“மகத்தான இலக்கியவாதிகளும்... கலைஞர்களும்... மானுட அவலங்களின் துயரத்தினூடாக.... அந்த மானுட அவலங்களுக்கான....
காரணங்களை தேடிச்செல்கிறார்கள்.
அந்தக்காரணங்களை,நிரந்தரமாக மனித மனங்களிலிருந்து அகற்றுகின்ற... பொறுப்பையேற்று... அதை நோக்கியே... அவர்களது படைப்புகள் இயங்குகின்றன”
எழுதியவர்: யமுனா ராஜேந்திரன்
நூல்: இந்தியப்பிரிவினை சினிமா இந்து-முஸ்லீம் பிரச்சினை
வெளியீடு:உயிர்மை பதிப்பகம்
வெளியீடு:உயிர்மை பதிப்பகம்
[இந்த பொன்னெழுத்துக்கள் 2000ல் வெளி வந்த ஹேராமுக்கும் பொருந்தும்.
2012ல் வெளி வந்திருக்கிற வழக்கு எண்ணுக்கும் முழுமையாகப்பொருந்தும்.]
இந்நூலில் இந்து-முஸ்லீம் பிரச்சினையை பேசும் மிக முக்கிய ஏழு படங்களை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்
1.எம்.எஸ்.ஸத்யூவின்...கரம் ஹவா
2.கோவிந்த் நிஹ்லானியின்... தமஸ்
3.ஸியாம் பெனகலின்....மம்மோ
4.பமேலா ரூக்ஸின்...டிரெய்ன் டூ பாகிஸ்தான்
5.தீபா மேத்தாவின்... எர்த
6.கமலஹாசனின்...ஹேராம்
7.சபியா சுமேரின்...காமோஸி பானி.
ஏழுமே சப்தஸ்வரங்கள்தான்.
ஆனால் பாபர் மசூதி பிரச்சனையை உள்ளடக்கியதில்... ஹேராமை ஒரு படி மேலாக கருதுகிறேன்.

ஆர்க்கியாலஜிகல் அதிகாரிகளின் கிளப்புக்கு அம்ஜத் குடும்பத்துடன் காரிலிருந்து இறங்குகிறான்.
மகன் நண்பர்களோடு குடித்து கும்மாளம் போடப்போகிறான் என்பது தெரிந்தும்... அம்ஜத்தின் தாயும் தந்தையும் மலர்ந்த முகத்துடன் விடை பெற்றுச்செல்கின்றனர்.
இவர்களுக்கு நறுக்கு தெரித்தார் போல்... எண்ணி நாலு ஷாட்...டைட்டாக வைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
ஏனென்றால் இவர்கள் பின்னால் இந்து வெறியர்களால் கொல்லப்பட இருக்கிறார்கள்.
அம்ஜத்.... தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கிளப்பில் குடிக்க வருவது....வெஸ்டர்ன் கல்ச்சருக்கு மாறி விட்டதை தெளிவாக்குகிறது.
[விஸ்கி கோப்பைகள் உரசிக்கொள்கின்றன]
வீலர் : ட்டூ இண்டியா
அம்ஜத் : யெஸ்..டூ இண்டியா...
ராம் : இண்டியான்னுட்டா...[பேசியபடி உள்ளே வருகிறான்]
ம்...அது சரி.
கிளாசை மோதிட்டு...டூ இந்தியான்னுட்டா போறுமா?
எந்த இந்தியா?முழுசா?பாதியா?
வீலர் : ஹா...ராம்...வாட் ஈஸ் யுவர் பாய்ஸ் தன்?
ராம் : ம்...பார்ட்டீஷன் சர்....ஐ வாண்ட் எ சிங்கிள் கண்ட்ரி.
வீலர் :ஐ ம் ஷ்யூர் தட் அம்ஜத் வுட் வாண்ட் எ பாகிஸ்தான் அண்ட் எ லார்ஜர் ஒன் அட் தட்.
அம்ஜத் : நோ வே சர்...தே வாண்ட் ட்டூ இம்போஸ் ஷரியத்.
[ராமிடம்]
அப்புறம் குடிக்க முடியாது.
[வீலரிடம்]
நோ...தாங்க் யூ...நோ லார்ஜ் பாகிஸ்தான்.
எ லார்ஜ் ரம் ஈஸ்... ஆல்ரைட் பை மீ...சியர்ஸ்...
மேற்படி உரையாடல்கள் வீலர்,ராம்,அம்ஜத் மூவர் நிலைப்பாட்டை விளக்குகின்றன.
இதில் வீலரின் உரையாடலை மட்டும் கவனியுங்கள்.
இந்தியா-பாகிஸ்தானை பிரிப்பதில் வெள்ளைக்காரனுக்கு இருந்த ஈடுபாடு தெரியும்.
இந்தக்காட்சியிலேயே... பணக்கார வியாபாரியான... லால்வானி மனைவி குழந்தைகளுடன் வந்து சேருகிறான்.
மூவருமே சென்னை கிறிஸ்டியன் கல்லூரி நண்பர்கள் என்பதை அவர்கள் உரையாடலில் சொல்லப்படுகிறது.
இந்தக்காட்சி முழுக்க....முழுக்க... நட்பின் கொண்டாட்டங்கள்.
லால்வானியை சிந்தியாக படைத்ததில் காரணம் இருக்கிறது.
பிரிவினையில் பாதிக்கப்பட்ட இனங்களில் சிந்தியும் ஒன்று.
லால்வானிக்கு குங்குமமிட்டு கற்பனை செய்தேன்...
அத்வானி போலவே இருந்தது!
இந்தக்காட்சியில் ஒரு வெள்ளைக்காரன் தண்ணி போட்டு விட்டு முட்டாள் மாதிரி பேசி நடந்து கொள்வான்.
எதற்காக இந்த பாத்திரப்படைப்பு ?
கேள்வி வருகிறது....
நம் மக்களிடம் வெள்ளைக்காரன் என்றாலே உலகமகா புத்திசாலிகள்தான் என ஜால்ரா அடிக்கும் பொதுப்புத்தி இருக்கிறது.
அந்த சிந்தனைக்கு ஆப்படித்திருக்கிறார் கமல்.
இந்தக்காட்சியிலும் ராமின்... டயலாக் டெலிவரி,உடல் மொழி அப்படியே வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருந்து உத்தியோகம் பார்த்த மேல் ஜாதி இந்துக்களை பிரதிபடுத்துவதை காண முடியும்.
இதற்கு நேர்மாறாக அம்ஜத் கால் மேல் கால் போட்டு உரையாடுவதில்...
பவர் தெரியும்.
மனைவியிடமிருந்து போன் வர...ராமை அம்ஜத்தும்,லால்வானியும் கலாய்ப்பது நட்பின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ராமிற்க்கு அம்ஜத்தின் மனைவி ராக்கி கட்ட விரும்புவது,ராமின் மனைவிக்கு அம்ஜத்தின் மனைவி சென்னையிலிருந்து தாலி வரவழைப்பது....இவை எல்லாமே இந்து-முஸ்லீம் நண்பர்கள் மதங்களை கடந்து எவ்வாறு இருக்க வேண்டும் என்று படைப்பாளி கமல் காட்சிப்பபடுத்தியிருக்கிறார்.
வீலர் பியோனோ வாசிக்கும்போது...லால்வானியின் தோளில் நட்புரிமையோடு கை போட்டிருக்கும்... ராமின் விரல்கள் பியோனோ வாசிப்பது போல் பிங்கரிங் செய்யும்.
ராம் பியோனோ வாசிப்பு திறனுக்கு இங்கேயே லீட் வைத்து விட்டார் இயக்குனர் கமல்.
வீலர் பியோனா வாசித்து முடிக்க அனைவரும் கை தட்டி பாராட்டுகிறார்கள்.
வீலர் :தாங்க் யூ...தாங்க் யூ...
தன்யவாத்...சுக்ரியா...
இப்போ ஒரு தமிழ் பாட்டு பாடுங்க...
[மீண்டும் கரகோஷம்....]
ஐ டோண்ட் அண்டர்ஸ்டேன்ட் தேர் ஈஸ் அப்லாசஸ்.
பட் நோ சிங்கிங்....
ராம் : த அப்லாசஸ் இஸ் ஃபார் யுவர் டமில் சார்.
வீலர் : நன்றி.
பொதுக்கூட்ட மேடைகளில் ந...ன்...றி...எனச்சொன்னவுடன்... சோனியாவோ...அத்வானியோ....கை தட்டுவதில் சளைக்காத தமிழனை... நக்கலடித்திருக்கும்.....கமல் குசும்பன்.

"இரண்டாவதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் எனது ஆரோக்கியத்துக்கு நல்லது....தூங்க முடியவில்லை.
ReplyDeleteஇதே ரீதியில் போனால் குணாவாகி விடுவேன்.
உங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்."
ராமாயணம் சொல்றேன்னு சொல்லிடு டக்குனு ரெண்டு வரில சொல்றேன்ன எப்பிடி?
இதே மாதிரி நல்ல எழுதுவீங்கன முதல் choice தான்!
சிந்தி மக்களை குறித்து போல் Earth ல் பார்சி மக்களை குறித்த அருமையான பதிவு உள்ளது. அதுவும் இங்கு கவனத்தில் கொண்டு வரதக்கது என்றெண்ணுகிறேன். தவிர உங்கள் பதிவில் எவை உங்கள் பார்வையில் எவை இயக்குனர் பார்வை என்று தனித்து தெளிவுபடுத்தியே எழுதுவதும் ஒரு சிறப்பாக அமையும் என்றெண்ணுகிறேன்.
எங்கோ படித்த ஞாபகம்... இந்த படம் வெளிவந்த பல காலம் பின்னால் ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு. திரு.கமல் குரிப்பிட்டுயருந்தார் , இதுபோன்ற படங்கள் வெளிவரும் காலத்தில் பொதுவான ஊடகங்கள் இப்போன்ற படங்களை அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்து அரங்கங்களில் விவாதிக்க வேண்டும் என்று. அன்று அவைகள் இல்லை. இன்று எல்லா மொக்கை படங்களுக்கும் சில தொலைகாட்சிகளில் coat போட்டுகொண்டு எல்லாரையும் உட்காரவைத்து ஒன்றுமே இல்லாமல் சட்டினி பிரமாதம் இடிலி தான் சூடு கொஞ்சம் கம்மி என்று விவாதித்து வருகிறார்கள்... ஹ்ம்ம்..
நண்பரே...தங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன்.
Deleteஎர்த படம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.
மற்ற படங்களையும் பார்த்து விடுங்கள்.
எல்லாமே உலக சினிமாதான்.
//இன்று எல்லா மொக்கை படங்களுக்கும் சில தொலைகாட்சிகளில் coat போட்டுகொண்டு எல்லாரையும் உட்காரவைத்து ஒன்றுமே இல்லாமல் சட்டினி பிரமாதம் இடிலி தான் சூடு கொஞ்சம் கம்மி என்று விவாதித்து வருகிறார்கள்... ஹ்ம்ம்..//
கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு நல்ல படங்களை நக்கலடிக்கும்...பிரபல பெங்களூர் பதிவரை விட்டு விட்டீர்களே...
[இதுக்குப்பேருதான் போட்டு கொடுக்கறது...]
இந்த பார்ட்டி சீனைக் கூட உள்ளர்த்தங்களோடுதான் வைத்திருப்பாரென்று நினைத்தும் பார்க்கவில்லை நண்பா!
ReplyDeleteகமல் ரசிகனாக உங்கள் பெருமிதம் வார்த்தைகளில் ஜொலிக்கிறது!
//கமல் ரசிகனாக உங்கள் பெருமிதம் வார்த்தைகளில் ஜொலிக்கிறது!//
Deleteசகலகலா வல்லவர் என்ற தொடர் எடுத்த கமல் ரசிகன் இன்றில்லை.
அவன் கோபக்காரன்.
கமலை எதிர்த்து ஒரு கமென்டைக்கூட அவன் பிரசுரிக்க மாட்டான்.
அவன் அராஜகன்.
இன்றிருப்பவன் உலகசினிமா ரசிகன்.
அவன் பார்வையில்தான் பதிவு எழுதப்பட்டு வருகிறது.
படத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் போது புரிந்து கொள்வீர்கள்.
நண்பர்களே...என் நண்பர் கருந்தேள்...என் மீதுள்ள பிரியத்தில் என்னையும் பிரபல பதிவர் லிஸ்ட்ல சேர்த்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
Deleteஅதில் ஸ்டார் அட்ராக்ஷனே...நானும் ...ஜாக்கி சேகரும்தான்.
ரொம்ப நாள் கழித்து ராஜேஷின் மாஸ்டர் பீஸ் எழுத்து.
மற்றவர்கள் எப்படியோ தெரியாது .
நான் ரசித்து சிரித்தேன்.
இனி நான் குறியீடுன்னு எழுதும் போதெல்லாம் அவர் முகம் வந்து நக்கலடிக்கும்.
இந்த லிங்கில் போய் சிரித்து வாருங்கள்.
http://www.facebook.com/rajesh.scorpi
தல... எழுபது பதிவுகள் எழுதுவேன் என்று சொன்ன இங்கல் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்... சக பதிவராக உங்களுக்கு சில ஆலோசனைகள் தர விரும்புகிறேன்...
ReplyDeleteநீங்கள் எழுபது பதிவுகளில் சொல்ல விரும்பும் விஷயத்தை சுருக்கி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முப்பது பதிவுகளில் சொல்ல முயலுங்கள்...
எழுத்து நடையை சற்று சுவாரஸ்யமாக்க முயலுங்கள்...
முக்கியமாக உங்களிடமிருக்கும் புத்தகங்களில் உள்ளதை அப்படியே எழுதாமல் அவற்றில் உங்களுடைய டச்சை சேர்த்து எழுதுங்கள்...
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் பதிவுகளை யாராவது புத்தக பதிப்பாளர் படித்தால் அதனை புத்தகமாக வெளியிட நினைக்க வேண்டும்...
//நீங்கள் எழுபது பதிவுகளில் சொல்ல விரும்பும் விஷயத்தை சுருக்கி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முப்பது பதிவுகளில் சொல்ல முயலுங்கள்...//
Deleteஉங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன்.
//எழுத்து நடையை சற்று சுவாரஸ்யமாக்க முயலுங்கள்...//
படத்தில் உள்ள குறியீடுகளை...
தேடிக்கண்டு பிடித்து..அதன் அர்த்தம் விளங்க...
நெறைய தேடல் இருக்கிறது.பிரபா...
திரட்டிய தகவல்களை சொல்லும் போது சுவாரஸ்யம் மிஸ்ஸாகி விடுகிறது.
இதை நானே உணர்ந்திருக்கிறேன்.
எனது ஞான குரு சுஜாதாவை மனதில் நிறுத்தி இனி பதிவெழுதுகிறேன்.
அவர் அருளால் சுவாரஸ்யப்படுத்தி விடுவேன்.
நானே பீல் பண்ணிய எனது குறையை வெளிப்படையாக சொன்ன... நீங்கள் என் மிக நெருங்கிய நண்பன்.
//முக்கியமாக உங்களிடமிருக்கும் புத்தகங்களில் உள்ளதை அப்படியே எழுதாமல் அவற்றில் உங்களுடைய டச்சை சேர்த்து எழுதுங்கள்...//
யமுனா ராஜேந்திரன் எழுத்தை அப்படியே போட்டதை குறை சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
எனக்கும் இந்த இலக்கிய பத்திரிக்கை நடை அலர்ஜி.
எனக்கு பிடித்தது விகடன் நடைதான்.
படிப்பவரை சிரமப்படுத்தும் தமிழை பார்த்தாலே...ஒரே ஒட்டம்தான்.
//சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் பதிவுகளை யாராவது புத்தக பதிப்பாளர் படித்தால் அதனை புத்தகமாக வெளியிட நினைக்க வேண்டும்...//
பதிப்பகத்தார் அனைவருமே எனது நண்பர்கள்.
புத்தகக்கண்காட்சிக்கு நான் போகும் போது கடன்காரன் மாதிரி சுற்றிக்கொண்டு போக என்னால் முடியாது.
ஹேராம் திரைக்கதையை புத்தகமாகப்போட்ட பாமா பதிப்பகம் திவாலாகி மூடி விட்டார்கள் என்ற தகவல் இரண்டு தினங்களூக்கு முன்புதான் கிடைத்தது.
கமலுக்கு... பாமா சிக்கின மாதிரி, எனக்கு ஒரு பூமா சிக்கினால் பார்ப்போம்.
ஒர் உண்மையான திரை ரசிகரால்தான் இது போன்ற ஓர் அருமையான தொடரை எழுத முடியும்..ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் எடுக்கும் முயற்சியை உணர முடிகிறது..
ReplyDeleteபலராலும் சரி வர (நானும்) புரிந்துக்கொள்ளாத நிலையில் மக்களால் வெகு விரைவாக மறக்கப்பட்ட ஒரு நல்ல படைப்பை சிறிது காலம் கடந்து பலருக்கும் இத்தொடரின் மூலம் விளக்க முற்ப்படுகிறீர்கள்.இது தொடர்ந்திட வேண்டுமென்பதே என் அவா..நன்றிகள் பல..தங்களது எல்லா பதிவுகள் போலவே இதுவும் நன்றே/
நன்றி குமரா!
Deleteஉனது பின்னூட்டங்கள்...எனது மாலைப்பதநீர்.
காலைப்பதநீரை விட மாலைப்பதநீர்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மிகச்சிறப்பான..துல்லியமான தங்கள் விமர்சனம் மெய்சிலிர்க்க வைக்கிறது..பாராட்டுக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நம்மை இணைத்த கோவை பதிவர் குழுமத்துக்கும் நன்றி.
Deleteநாம் ரசித்த திரைக்காட்சிகளுக்கு அருமையான் விளக்கம் கொடுத்து எண்ணங்களை கூர்மைப்படுத்தும் உங்கள் எழுத்தின் பாங்கு என்னை வியக்க வைக்கிறது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நம்மை இணைத்த கோவை பதிவர் குழுமத்துக்கும் நன்றி.
Deleteஹேராம் தங்கள் மனதுக்கு பிடித்த படமாக அமைந்ததில்...எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
சார்
ReplyDeleteஉங்களை சந்திச்சதில் ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்
ஏதோ நெருங்குன நண்பர்கிட்ட பேசுற பீல் இருக்கு சார் உங்ககூட பேசும் போது
நான் இதுவரைக்கும் உங்க பதிவ படிக்கல, படிச்சதுக்கு அப்புறம் கமெண்டு போடுறேன்
ஒருநாள் உங்க கடையில உட்கார்ந்து ஒரு சினிமா விடாம கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணலன்னா பாருங்க :-)
ஒரு முடிவோடதான் இருக்கோம் நாங்க ஹி ஹி
நாம நேற்றிலிருந்தே நண்பர்கள்.
Deleteநானும்...எனது கடையும்...எனது பதிவுகளும் காத்திருக்கிறோம் தங்கள் வருகைக்கு...
உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. தொடருங்கள் தோழரே.
ReplyDeleteஎனது அழைப்பை ஏற்று...வந்து... கவரவப்படுத்தியதற்க்கு நன்றி... நண்பரே!
Delete