பிரான்ஸ்காரர்கள் எல்லா நல்ல படத்தையும் தாங்களே எடுப்பது என்று குத்தகை எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!!!!!!.
அந்த வகையில் சமீபத்திய வரவு ஆர்டிஸ்ட்.
மவுனப்பட காலங்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரது வாழ்க்கையை 2011ல் கருப்பு வெள்ளையில்...அதுவும் மவுனப்படமாக எடுக்கும் துணிச்சல்...அடடா....
முதலில் தயாரிப்பாளர் Thomas Langmannக்கு என் முதல் மரியாதை.
இரண்டாவது இப்படத்தின் இயக்குனர் Michel Hazanavicius ...உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...பாராட்டுகள்.
சினிமாவில் மவுனப்படங்கள்தான் கலையின் உச்சம் என கொண்டாடுவார்கள் தீவிர சினிமா ஆர்வலர்கள்.
அதை நூற்றுக்கு நூறு சரி என உணர்ந்தேன்.
பாட்டில் ஷிப் பொட்டம்கின்,இண்டாலரன்ஸ் போன்ற மவுனப்படங்களை இது வரை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.
பேசும் படங்களும்...வர்ணப்படங்களும் சினிமாவின் ஆன்மாவை சிதைத்து விட்டதாக தீவிர சினிமா ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
இந்த குற்றச்சாட்டை உண்மை என ஒவ்வொரு ரசிகரும் ஆர்ட்டிஸ்ட் படம் பார்க்கும்போது உணர முடியும்.
இதுதாண்டா பின்னணி இசை என பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் Ludovic Bource.
பின்னணி இசை ...மோட்டிவேட்டிங் மியுசிக் என்ற தளத்தில் காட்சிக்கு காட்சி பரிணமித்து கொண்டே போகிறது.
உலகின் தலை சிற்ந்த பின்னணி இசையில் முதல் பத்து இடங்களில் தைரியமாக சேர்த்து விடலாம்.அப்பீலே வராது.
இப்படத்தின் நாயக,நாயகியரின் நடிப்புக்கு இணையாக....
நடிகர் திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்தான் ஈடு இணையாக சொல்ல முடியும்.
21 இஞ்ச் டிவியில் பார்த்ததிலேயே இருவர் நடிப்பிலும் மயங்கி விட்டேன்... வெள்ளித்திரையில் பார்த்தால்.... அவ்வளவுதான்..... ரசிகர் மன்றமே தொடங்கி விடுவேன்.
இப்படம் பல் வேறு பிரிவுகளில்....
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்....வெற்றி கிடைக்காது.
ஏனென்றால் இப்படம் மோதுவது Tree Of Life படத்தோடு.
Tree Of Life படத்திற்க்கு பக்க பலமாக உலகின் மிகப்பெரிய மதம் இருக்கிறது.
மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.
இதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஆஸ்கார் விருது பட்டியல் வெளியான பிறகு நீங்களே உணர்வீர்கள்.
80%நகைச்சுவையும்,20% சோகமும்,0%ஆபாசமும் கலந்து செய்த கவிதையாக இப்படம் இருப்பதால் குடும்பத்தோடு காண வேண்டிய U U U திரைப்படம்.
ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்து....
தனது ஆஸ்தி,அந்தஸ்து,புகழ் அனைத்தும் கரைந்து....
வெற்று மனிதனாக மரித்த தியாராஜ பாகவதர் வாழ்க்கையை...
கருப்பு வெள்ளையில்...மவுனப்படமாகவே எடுக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்ற ஆசை பிறந்தது.
எனது ஆசை பேராசையா?
செமயான விமர்சனம் ரசிகரே ... இப்போதே படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் நடை. ஆனால் இன்னும் ஒரிஜினல் ப்ரிண்ட் வராததால் அதற்கு வெயிட்டிங்.சீக்கிரமே பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
ReplyDeleteசிறப்பான விமர்சனம்..எவ்வளவு சுவார்ஸ்யங்களை நுழைக்க முடியுமோ அவ்வளவு சுவையாக தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்..படம் ஏற்கனவே பார்க்க வேண்டும் என்றிருந்தேன்.அதை உறுதிபடுத்திவிட்டது தங்களது எழுத்துக்கள்..
ReplyDelete@@ இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.@@
அதற்கு என்ன படத்தை பார்த்துட்டா போச்சு..அப்படியே விமர்சனமும் தந்துடுங்க.
@குமரன்
ReplyDeleteதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி ஆக்கப்படுத்துவதை அலுக்காத பணியாக செய்து வருகிறீர்கள்.நன்றி...நன்றி.
//மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.//
ReplyDeleteஇதை நான் மறுக்கிறேன்.
மதத்திற்கு பதிலாக அரசியல் என்று போடுங்கள்.
அப்புறம்.. உங்கள் ஆசை (அ) பேராசை (அ) நிராசை..
எதுவாக இருந்தாலும்..
இன்னைக்கு திரைப்பட உலகில் கமர்சியல் என்பது அவசியமாகிவிடுகிறது.
தரமான படங்கள் என்பதை விட, வசூல் சாதனை என்ற விளம்பரங்களே மக்களை இழுத்துச் செல்கிறது.
நா சரியா தான் பேசுறேனா??
திருப்பூர் கண்காட்சி முடித்து வந்த வேகத்தில் அருமையானப் படத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள்!
ReplyDeleteஎனக்கு சமீபமாத்தான் இந்த ப்ரெஞ்சு சினிமாக்களின் ஆழமே தெரியவந்தது. நீங்கள் சொல்வதை பார்த்தால் படம் படு டச்சோடு இருக்கும் போல.. அப்போ, பார்த்துட வேண்டியதுதான். நன்றி சார்!
ReplyDeleteஎனக்கு சமீபமாத்ததான் இந்த ப்ரெஞ்சு சினிமாக்களின் ஆழமே தெரியவந்தது.. மற்ற நாட்டுப் படங்களை விட வித்தியாசமாக ஒரு தனித்துவ -ஃபீலோடு எடுக்கிறார்கள்!
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்தப் படமும்செம டச்சோ இருக்கும் போல.. அப்போ, பார்த்துட வேண்டியதுதான்.. நன்றி சார்!
@இந்திரா
ReplyDeleteசகோதரி...எந்த ஒரு போருக்கு பின்னால் அரசியல் இருக்கும்...அரசியலுக்கு பின்னால் மதம்தான் இருக்கும்.
மதம்தான் கடைசி.
எனவே நான் நேரடியாக மதத்தை குற்றம் சாட்டி உள்ளேன்.
ஆஸ்கார் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்...சகோதரி.
@ இந்திரா
ReplyDelete//இன்னைக்கு திரைப்பட உலகில் கமர்சியல் என்பது அவசியமாகிவிடுகிறது.
தரமான படங்கள் என்பதை விட, வசூல் சாதனை என்ற விளம்பரங்களே மக்களை இழுத்துச் செல்கிறது.//
சகோதரி...தரமான படங்களுக்கு தமிழக மக்கள் என்றுமே ஆதரவு தரத்தவறியதே இல்லை.
உ.ம் அன்று... உதிரி பூக்கள்,அவள் அப்படித்தான்,சில நேரங்களில் சில மனிதர்கள்,அவள் ஒரு தொடர் கதை இன்று....காதல்,தேவர்மகன்,நாயகன்,
சுப்பிரமணியபுரம்,எங்கேயும் எப்போதும்,ஆடுகளம்,களவாணி,மவனகுரு
இப்படங்களின் வசூல் சாதனையை
சகலகலாவல்லவனோடும்,எந்திரனோடும் ஒப்பிடக்கூடாது.
@இந்திரா
ReplyDeleteஉங்கள் ஆதங்கத்தையே கேள்வியாக்கி பதிலை ஒரு பதிவாகத்தருகிறேன்.
நாளையிலிருந்து காரைக்குடி புத்தகத்திருவிழா ஆரம்பம்.
21ம்தேதி கோவை திரும்பியதும்
பதிவைப்போடுகிறேன்.
உங்கள் கருத்தை மறுத்து பேசியதற்க்காக மிகவும் வருந்துகிறேன்.
@JZ
ReplyDelete//எனக்கு சமீபமாத்தான் இந்த ப்ரெஞ்சு சினிமாக்களின் ஆழமே தெரியவந்தது. நீங்கள் சொல்வதை பார்த்தால் படம் படு டச்சோடு இருக்கும் போல..//
நண்பரே...அன்றும்...இன்றும் பிரான்ஸ் கலைகளின் தாயகம்.
பதேர் பஞ்சலியை மணிக்கணக்கில் கியூவில் நின்று பார்த்த நாடல்லவா...
ஆக்கத்துக்கும்...ஊக்கத்துக்கும் நன்றி...நண்பரே
@பேபி ஆனந்தன்
ReplyDelete//திருப்பூர் கண்காட்சி முடித்து வந்த வேகத்தில் அருமையானப் படத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள்!//
நண்பரே...
வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி
அருமையான விமர்சனம்......படம் உண்மையில் ஒரு மௌன புரட்சியை ஏற்படுத்தி விட்டது போல.....
ReplyDeleteநல்ல எழுத்து நடை.....கண்டிப்பா படம் பார்த்து விட்டு என் கருத்தை சொல்கிறேன், நண்பரே....
நல்ல படங்களைத்தேடி இனி அலைய வேண்டியதில்லை
ReplyDeleteஉங்களின் விமர்சனம் மட்டும் போதும்
the art of watching film புத்தகத்தை ஒவ்வொரு நாளும் பிரட்டதேவை இல்லை,
உங்கள் எழுத்துக்கள் போதும்
உங்களது ஆசை நியாயமானதே.
ReplyDeleteசாவியின் தமிழ் சினிமா உலகம்
ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்
நான் தியெட்டரில் பார்ப்பதற்காக இருக்கிறேன். உங்கள் விமர்சணம் அருமை. நிச்சயம் பார்த்துவிட்டு சொல்கிறேன்...
ReplyDeleteஇத்தப் படிக்க மாட்டேன். ஏன்னா நானு இதை வீக்கெண்டு பார்க்கப்போறேன் :-) .. பார்த்துபுட்டு வாரேன்
ReplyDeletehttp://blogs.indiewire.com/theplaylist/kim-novak-upset-about-use-of-vertigo-score-in-the-artist-dramatically-calling-it-rape
ReplyDeleteஇந்த வருடத்து ஆஸ்காரில் எனக்கு மிகவும் பிடித்த படம்....
ReplyDeleteநல்ல பதிவு
வாழ்த்துக்கள்!
This movie got oscar :-))))).. you should have write some more about like (one line, or few scenes ) that will give a vivid portray of the movie - It just my opinion
ReplyDeleteneenga The artist oscar award vaangathu nu solreenga,,,, aana vaangiruche??
ReplyDelete