Mar 15, 2012

காவல் கோட்டம்-காவலும்...காதலும்...[பாகம் இரண்டு]


வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பின் ஊமைத்துரையை பாளையங்கோட்டை சிறையில் அடைத்து வைத்தனர்.
2-2-1801 அன்று இரவு திருச்செந்தூர் முருகனுக்கு காவடி எடுப்பது போல் வந்த பக்தர் கூட்டமும்,ஊமைத்துரை உறவினர்களும் காவலர்களை தாக்கி ஊமைத்துரையை விடுவித்து வல்லநாட்டு மலைக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
பாஞ்சாலக்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச்சிப்பாய்களை கொன்று ஒரே வாரத்தில் அங்கு ஒரு மண் கோட்டையை எழுப்பி உள்ளார்.
மேலும் ஐந்து பாளையங்களில் வெள்ளையரை அழித்து கோட்டைகள் கட்டியுள்ளார்.
இப்படி பல இடங்களில் ஊமைத்துரை வெற்றிக்கொடி நாட்டிய சாகஸத்தை காவல் கோட்டம் படம் பிடித்து காட்டுகிறது.

தன்னை சரணடைந்த பரங்கிததளபதியின் மனைவி வேண்டுக்கோளை ஏற்று அவர்கள் உடமைகளோடு வெளியேற அனுமதித்த மாண்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஊமைத்துரையை வீழ்த்திய அக்னியூவின் வார்த்தைகள்....
 “காது கேளாத,வாய் பாச முடியாத ஒரு இளைஞனின் சாகஸங்கள் பிரமிப்பூட்டுகின்றன.
அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர்.
எல்லா தாக்குதல்களிலும் அவர் முன்னால் நிற்கிறார்.
தன்னை விட நூறு மடங்கு எதிரிகளை கண்டு அவர் அஞ்சவில்லை.
அவரது படையின் சக்தியைவிட.... சாதனைகள் பல மடங்கு பெரியவை”

மதுரை நகரத்தை தாதனூர்க்காரர்கள்தான் காவல் காத்து வந்திருக்கிறார்கள்.
அதற்க்காக ஒவ்வொரு வீட்டிலும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் மதுரை நகருக்குள் புதிய கட்டிடம் கட்டியுள்ளான்.
அதற்க்கும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள் தாதனூர்க்காரர்கள்.
அந்த புதிய கட்டிடம் போலிஸ் ஸ்டேசன்.

மதுரைக்கு முதன்முதலாக ரயில் வந்த போது மதுரை மக்களின் கமெண்ட்...
“அதுக்கு வடக்க காவிரி ஆத்துல தண்ணிய பிடிச்சு மூக்கு வழியா நெறையா ஊத்தி விட்றாங்ய...
நம்ம நாட்டு ஒட்டகம் எப்படி தண்ணிய உள்ள வச்சிருக்குமோ அதப்போல இந்த வெள்ளக்கார வண்டி...தண்ணியப்பூரா உள்ள வச்சுகிட்டு கரிய்ய தின்னுகிட்டு எவ்வளவு தூரம் வேணும்னாலும் ஒடும்”

“அப்ப நம்ம நாட்டு ஒட்டகம் மாதிரின்னு சொல்ற...
அது சரி...இது தலையிருக்கிற பக்கம்தான் குசு விடுதாமே... ஏன்?”

தாதனூர் கிழவிகள் பேச்சு அத்தனையும் அடல்ட்ஸ் ஒண்லி.
புதுமாப்பிள்ளைக்கு சொல்லும் அறிவுரை இது...
“ஏலேய்...மொட்டு கெட்ட பயலே...நீ என்ன தீத்தவளையா சரடு கட்டி கூட்டி வந்த?
இது உழுகாத வயக்காடுடா...எடுத்த எடுப்புல அமுக்கி உழுகணும்னு நெனச்சின்னா கலப்பையும் சேதப்பட்டு போகும்...மண்ணும் பெறளாது.
பதம் போயிரும்.
மே ஓட்டா ஓட்டி,அப்புறம் கலப்பய எடுத்து கட்டி,மேழிய அமுக்கி பிடிக்காம... மெல்ல பிடிச்சுகிட்டு.... அது நோக்கத்துக்கு... மாட்ட போக வுடு...
போறப்போ... அதுவா கிழிச்சுகிட்டு போகும்.
ரெண்டு ஓட்டு.. மூணு ஓட்டுல தன்னால புழுதி கிளம்பிரும்...
அத வுட்டுட்டு எடுத்த எடுப்புல...அமுக்கிதான் உழுவேன்னா எதுக்கும் ஆகாம போயிரும்”

“அவ எதுக்கு தீத்துட்டுப்போனா?”
 “அவ புருசன் சேவ மாதிரி ஏறுனதும் எறங்கிர்றானாம்....”
“அட தட்டு கெட்ட சிறுக்கி!ஆழம் பாத்தாதுன்னு அழுதுகிட்டு கிடந்தவ...
 ஒத்த வருசத்துல நீளம் பத்தாதுன்னு தீத்துகிட்டு போயிட்டாளா!”

 “ஓம்புருசன் பெரிய கெட்டிக்காரனாம்லடீ”
“அவங்கிடக்கான் தூமச்சீல...எடங்கண்டுபிடிக்கவே எட்டு நாளாச்சு”

காவல் கோட்டையில் இது போன்ற டயலாக்குகள் வெள்ளமெனெ பரவிக்கிடக்கிறது.
700 ஆண்டு பயணத்தை களைப்பிலாமல் கடக்க உதவும் வயகரா இவைகள்தான்.

1 comment:

Note: Only a member of this blog may post a comment.