Jul 1, 2012

The Flowers Of War-2011 [Chinese] போரில் பூத்த பூக்கள்.




மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான்.
ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது.

1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள்.
அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள்.
20,000 பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre
ஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம்.
இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்கதையாக்கி மிகப்பிரமாண்டமாக படத்தை உருவாக்கி உள்ளார் ஜாங் யிமூ.


சைனா திரைஉலக வரலாற்றில்... பெரும் பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
சிதிலமடைந்த நகரத்தை அப்படியே செட் போட்டு உருவாக்கியிருக்கிறார்.

ஜப்பானிய ராணுவம் துரத்த...தப்பித்து ஒடி வரும் சிறுமிகளிலிருந்து படம் துவங்குகிறது.
ஒடுகிற வழியெல்லாம் பிணங்கள்....பிணங்கள்....பிணங்கள்.
ஒடிப்போய் சர்ச்சில் அடைக்கலமாகின்றனர்.
இறந்தவர்களை ஒப்பனை செய்யும் கலையில் வல்லுனரான ஒரு அமெரிக்கனும் அடைக்கலமாகிறான்.
சிறுமிகள் அனைவருக்கும் ஒரு சிறுவனே பாதுகாவலன்.

விபச்சார விடுதியிலுள்ள பாலியல் தொழிலாளிகளும் அடைக்கலம் தேடி வருகின்றனர்.
சிறுவன் அனுமதிக்க மறுக்கிறான்.
எதிர்ப்பை புறக்கணித்து அத்து மீறி நுழைகின்றனர்.
சிறுமிகளும் அவர்களை உதாசீனப்படுத்துகின்றனர்.
அமெரிக்கன் சர்ச்சில் இருக்கின்ற ஒயினை குடித்து காசை சுருட்டிக்கொண்டு தப்பித்து ஒடுவதிலேயே குறியாக இருக்கிறான்.
எல்லோரும் சுயநலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்...அவர்கள் அனைவரையும் பொது நலம் என்ற மையப்புள்ளியில் இணைக்க ....ஜப்பான் ரானுவத்தினர் வருகிறார்கள்.
பாலியல் தொழிலாளிகள் மறைந்திருக்கும் பகுதியில் ராணுவத்தினர் நுழையாமல் தடுப்பதற்க்காக ....சிறுமிகள் அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி...தப்பித்து ஒடுகின்றனர்.
வெறி கொண்டு துரத்தும் ராணுவத்தினரை நிறுத்தி அமெரிக்கன்...பாதிரியாக தன்னை பிரகடனப்படுத்தி அனைவரையும் வெளியேறும்படி கட்டளையிடுகிறான்.
கட்டளை வந்த வாயில் ரத்தம் வர வைத்து விட்டு...சிறுமிகளை வேட்டையாட ஒநாய்கள் மீண்டும் துரத்த ஆரம்பிக்கின்றன.
இதைத்தான் இலங்கையில் இந்திய ராணுவம் செய்தது.
சிங்கள ராணுவமும் செய்தது.

ஸ்னைப்பர் ஷாட்டில் வல்லவனான ஒரு சீன ராணுவன் தனியாளாக மொத்த கூட்டத்தையும் அழித்து அமரனாகிறான்.
அதற்கு பின்னால் பசுத்தோல் போர்த்திய புலி தலைமையில் ஒரு ராணுவக்கூட்டம் வந்திறங்குகிறது.
சிறுமிகள் அனைவரும் ஜப்பான் உயர் அதிகாரிகள் முகாமில் வந்து பாட வேண்டும் என கட்டளையிட்டு செல்கிறான்.
சிறுமிகளின் பாட்டை ரசிப்பது நோக்கமல்ல...ருசிப்பதுதான் என்பதை உணர்ந்த பாலியல் தொழிலாளிகள் சிறுமிகளுக்குப்பதிலாக “நாங்கள் போகிறோம்” என சொக்கத்தங்கமாக உருமாறுகிறார்கள்.
அவர்களால் சிறுமிகளை காப்பாற்ற முடிந்ததா? என்பதையும்...
ஹிட்ச்ஹாக்கின் திரில்லர் பாணியில்...
இக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் ‘மோ’ என்ற பாலியல் தொழிலாளியாக நடித்துள்ள ‘நி நி’...
தால் படத்தில் வந்த ஐஸ்வர்யா ராயை தூக்கி சாப்பிட்டு விட்டார்....நடிப்பிலும்...அழகிலும்....
சுத்தமானா சைனா வெண்ணெயில் செய்த அழகு ஐஸ்க்ரீம்.

அமெரிக்கனாக வந்து அசத்திய கிறிஸ்டியன் பேல்
உட்பட...
எல்லோருமே அவர்கள் காரெக்டரில் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் அளவுக்கு மீறிய அழகியலோடு படமாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை ஒட்டத்தை சிதைக்கிறது.
யுத்தக்காட்சிகள் நம் மனதில் பாரம் ஏற்றாமல் ஒதுங்கிப்போகின்றன.
ஆரம்பத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏதோ பேஷன் பரேடுக்கு புறப்பட்டது போல வருகின்ற காட்சி...யுத்தக்காட்சியின் நம்பகத்தன்மையை குலைக்கின்றது.
லோ பட்ஜெட் படங்களில் அசத்தும் ஜாங் யீமூ பிரம்மாண்டத்தில் சற்று பிறண்டு விட்டார்.
சற்றுதான்...என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

டிரைலர் காண....


அடுத்தப்பதிவில் ஹேராமோடு வருகிறேன்.   

15 comments:

  1. சார்,
    கொஞ்ச நாளைக்கு முன்னாடி படத்தோட ப்ளாட் பிடிச்சு போய் படத்தை டவுன்லோட் பண்ணுனேன்..அதுவும் இல்லாம பேல் நடிச்ச படம் வேற...இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் வேற..உங்க வர்ணனை பிடிச்ச அப்புறம் உடனே படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது....ரொம்ப அழகான விமர்சனம்...!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்து விட்டு விக்கிப்பீடீயாவை படிப்பது நல்லது...நண்பரே.

      Delete
  2. நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  3. நிறைவான விமர்சனம்.. சில மாதங்களக்கு முன்பு anand-ன் பதிவில் இந்தப்படம் பற்றி அறிந்து கொண்டேன்.. பார்க்க வேண்டுமென யோசித்து பின் அதைப்பற்றி மறந்தே விட்டேன்.. தூங்கிக்கொண்டிருந்த எண்ணத்தை தட்டி எழுப்பிவிட்டீர்கள்!! நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!
      விரைவில் பார்த்து...ஒரு பதிவையும் போடுங்கள்.

      Delete
  4. உங்களின் அனைத்து விமர்சனமும் படித்து உள்ளேன் படித்து கொண்டே உள்ளேன் இது தான் நான் உங்களுக்கு போடும் முதல் கமெண்ட் ஆனால் இதற்கு முன்பு இருந்தே உங்களின் கட்டுரையை படித்து கொண்டே தான் உள்ளேன்....ஒரு முறை உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன் ஞாபகம் உள்ளதா அது நான் தான் அண்ணா....என்னால் உங்களை சில பிரச்சனையால் தொடர்பு கொள்ளஇயலவில்லை இனி உங்களை தொடர்வேன் நன்றி அண்ணா......

    ReplyDelete
    Replies
    1. மெசேஜ் ஞாபகமில்லை.ஸாரி...
      வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி தம்பி.

      Delete
  5. சார் ... கொஞ்ச நாள் கருத்திடாமைக்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலை காரணமாகவும் ஹேராம் பற்றிக் சொல்ல எதுவும் தெரியாததாலும் வாசித்துவிட்டு ஓடிவிட்டேன். இந்தப் படத்தையும் டவுன்லோட் செய்து வைக்கிறேன். நேரம் வரும்போது பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  6. ட்ரைலர் பயங்கரமா இருக்கு சார் ,
    கண்டிப்பா படம் பார்க்கறேன் .
    நன்றி

    ReplyDelete
  7. படத்தை பார்த்து விடுங்கள் சக்தி.

    ReplyDelete
  8. அட்டகாசம். இந்தப் படத்தை என்னைப் பார்க்க சொல்லி ஒரு நண்பர் Facebook ல் சொல்லியிருந்தார். பார்க்கப்போகிறேன். எனக்கு ஒரே ஒரு விஷயம் உங்ககிட்ட கேக்கனும்னு தோணிக்கிட்டே இருக்கு. என்னன்னா - எப்படி இத்தனை அருமையான உலகப்படங்களைப் பார்த்துவிட்டு, உங்களால் ஹே ராமைப் பாராட்ட முடிகிறது ? எனிவே, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் ... தப்பில்ல.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே...

      கமலை பற்றிய முன் மதிப்பீடுகளை களைந்து விட்டு ஹேராமை பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும்.

      Delete
    2. எனக்கு உண்மையில் கமலைப் பற்றி எந்த முன்மதிப்பீடும் கிடையாது. அவர் படங்களில் உள்ளது உள்ளபடியே பார்த்தாலும் அவரது எண்ணங்களை திணிப்பது நன்றாகவே தெரியும். முன்மதிப்பீடு இல்லாமல் பார்த்தாலும் அவரது எண்ணங்களின் தலையீடு வெள்ளிடைமலை என்பது என் கருத்து. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கும் இப்படி ஒரு அலசல் போடுங்கள். முடிந்தால் அங்கே சந்திப்போம்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.