கடந்த ஒரு மாதமாக உலக சினிமா எதுவுமே பார்க்கவில்லை.
பார்க்கும் மன நிலையிலும் இல்லை.
கடந்த ஒரு மாத நிகழ்வை இரண்டு உலக சினிமா எடுத்து விடுவேன் என்னிடம் பணம் இருந்தால்.
இப்போது கூட நெருக்கடியில் இருக்கிறேன்.
சொந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பேர் எனக்கு ஜாமீன் தர முன் வர வேண்டும்.
உயர் நீதி மன்ற உத்தரவு அப்படி.
இப்போதுதான் தெரிகிறது எனக்கு உதவ முன் வருபவர்கள் யாருக்குமே சொந்த வீடு கிடையாது.
இருப்பவர்களுக்கு மனம் கிடையாது.
எனக்கு வாய்த்த நீதிபதி மிகவும் நேர்மையானவர்.
போலியான நபர்களை ஜாமீந்தாரர்களாக காட்டினால் என்னை உள்ளே தள்ளி விடுவார்.
இந்த நெருக்கடியில் என்னை உயிரோடு வைத்திருக்கும் நல்லவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
முதலில்திரு.ரகுநாதன் அவர்கள்.
எனது வாடிக்கையாளர்.
எனது பதிவை உடனே படிப்பவர்.
கூப்பிட்ட குரலுக்கு ஒடிவராதவர்கள் மத்தியில் கூப்பிடாமல் ஒடி வந்தவர்.
இவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் உலகசினிமாவால் வந்தது.
உலக சினிமாவின் அடிமை என்றே இவரைச்சொல்லலாம்.
இவருக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இன்னும் நல்ல உலக சினிமாவை
தேடித்தேடி கொடுப்பதாகத்தான் இருக்க முடியும்.
நன்றி ரகு.
இரண்டாவது.... ரகுவின் நண்பர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டலில் பங்குதாரர்.
என்னை ஒட ஒட விரட்டிய போலிசை தடுத்து நிறுத்திய கண்ண பரமாத்மா.
இவரை ஒரே ஒரு தடவைதான் எனது கடையில் ரகுவோடு பார்த்திருக்கிறேன்.
ஒரு மாதமாக மூடிக்கிடந்த எனது கடையை திறந்த அப்பர் பெருமானாக இவரை பார்க்கிறேன்.
இவரது முகம் நினைவில் இல்லை.
ஒரு தடவைதானே பார்த்திருக்கிறேன்!
அட... அவரது பெயர் கூட எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறதே!
சமீப காலமாக மூளை வேலை நிறுத்தம் செய்து வருவதை நானறிவேன்.
பிளாக் படத்தில் வரும் அமிதாப்....தன்மாந்த்ரா படத்தில் வரும் மோகன்லால் போல் நான் மாறும் சாத்தியக்கூறுகள் என்னிடம் தென்படுவதை அவதானித்து வருகிறேன்.
அவரிடமே பெயரைக்கேட்டு நாளை தெரிவிக்கிறேன்.
அது வரை அவர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டல் பங்குதாரராகவே இருக்கட்டும்.
நன்றி ரகுவின் நண்பரே!
மூன்றாவது எனது நண்பன் உயர்நீதி மன்ற வக்கீல் முபாரக்.
உயிர் காப்பான் தோழன் என்ற மூதுரைக்கு வடிவம் கொடுத்தவன்...கொடுத்துக்கொண்டிருப்பவன்.
இவனுக்கு பீஸ் 12 Angry Man டிவிடி வழங்க வேண்டும்....அவ்வளவே.
சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்களிலேயே அழகானவன்...
திறமையானவன்.
நடிகை ரோஜா செக் மோசடி வழக்கில் சிக்கி திணறிய போது காப்பாற்றியவன்.
ஆபத்பாந்தவன்.
அரபி தெரியும் என்பதால் அரபு நாடுகளில் துன்புறும் தமிழர்களுக்கு உதவ அடிக்கடி பறக்கிறான்.
நன்றி நண்பா...
நான்காவது கோவை நீதி மன்ற வக்கீல் ஆர்.கே.ராஜன்.
அதிமுகவில் பொறுப்பில் இருக்கிறார்.
புரட்சித்தலைவருக்கும்...தலைவிக்கும் பக்தர்.
முப்பதாண்டு கால நண்பர்.
தமிழ் மட்டுமே எழுத...படிக்க....பேசத்தெரிந்த மலையாளி.
இது வரை பீஸே வாங்கவில்லை.
வேறொரு வக்கீல் என்றால் முப்பதாயிரம் சுளையாக்கியிருப்பான்.
இவரது மகன் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர.... அனைத்து தகுதிகளோடும்.... ஆசைப்படுகிறான்..
இவனை நீங்கள் விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரில் காணலாம்.
அச்சு... அசல்... அக்னிநட்சத்திர படத்தில் ஒரு பாடலில் மின்னி மறையும் பிரபுதேவாவை போலவே இருப்பான்.
தமிழ் சினிமாவில் இவனுக்கு ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது.
அதற்க்கு அணிலாக உதவுவதே ராஜனுக்கு நான் தரும் பீஸ்.
கடந்த நவம்பர் மாதம் 2011ன் கறுப்பு மாதம்.
எதிர்பாராத துன்பங்கள்...துயரங்கள்...சுனாமியாக வந்து தாக்கியது.
ஒரே மாதத்தில் நாலு சுனாமி.
மூன்றை கடந்து விட்டேன்.
இரண்டாவதாக வந்த சுனாமியை மட்டும் உங்களிடையே இந்தப்பதிவில் பகிர்கிறேன்.
கடந்த நவம்பர் 18 அன்று பெங்களூரூ புத்தகக்கண்காட்சிக்கு ஸ்டால் போடப்போனேன்.
அன்று காலையிலேயே எனது டிவிடி கடையை போலீஸ் சோதனை செய்வதாக தகவல் கிடைத்தது.
கடையில் இருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட டிவிடிக்களை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஒரு தமிழ்ப்படமோ, ஃபுளூ பிலிமோ கிடைக்கவில்லை.
அவற்றை நான் விற்ப்பது இல்லை.
இருந்தாலும் 500க்கும் மேற்ப்பட்ட ஆங்கில படங்களை பறிமுதல் செய்து கடை ஊழியரை கைது செய்து....
என்னையும் குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.
ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடி விற்க்க நான் தயார்தான்.
ஆனால் அதன் விலை?
599 ரூபாய்!.
35 ரூபாய்க்கு தமிழ்ப்படம் விற்க்கும் மோசர்பெயர் நிறுவனம் உலகசினிமாவை 500 ரூபாய்க்கு மேல் விற்க்கிறது.
என்ன கொடுமை இது?.
நல்லசினிமாவை நடுத்தரவர்க்கம் பார்க்க விடக்கூடாது என்ற அரக்கத்தன சிந்தனையே இந்த அதிக விலை.
நேற்று வந்த அவதாரும் 500 ரூபாய்.
1959ல் வந்த பென்ஹரும் 500 ரூபாய்.
கமர்சியல் குப்பை படங்களை 99 ரூபாய்க்கு விற்க்கும் கம்பனி....
தரமான படங்களை மட்டும் 500 ரூபாய்க்கு....
விற்க்கும் அயோக்கியத்தனத்திற்க்கு சட்டம் துணை போகலாமா?
99ரூபாய்க்கு உலகசினிமாவை தாருங்கள்.
நானும் விற்க்கிறேன்.
மக்களும் வாங்குவார்கள்.
நான் எனது கொள்கையை விட்டு தமிழ்ப்படமும், ஃபுளு பிலிமும் விற்க்க ஆரம்பித்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாக முடியும்....
போலிசில் சிக்காமலே.....அதற்க்குறிய தந்திரங்கள் அனைத்தும் அறிவேன்.
பியூட்டி புல் மைண்ட் திரைப்படத்தின் உரிமம் பெறாத டிவிடி விற்றதால் என் மீது வழக்கு.
அதே படத்தின் கதையை உரிமம் பெறாமல் திரைப்படம் எடுத்த செல்வராகவனுக்கு பாராட்டு....பரிசு.
பியூட்டி புல் மைண்ட் படத்தை அப்பட்டமாக காப்பியடிக்காமல் தனது
கற்பனை வளத்தால்....
மயக்கமென்ன படத்தை.... ஒரு புதிய படம் மாதிரி....
மயக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டார் செல்வ ராகவன்.
பியுட்டி புல் மைண்ட்டை அணுஅணுவாக ரசித்தவன் நான்.
நானே.... மயக்கமென்ன படத்தில் மயங்கினேன்.
தனுஷின் நடிப்பும்...ஜி.வி.பிரகாஷின் பாடல்களும்...படமாக்கப்பட்ட விதமும் அனுபவித்து ரசித்தேன்.
செல்வராகவன் கிளிஷேக்கள் சற்று தூக்கலாக இருந்தது.
தவிற்த்திருந்தால் படம் ஒரு ஆடு களமாக பரிணமித்திருக்கும்.
இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி 300 ரூபாய் பிளாக்கில் வாங்கி பார்த்தேன்.
இரண்டரை மணி நேரம் என்னை குஷிப்படுத்தியதற்க்கு அந்த கட்டணம் குறைவுதான்.
சார்,
ReplyDeleteஉங்களுக்கு இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்ந்து, நீங்க பழைய படி மீண்டு வர வேண்டும்...கண்டிப்பாக வருவீர்கள்
அண்ணா தங்களது சிரமத்தை நினைத்து வருந்துக்கிறேன்..விரைவில் தங்கள் பிரச்சனைகள் பணிப்போல் மறைய ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் சொன்ன இரண்டு படங்களையுமே இன்னும் பார்க்கவில்லை..நன்றிகள் பல..வாழ்த்துக்கள்.
மாப்ள என்னய்யா இது...இப்போ எப்படி இருக்கீங்க!
ReplyDeleteநண்பரே... உங்களை என் வல்வை முத்துமாரி அம்மன் எந்தத் தீங்கும் விளையாமல் காப்பாளாக..
ReplyDeleteஉங்கள் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவும் , உலக சினிமா டி.வி.டி க்களை தொடர்ந்து விற்று ரசிகர்களை மகிழ்விக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ...
ReplyDelete@ராஜ்
ReplyDelete@குமரன்
@விக்கியுலகம்
@ஷர்மி
@அனந்து
நண்பர்களே!உங்கள் ஆறுதலும்...வாழ்த்தும் பலித்து விட்டது.
நாளையோடு எல்லா சனியும் விலகுகிறது.
உங்கள் ஆசியோடு மீண்டு வந்து விட்டேன்.
நன்றி நண்பர்களே!
welcome back bro!!!
ReplyDeleteஒருவேளை மாமூலை எதிர்பார்த்து உங்க கடைக்கு வந்து இருப்பார்கள்.எதுவும் சிக்கதாதால் உங்களை சிக்க வைத்து விட்டார்கள்.எல்லாம் நல்லதுக்கு என நினையுங்கள் .ஆண்டவன் உங்கள் அருகில்...கூடிய விரைவில் வந்து சந்திக்கிறேன் தங்களை..நன்றி
ReplyDeleteசென்ற பதிவு பற்றி உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்தும், மிக மிக கடினமான சூழலால் முடியவில்லை. நான் இன்றோ அல்லது நாளையோ உங்களை அழைக்கிறேன்.
ReplyDeleteபாஸ் நேத்துதான் உங்க கடைக்கு வந்தேன். உங்க சகா எல்லாத்தையும் சொன்னார். இன்னமும் ஒரு போன் பண்ணா எந்தப்புதுப்படமும் வீடு தேடி வருது. எந்த உலகப்படமும் டோரண்ட்டில் கிடைக்குது.. அதனால நீங்க செய்றது சரின்னு சொல்லலை. சரியான் முறைப்படுத்தல் வேணும்.
ReplyDeleteஎன்னால் முடிஞ்ச உதவி, வரப்பவெல்லாம் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு படங்கள் வாங்குவதுதான். அதை செய்துவிட்டேன். திருப்பூர் புத்தகத்திருவிழாவில் பங்குபெறுகிறீர்களா?
வேதனையாக இருக்கிறது உண்மையில் இந்த சமூகம் உண்மையாக வாழவும் விடுவதில்லை உண்மையை பேச விடுவதில்லை சரியான வழியை கட்டுவதில்லை குற்றவாளியாக இருக்க வேண்டியது இந்த குமுகம் தான் ....நீங்கள் அல்ல
ReplyDeleteநல்லவங்களை ஆண்டவன் கைவிடமாட்டான்... கவலைபடாதீர்கள்
ReplyDeleteTraffic Police 25 rupees vanguna (instread of charging 300 rupees fine) lanjam, corruption...neega adhai ulta senju pirated CD sell Panna.. adhu moser bear problem la..
ReplyDeletesuper!!! valzga unga policy
டி.வி.டி பற்றி நீங்கள் சொன்ன அனைத்தும் 100/100 உண்மை. தமிழிலேயே நல்ல படம் என்றால் டி.வி.டி வருவதற்கு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. அதுவே ஓடாத படம் என்றால் இரண்டு மாதங்களில் வந்து விடுகிறது. என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. இப்பொதெல்லாம் எந்தப் படமாக இருந்தாலும் ஒரு மாதத்திற்கு மேல் ஓடுவதில்லை. பாலிவுட் ஸ்டைலில் படம் தியேட்டரை விட்டு வந்த உடனேயே மார்கெட்டில் ஒரிஜினல் டிவிடியை விட்டுவிட்டால் உடனடி லாபம் பார்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாமே! மலேசியா, சிங்கப்பூருக்குப் போகும் டிவிடிகள் ஏன் தமிழ்கத்திற்கு வர இவ்வளவு தாமதமாகிறது? அப்படியே வந்தாலும் விலை 399க்கு கீழ் இருப்பதில்லை! இப்படி இருந்தால் ரசிகன் டாரெண்டிற்கு தான் ஓடுவான். ஒரிஜினல் டிவிடிகள் என்பது இன்னமும் உண்மையான ரசிகர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது!
ReplyDeleteவிரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மீண்டும் அதே பழைய பொழிவுடன் வந்துவிடுவீர்கள், கவலை வேண்டாம் :-)