Jul 10, 2012

A Friend Of Mine\ 2011 [Estonia] நட்பு நல்லது...

கோவை ஐரோப்பிய திருவிழாவின் முதல் படமே முத்தாக அமைந்து விட்டது.
இனி வருகின்ற படங்களையும் பார்த்து... என் சொத்தில் பத்து படங்களை சேர்க்க வேண்டும்.

நமது காலத்தின் மூன்று தலைமுறைகள தெரிந்து கொள்ளும் நல் வாய்ப்பை தருகிறது...எ ப்ரண்ட் ஆப் மைன்.
படத்தின் இயக்குனர் மார்ட் கிவாஸ்திக்கை [Mart Kivastik]...
‘எஸ்தோனியாவின் பாலாஜி சக்திவேல்’ எனப்புகழலாம்.
அதற்கான தகுதி இப்படத்தில் இருக்கிறது.

முதல் தலைமுறை..மேற்றி[Mati] ‘பில்டர் காபி’ கணவன்.
நூலகத்தில் வேலை.
வேலை முடிஞ்ச உடனே வீட்டு  ‘ஸ்ரீ தேவியை’ தேடி ஒடுற பார்ட்டி.
நூலகத்துல...ரோட்டுல...அஞ்சலி,ஹன்சிகா,காஜல்,அட... அனுஷ்காவே வந்தாலும் கண்டுக்காம போற ஜாதி.
 படுத்த படுக்கை மனைவியிடம்... அபரிமிதக்காதல் வைத்திருக்கும்...
 70 வயது மேற்றியிடம், நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
திரையில் முகம் காட்டப்படாத மணிப்புறாவுக்கு, மேற்றி புத்தகம் படித்து காட்டுவதும்...மணிப்புறாவின் தளர்ந்த கரங்கள் கணவனை தடவி கொடுப்பதும்
முதுமை காட்டிய இளமை திரைக்கவிதை.

மணிப்புறா மடிந்து போக....மதுவை நாடுகிறார்.
மதுவினால், நிம்மதி வருவதற்கு பதிலாக வாந்திதான் வருகிறது.
நிரந்தர நிம்மதி தேட, ஒரு பாலத்திலிருந்து ஜம்ப்...
ஆஸ்பத்திரி பெட்டில் லேண்ட்...
கழுத்தை சுற்றி, நெக் பிரேஸ்....
சில..பல..விலா எலும்புகள் தாறுமாறாக இடம் மாறியதால், விண்வெளி வீரன்  கவச உடை போல்... பேண்டேஜ் சுற்றி...பெட்டில் படுக்கப்போட்டு விடுகிறார்கள்.
மகளும்,பேரனும் பார்க்க வருகிறார்கள்.
இரண்டாம் தலைமுறையை சேர்ந்த...மேற்றியின் மகள்,  ‘கத்ரீனா கைப்பை’ தூக்கி சாப்பிடும் அசாதாரண அழகுப்புயல்.
மூன்றாம் தலைமுறையின் பிரதிநிதியான... பேரனுக்கும் தாத்தாவுக்கும் உள்ள உறவு படு ஸ்டாராங்.
பேரனின் பெயர்   ‘மாமேதை’ கார்ல் மார்க்ஸின் முதல் பெயர்...கார்ல்.

மகளிடம்,மேற்றி... “ உடம்பு ரெடியானதும்...கரெக்டா குதிக்கப்போறேன்”.
மகள் சிரிக்கிறாள்.
 “ஏன் சிரிக்கறே? ”
“அதுக்கு ரொம்ப நாள் ஆகுமே!...பெட்டிலிருந்து குதிக்கவே... மாசக்கணக்காகும்”.

அப்போது மருத்துவமனை பணியாள், ‘முதல் தலைமுறை’ 63 வயசு இளைஞன் சாசா ஆரவாரமாக நுழைகிறான்.
 சாசாவை பற்றி... இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
கதை நாயகனே இவன்தான்.
சுஜாதாவின்  ‘மாமா விஜயம்’படித்திருக்கிறீர்களா?
அந்த மாமாதான் சாசா.
சாசாவின் தடாலடி அன்பு இந்த உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்.
தனது சாகசப்பொய்களால் சுற்றியிருப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி விடுவான்.
கிராமத்தான்.
மாற்றியின் நூலகத்துக்கு நிரந்தர வாடிக்கையாளன்.
டால்ஸ்டாய்,தஸ்தாவெஸ்கி,மாப்பஸானை கரைத்து குடிப்பவன்.
அவன் தலையில் இருக்கும் நிரந்தர தொப்பியின் நிறம்...சிவப்பு.

முதல் தலைமுறைக்கு மற்றுமொரு பிரதிநிதி...மாற்றியின் சக ஊழியை ரூத்..
22 ஆண்டுகளாக.. மாற்றியுடன் பணிபுரிந்து கொண்டே காதலிப்பவள்.
சாசாவின் மனிதநேயப்பண்புகளால் கவரப்பட்டு சாசாவையும் காதலிப்பவள்.

உத்தமப்பெண் மேற்றியின் மகளுக்கு,
 நேரெதிராக... கிளியை விட்டு விட்டு குரங்கோடு குடும்பம் நடத்தும் கணவன்,
சிக்னலில் பக்கத்து காரில் ஆபாச சைகை காட்டும் அனிமல்,
அப்பார்ட்மெண்ட் படிக்கட்டிலேயே போதை மருந்து மயக்கத்திலும்...லெஸ்பியன் உறவிலும் ஈடுபடும் பெண்கள்...
 இன்றைய தலைமுறையின் வாரிசுகள்.

அயோக்கிய கணவனை திரையில் காட்சிப்படுத்தாமல்...தனிமைத்தீயில் தவமிருக்கும் மேற்றி மகளின் வலியை ரசிகனுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.

மேற்றி,மருத்துவமனையிலிருந்து குணமாகி வீட்டுக்கு வரும் போது, படிக்கட்டில் வழியை மறித்தார் போல் மயங்கிக்கிடக்கும் லெஸ்பியன் பெண்கள்...
முதிய தலைமுறையை கவனிக்க தவறும் இன்றைய தலைமுறையின் குறியீடு.

மகள் வீட்டில் இருக்க மறுத்து....மீண்டும் வீட்டில் தனிமை துயரக்கடலில் நீந்துகிறார்.
துக்கத்திலிருந்து.... வெளியேற மறுக்கிறார்.
துக்கத்தை பன்மடங்குபெருக்கி...துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்கும்... பைரானிக் அன்ஹேப்பி சிச்சுவேசனிலேயே இருக்க விரும்புகிறார்.

 சாசாவின் கிராமத்துக்கு அழைத்துப்போய், பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி, மேற்றியை துன்பச்சகதியிலிருந்து வெளியேற்றுகிறார்கள் சாசாவும்,ரூத்தும்.

முதல் தலைமுறையின் நற்பண்புகளை...
 மூன்றாம் தலைமுறை கார்லுக்கு கடத்துவதே...
 மிச்சமிருக்கும் வாழ் நாள் லட்சியமாக.... மேற்றி உணர்வதே கிளைமாக்ஸ்.

 ‘பை சைக்கிள் தீப்’ இயக்குனர் விட்டோரியா டிஸிகாவின்  ‘உம்பர்ட்டோ டி’படத்தின்  ‘பியூச்சர் பாஸிட்டிவ்’ தத்துவம் இப்படத்திலும் இயங்குவதை காணலாம்.

கிராமத்தின் அழகு...
மேற்றி,சாசா,ரூத்....முதிய தலைமுறை மூவருமே,
இலக்கிய நூல்கள் படிப்பவர்களாக காட்டப்படுவது...படத்தின் நுண்ணிய குறியீடுகள்.
படம் முடிந்ததும் எழுந்த கைதட்டல்கள்...ஒட்டு மொத்த டீமுக்கு கிடைத்த பரிசு.

டிரைலர் காண...

5 comments:

  1. இது வரை எந்த எஸ்தோணியா படமும் பார்த்ததில்லை.., ரொம்ப நல்ல படம் போல தெரிகிறது.., திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் அனைத்து படங்களை பற்றியும் சிறு குறிப்பு எழுதவும்..,

    ReplyDelete
  2. விழாப்படங்கள் அனைத்திற்க்கும் பதிவு போட்டு விடுவதை பாக்கியமாக கருதுகிறேன்.இன்ஷா அல்லா...

    ReplyDelete
  3. விமர்சனமே இவ்வளவு சுவாரசியமா இருக்கும் போது படம் எம்புட்டு அழகா இருக்கும்...மிஸ் பண்ணிடேன்.அதுவும் நம்ம ஊருல நடக்குது...

    ReplyDelete
    Replies
    1. வெள்ளிக்கிழமை வரை திரையிடல் இருக்கிறது.
      கட்டாயம் வாருங்கள்...ஜீவா.

      Delete
  4. hii.. Nice Post
    கட்டாயம் பாருங்கள். மிகவும் அழகான படம்!.
    உங்கள் ப்ளாக் மிகவும் அருமை. நான் உங்கள் ரசிகன்.
    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.