ஹே ராம்... பிரிவுயூ ஷோ முடிந்ததும் கே.பாலச்சந்தர் கமலை செல்லமாக நாலு அடி அடித்து “எங்கடா இருந்த... இவ்வளவு நாள்!” என்றார்.
மணிரத்னம், “ முன்னாடியே வந்திருக்கணும்” என்றார்.
ஜாம்பவன்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம்.
பாமர ரசிகன் புரிய வேண்டுமே எனக்கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல்...என் படத்தை பார்க்க... கஷ்டப்பட்டு மேலே வா.... என எட்டாத உயரத்தில் வைத்து விட்டார்.
இப்போது கூட இப்படத்தை நான் சரியாக புரிந்து கொண்டேனா... என நேற்று நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சந்தேகம் வந்து விட்டது.
நண்பர் கொழந்த தனது பின்னூட்டத்தில்... காட்சிக்கு காட்சி கமலே இருந்தார்... என சொல்லி இருந்தார்.
எனக்கும் அந்த எண்ணமே இருந்தது.
ஆனால் நண்பர்... “கமல் சரியாகத்தான் செய்திருக்கிறார்.
ஆங்கில இலக்கியத்தில் ‘ஹீரோஸ் ஜேர்ணி’ என்ற மெத்தடில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
இதன்படி கமல் காட்சிக்கு காட்சி வந்தே ஆக வேண்டும்.
பெரும்பாலும் கமல் தனது திரைக்கதையை இந்த பாணியில்தான் அமைப்பார்.
பிஸிக்கல் ஜேர்ணியுடன்...
[மெல்கிப்சனின்... அப்போகலிப்டோ-பாக்ஸ் ஆபிஸ் ஹிட்]
மெண்டல் ஜேர்ணியும்....
[பெர்க்மனின்...பெர்சோனா-பாக்ஸ் ஆபிஸ் பெயிலியர்]
கலந்து ஐரோப்பிய பாணியில் திரைக்கதை அமைத்திருப்பதால்...
படம் கிளாசிக் தன்மையில் பல மடங்கு உயர்ந்து விட்டது” என்றார்..
கமல் பாக்ஸ் ஆபிஸ் பற்றி கவலைப்படாமல்தான் படமெடுத்தார்.
12 கோடி போட்டு பணமெடுத்த பரத்ஷா....
வைரச்சுரக்கம் வைத்திருந்த பரம ஏழை.
இன்று நீங்கள் ரோட்டில் நாலு ரூபா தொலைத்து விட்டால்...
எவ்வளவு கவலைப்படுவீர்களோ....
அந்ந்ந்ந்ந்தளவு.... 12 கோடி தொலைந்து விட்டால்.... பரத்ஷா கவலைப்படுவார்.
விக்கிப்பீடீயாவில் ஹேராம் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் இணைத்துள்ளார்கள்.
தயவு செய்து அதை முழுக்க படித்து விடுங்கள்.
இருபது சேப்டர்கள் உள்ள மிக நீண்ட ஆய்வு இது....
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/
அமெரிக்க பேராசிரியரின் பதிவு இது....
http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html
இவர்கள் மாதிரி என்னால் எழுத முடியாது...இருந்தாலும்
இப்படத்தில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்....பரவசம்....உண்மைகள்...
இவற்றை... உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அடுத்தப்பதிவில் எனது எண்ணங்களில்.... கமலின் கை வண்ணங்கள்...
இதற்கு முந்தைய பாகத்தை படித்திட்டுதான் வருகிறேன்..கோபமா எழுதி இருந்தீங்க போல..உணர முடிந்தது.ஆமாம், யாரு அண்ணா..அந்த வெங்காயம் மகாதேவன்..?? ஒரு படத்தை சரி வர புரிந்துக்கொள்ளாமல் விமர்சனம் எழுதுவதே பெரிய தப்பு..அதுல இந்த ஆளு வேறு.
ReplyDeleteரொம்பவும் ஆர்வத்தோடு படித்தேன்..பதிவை கொஞ்சம் சுருக்கமா முடிச்சுட்டீங்க போல..ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு..நிறைய விடயங்கள் தெரிய வருகிறது.தொடர்ந்து எழுதுங்க.படத்தை கூடிய விரைவில் இன்னொரு முறை பார்த்துவிடுகிறேன்.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்/
தம்பி குமரா...
Deleteநான் கொடுத்துள்ள இணைப்பில் ஹேராம் பற்றிய பதிவுகளை படித்து விடு....தயவு செய்து படித்து விடு.
படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்..லிங்க்ஸ் கொடுத்தமைக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பரின் பாராட்டுக்கு...அக மகிழ்கிறேன்.
Deleteஎவ்வளவு பதிவு போட்டாலும் சுவாரசியம் குறையவே மாட்டேங்குதே..
ReplyDeleteஇவ்வளவு நேரமும், ரெண்டு தரப்பு விவாதத்தையும் வாசிச்சு திகைச்சுக்கிட்டிருந்தேன்.. தமிழல ஒரு படத்துக்கு இப்படி ஒரு இருவேறுதரப்பு analysis நான் வாசித்ததேயில்லை..
ஆர்வத்துல தேடிப்புடிச்சு நண்பனிடம் டி.வி.டியும் எடுத்துட்டு வந்துட்டேன்.. நாளைக்கு மத்தியானம் படத்தை முழுசா பார்த்தா தான் இவ்வளவு நேரம் விளங்கிக் கொண்டவைகளை உணர்ந்து பார்க்க முடியும்!
* ரெண்டு பதிவையும் படம் பார்த்தவுடன் படிக்கிறேன்!!
நண்பா...இப்பதிவு எழுதப்போய் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
Deleteஹேராம்... என்ற சட்டியில் இருக்கிறது.
அகப்பையில் வந்து கொண்டே இருக்கும்.
மாப்ள பல இடத்தில் மாறுபடுகிறேன்...சீக்கிறத்துல ஒரு பதிவு போடுறேன்...நேரம் இருக்கும் போது பாருங்க!
ReplyDeleteநண்பர்களின் மாற்றுக்கருத்து...என் அகம் அழிக்கும்.
Deleteமாப்ள...ஹேராம் பதிவுத்தொடர் முடிந்ததும்...உங்களது மாற்றுக்கருத்து பதிவு போடுங்கள்.
ReplyDeleteபதிவுலக ரிலே ரேஸ் மாதிரி இருக்கும்.
நண்பரே,
ReplyDeleteஎனக்கு கமல் சுத்தமாக பிடிக்காது. அதுவும் ஹேராம் படம் சுத்தம். ஒரே முறை தியேட்டரில் பார்த்து நொந்து நுல் ஆகி போனேனே...
இருந்தாலும் கமல் பற்றி வரும் சர்ச்சைகளை/விமர்சன்களை படிக்க ரொம்ப பிடிக்கும். அதே போல் உங்கள் தொடரையும் படிக்க ரொம்ப ஆவலாய் உள்ளேன்..
என் வீட்டிலேயே யாருக்கும் கமலை பிடிக்காது.
Deleteரஜினியைத்தான் பிடிக்கும்.
ஆனால் எனக்கு பிடிக்காத நடிகர்... பவர் ஸ்டார் மட்டுமே.
எதிர் விமர்சனம்... வரும் போதுதான் சூடும் சுவையும் இருக்கும்.
இந்தப்பதிவுக்கு நண்பர்களை இது வரை காணோம்.
அடுத்தப்பதிவிலிருந்து எதிர் கருத்துக்கள் அனல் பறக்கும்.