிறாள் கொலம்பியானா. இவர்களது படுக்கையறை காட்சிகள்....வாத்ஸாயனர் ஸ்பெஷல் ஷோக்கள். கொலம்பியானாவிடமிருந்து... சிகரட்டையும், துரோக உறுத்தலிடமிருந்து...மதுவையும் கைப்பற்றுகிறான். குடி...பீடி...லேடி மூன்றையும் எவ்வளவு தீவிரமாக எதிர்த்தானோ... அதே தீவிரத்துடன்... நேசிக்க தொடங்கி விடுகிறான். அதே சமயத்தில்,வந்த வேலையையும் சிறப்பாக செய்து திட்ட அறிக்கையை மேலிடத்துக்கு சமர்ப்பிக்கிறான். மேலிடம் மகிழ்ந்து, திட்ட விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்குகிறது. விளைவு...மேலும் பாலியல் தொழிலாளிகள் சேர்க்கப்பட்டு... அதிக எண்ணிக்கையில்... ராணுவ வீரர்கள் குஷிப்படுத்தப்படுகின்றனர். திரைக்கதையின் திருப்பமாக... லோக்கல் எப்.எம். ரேடியோ ஜாக்கி வருகிறான். கொலம்பியானாவுடன் நெருக்கமாக இருப்பதை படம் பிடித்து பிளாக்மெயில் செய்கிறான். பேஞ்சோ அவனை அவமானப்படுத்தி துரத்துகிறான். விஷயத்தை ரேடியோவில்...அலற விடுகிறான். கர்ப்பிணியான மனைவி கோபித்து போய் விடுகிறாள். லோக்கல் சோமாறிகளும்... பேஞ்சோவுக்கு எதிராக திரள்கிறார்கள். மனநெருக்கடி தாளாமல்..வேலையை ராஜினாமா செய்கிறான். “எதிரிகளிடம் சரண்டர் ஆவது... ராணுவ வீரனுக்கு அழகா? போராடி வெல்” என மேலிடம் கட்டளையிடுகிறது. போனஸாக திட்ட விரிவாக்கத்துக்கு அதிக நிதியும் வந்து சேருகிறது. பேஞ்சோவும் சுறுசுறுப்பாக,திட்ட வேலையை விரிவாக்குகிறான். கொலம்பியானாவும்...ஒல்காவாக மாறி...காதல்புறாவாகிறாள். ரேடியோ ஜாக்கியை வரவழைத்து ‘முக்கிய பேப்பர்கள்’ அடங்கிய கவரை கொடுக்கிறான். “லஞ்சமா...நோ...யாருன்னு நெனச்ச என்னை...” “மாசா மாசம் இதே மாதிரி கவர் கிடக்கும்.” “ ஹேய்..இந்த டீலிங் பிடிச்சிருக்கு” காசுக்கு சோரம் போகும் மீடியாவை...ஜாக்கியின் மூலம் குறியீடாக்கப்பட்டுள்ளது. நாய் விற்ற காசுக்கு... குரைத்தான் ஜாக்கி. “ வணக்கம் நேயர்களே... கேப்டன் பேஞ்சோவை பற்றி நானே தவறாக நினைத்து விட்டேன். யோசித்து பார்த்தால், அவரது பணி எத்தனை மகத்தானது. நம் உள்ளூர் பெண்கள் கற்போடு பாதுகாப்பாக இருக்கிறார்கள். நமது ராணுவ வீரர்களும் மனநெருக்கடியில்லாமல் பாதுகாப்பு பணியை செவ்வனே செய்கிறார்கள். பாவப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு... ராணுவ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எனவே பேஞ்சோவின் சேவை....நாட்டுக்கு தேவை...” ஜாக்கியின் ரேடியோ உரை நிகழும் போது... லோக்கல் காவாலிகள்...ராணுவத்திற்கு சேவை செய்யும் பாலியல் தொழிலாளிகளை...தங்களுக்கு கிடைக்காத காட்டத்தில்...வெறி கொண்டு... அவர்களை தாக்கி கற்பழிக்க முற்படுகின்றனர். கலவரத்தில் கொலம்பியானா... துப்பாக்கிக்கு பலியாகிறாள். கொலம்பியானாவை ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்கிறான் பேஞ்சோ. கொலம்பியானாவுக்கு ராணுவ அந்தஸ்தளித்த பேஞ்சோவின் உயரம்... யாரும் தொட முடியாத சிகரம். இறுதிச்சடங்கு செய்ய வந்த பழைய பஞ்சாங்க பாதிரியார் சுருக்கமாகவும்...வெறுப்பாகவும் இறுதி உரை நிகழ்த்தி போகிறார். மதங்கள் மாற்றத்தை விரும்பாது என்பதன் குறியீடாக எனக்குப்பட்டது. கொலம்பியானாவை ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்து... ரகசிய திட்டத்தை ஊரறிய செய்ததற்கு தண்டனை வழங்குகிறது மேலிடம். தண்ணியில்லா காட்டுக்கு...நிஜமாகவே வறண்ட பாலைவனப்பிரதேசத்திற்க்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறான்.[உலகமெல்லாம் இதே மெத்தெட்தான் போலும்] வேலை...முதியோர் கல்வி திட்ட ஆசிரியப்பணி. அன்று...பாலியல் கல்வி. இன்று... முதியோர் கல்வி. மனைவியும் வந்து சேர்ந்து விட்டாள்....குழந்தையோடு. இந்த இடத்தில் படம் முடிந்திருந்தால் சுபம். ஆனால் லாஸ்ட் ஷாட்... இறுகிய முகத்துடன்... பேஞ்சோவின் குளோசப்... உதட்டில் சிகரெட்...[கொலம்பியானாவிடமிருந்து வந்த பழக்கம்] கையில் லைட்டர்....[கொலம்பியானாவுக்கு சொந்தமானது] இப்படம் பார்ப்பவர்கள்... அவரவர் கொலம்பியானாக்களை தேடுவர். டிரைலர் காண...

திலகத்திற்கு குங்குமம் வைப்பதற்கு பதில் ரெட் இங்க் பேனாவால் பொட்டு வைப்பதை குறிப்பிட்டீர்கள்.
ReplyDeleteஅதேபோல விக்ரம் படத்தில் தன் முதல் காதலி திலகத்திற்கு பதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பொட்டு வைக்கப்பட்டதாக ஸாட் இருக்கும்.
சலங்கை ஒலியில் திலகத்தை மழையில் நனைந்து விடாமல் தடுக்கும் காட்சி இப்படி
இந்த மாதிரி காட்சிகள் பெண்களின் விருப்பு வெருப்புக்காகவோ அல்லது மூட நம்பிக்கை எதிர்ப்பு குறியீடாகவோ எடுத்தாள்வது கமலின் ஸ்பெசாலிடி. உங்கள் கருத்து ?
மிகச்சரியாகச்சொல்லி உள்ளீர்கள் நண்பரே!
Deleteரெட் இங்க் குறியீட்டிற்கு என் நண்பர் வேறொரு கோணத்தில் பொருள் சொன்னார்.
ரெட் இங்கால் திலகமிடும் போது ராணி முகர்ஜியின் முகம் தாமரை போல் மலரும்.
இந்த ரியாக்ஷன்... அவள் சிவப்பு சிந்தனை கொண்டவள்...என்பதன் குறியீடாகப்படுகிறது என்றார்.
இந்தப்பார்வை எனக்கும் உடன்படத்தோன்றுகிறது.
ஹேராம் பதிவை தனியாக பதிவிடுமாறு வேண்டுகிறேன்.
ReplyDelete