அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
கம் செப்டம்பர் போன்று இப்படமும் ஜாலி தீபாவளி.இப்படத்தின் டிவிடி சமீபத்தில்தான் கிடைத்தது.
உடனே பார்த்தற்க்கு காரணம் அண்டனி க்வீன்.
அவரது பரம ரசிகன் நான்.
ஒமர் முக்தாரில் தொடங்கிய காதல் இன்று வரை குறையவில்லை.
திரையில் அவர் தோன்றினால் எதிரில் இருக்கும் அனைவரும் பணால்.
ஹாலிவுட்டில் ஜாலியாக படமெடுப்பதில் சூரர் ஸ்டான்லி கிராமர்.
அவர் அண்டனியோடு இணைந்து நடத்திய ஜாலி அராஜகம்தான் இப்படம்.
படம் பார்த்து முடித்த பின் இப்படைப்பாளிகளுக்கு மனசார...
நான் சொன்ன வார்த்தை...
சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
சாண்டா விட்டோரியா மக்களுக்கு ஒரே தொழில் திராட்சை பயிரிடுவது...
பயிரிட்ட திராட்சையிலிருந்து ஒயின் தயாரிப்பது.
இரண்டாம் உலகப்போரில் முசோலினி வீழ்ச்சியில் படம்துவங்குகிறது.
பாஸிஸ்டுகள் வீழ்ந்த குழப்பத்தில் குடிகாரக்கோமாளி பாம்பிலோனா[அண்டனி க்வீன்] மேயராகி விடுகிறான்.
மேயரான கெத்தில் வீட்டுக்கு போனால் மனைவியின் வரவேற்ப்பு தனியாக இருக்கிறது.
பாம்பிலோனாவை அவனது மனைவி தினமும் கடவுளாக நினைத்து அர்ச்சிப்பவள்.
நாயே...
பேயே...
உதவாக்கரையே...
தண்டச்சோறே...
குடிகார மட்டையே....
என ஸ்பெஷல் கந்தசஷ்டி மூலம் தினமும் பூஜிப்பவள்....
மேயர் ஸ்பெஷலாக பூரிக்கட்டை சாமரம் வீசுகிறாள்.[இப்படத்தை என் மனைவிக்கு காட்டப்போவதில்லை]
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற வடிவேலுவாக இக்காட்சியில் அண்டனியின் நடிப்பு சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ப்
காலையிலேயே பல் விளக்காம குடிச்சு ஏத்துன போதையை இறக்குர மாதிரி பேரிடி செய்தி வருகிறது.
ஜெர்மன் ராணுவம் இவர்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்
என்பதே பேரிடி.
மொத்த கிராமத்தின் சொத்தாக இருப்பது ஒரு மில்லியனுக்கும் மேற்ப்பட்ட ஒயின் பாட்டில்கள்.
ஜெர்மன் ராணுவத்திற்க்கு தெரியாமல் எப்படி ஒளித்து வைக்கிறார்கள்?
ஒளித்ததை கண்டெடுத்தார்களா?
என்பதே படம்.
இப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை அப்படியே சுட்டு ஷோலே திரைப்படத்தில் வைத்துள்ளார்கள்.
தண்ணியடித்து விட்டு....
உயரமான வாட்டர்டேங்கில் நின்று தள்ளாடிக்கொண்டு....
“குதித்து விடுவேன்” என்று ஊர் மக்களை அண்டனி மிரட்டியதை ஷோலேயில்
தர்மேந்திரா ஜெராக்ஸ் செய்தார்.
சீரியசான ஒரு சம்பவத்தை நகைச்சுவை கலந்து தருவதற்க்கு தனி சாமர்த்தியம் வேண்டும்.
அதில் அன்றும்..இன்றும்...என்றும்... மாஸ்டர் சாப்ளின்தான்.
அதற்க்கு அடுத்த வரிசையில் முதலிடம் ஸ்டான்லி கிராமருக்கு கொடுக்கலாம்.
படம் பார்த்து முடிந்ததும் சாண்டா விட்டோரியா ஒயின் குடிக்கணும் போல நாக்கு நமநமக்குது.
கிடைக்குமா நண்பர்களே....
விருதுகள் விபரம்:
[தகவல் உபயம் விக்கிபீடியா]
The film was nominated for two Academy Awards for Film Editing (William A. Lyon and Earle Herdan) and Best Music Score (Ernest Gold). It was nominated for an Eddie award by the American Cinema Editors, USA for best edited feature film.[1]
The film won the Golden Globe Award for Best Motion Picture Comedy and was nominated for Best Director (Stanley Kramer), Best Actor Comedy (Anthony Quinn), Best Actress Comedy (Anna Magnani), Best Original Score (Ernest Gold) and Best Original Song ("Stay", Ernest Gold and Norman Gimbel)
நம்ம ஜாதி ...(குடிமகன் ).....விமர்சனம் அருமை ...(தள்ளாடுகிறது )ரொம்ப பழைய படமோ...ஷோலே படத்தில் சுட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முந்தின படமோ ..?
ReplyDeleteபடத்தின் பெயரையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்..அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி..விமர்சனத்தை பற்றி சொல்லனுமா என்ன.... வழக்கம் போல பின்னிட்டீங்க போங்க..
ReplyDelete@கோவை நேரம்
ReplyDelete//ரொம்ப பழைய படமோ...
ஷோலே படத்தில் சுட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முந்தின படமோ //
நண்பரே!படம் வெளியான ஆண்டு 1969.
//நம்ம ஜாதி ...(குடிமகன் ).....விமர்சனம் அருமை ...(தள்ளாடுகிறது )//
நன்றி.உங்கள் பாராட்டு...ரிவெய்ரா ரெட் ஒயின் குடிச்ச எபக்ட் தருது.
@குமரன்
ReplyDelete//படத்தின் பெயரையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்..அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி..விமர்சனத்தை பற்றி சொல்லனுமா என்ன.... வழக்கம் போல பின்னிட்டீங்க போங்க..//
சமீபத்தில்தான் இப்படத்தின் டிவிடி என் கடைக்கு விற்பனைக்கு வந்தது.அதற்க்கு முன்னர் நானும் இப்படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை.
பாராட்டோடு.... ‘சாண்டா விட்டோரியா’ ஒயின் ஒரு பாட்டல் வாங்கிக்கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.
உலக சினிமா ரசிகன் said...
ReplyDeleteபாராட்டோடு.... ‘சாண்டா விட்டோரியா’ ஒயின் ஒரு பாட்டல் வாங்கிக்கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.
\
அய்யய்யோ, அப்போ நான் எதுவும் சொல்லாமயே எஸ் ஆகிடறேன் பை பர்ஸ் வீக்கா இருப்போர் சங்கம் ஹிஉ ஹி
@சி.பி.செந்தில்குமார்
ReplyDelete>>>>பாராட்டோடு.... ‘சாண்டா விட்டோரியா’ ஒயின் ஒரு பாட்டல் வாங்கிக்கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்.<<<<<
//அய்யய்யோ, அப்போ நான் எதுவும் சொல்லாமயே எஸ் ஆகிடறேன் பை பர்ஸ் வீக்கா இருப்போர் சங்கம் ஹிஉ ஹி//
பார்ரா...கிரேப் ஜூஸ்தானே கேட்டேன்.
ஏன் சிபி தலை தெறிக்க ஒடுறாரு!!!!!
உலக சினிமா ரசிகன் said...
ReplyDelete<>
இங்க டிவிடி கிடைக்கிறது கஷ்டம்தான்..டவுன்லோட் போட்டுதான் பார்க்கனும்..
கிடைக்கும் என்று நினைக்கிறேன்..நன்றி
வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு பிரன்சுக்காரர்கள் வைன்க்கு கொடுக்கும் முக்கியத்த அறிந்தவன் நான் படத்தின் சம்பவங்கள் உண்மையே!!!?
ReplyDelete@குமரன்
ReplyDelete//இங்க டிவிடி கிடைக்கிறது கஷ்டம்தான்..டவுன்லோட் போட்டுதான் பார்க்கனும்..
கிடைக்கும் என்று நினைக்கிறேன்.//
நண்பரே!இணையத்தில் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
நீங்கள் மலேசியாதானே....
அங்குதான் உலகின் தலை சிறந்த ஒயின் அனைத்தும் கிடைக்குமே.
ஒயின் சாப்பிட்டு கொண்டே இந்த படத்தை பார்த்தால் டபுள் கிக்தான்.
@காட்டான்
ReplyDelete//வணக்கம் மாப்பிள விமர்சனம் அருமை இங்கு பிரன்சுக்காரர்கள் வைன்க்கு கொடுக்கும் முக்கியத்த அறிந்தவன் நான் படத்தின் சம்பவங்கள் உண்மையே!!!?//
வணக்கம் நண்பா!
உலகிலேயே ரசனைக்காரர்கள் பிரெஞ்ச்காரர்கள்.அதனால்தான் ஒயினைக்கொண்டாடுகிறார்கள்.
மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும் ரசித்தேன்...
ReplyDeleteஉங்கள் இடுகைகளில் படங்களை குறைக்கலாமே... ஒரு இடுகைக்கு இத்தனை படங்கள் தேவையா...
ReplyDeleteஏன் தளம் திறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்... இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்... இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை...
ReplyDelete@பிலாசபி பிரபாகரன்
ReplyDelete//மனைவி பற்றிய பத்தியை ரொம்பவும் ரசித்தேன்...//
அண்டனி க்வீன் மனைவியாக அ[ந]டித்து தூள் கிளப்பியவர் Anna Magnani
இந்த ஹாலிவுட் கோவை சரளா வரும் காட்சிகள் அனைத்தும் ரகளையாக இருக்கும்.
@பிலாசபி பிரபாகரன்
ReplyDelete//உங்கள் இடுகைகளில் படங்களை குறைக்கலாமே... ஒரு இடுகைக்கு இத்தனை படங்கள் தேவையா...//
என் எழுத்துக்கு வலு சேர்க்கும் படங்கள் இணையத்தில் இருந்தால் அதை சேர்த்துக்கொள்வது வழக்கம்&பழக்கமாகி விட்டது.
இனி குறைத்துக்கொள்கிறேன்.
@பிலாசபி பிரபாகரன்
ReplyDelete//என் தளம் திறக்கவில்லை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்... இந்த விஷயத்தில் நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்... இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை...//
சரிதான்...பந்தை என் பக்கம் திருப்பி விட்டீர்களா!
ஏற்க்கெனவே சொன்னதுதான்.
என் கம்ப்யூட்டர் அறிவும் கலைஞரின் முடி அளவும் சம விகிதம்.
கூகிள் அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதை தவிற வேறு வழி இல்லை.
மாப்ள விமர்சனம் சூப்பருங்க...இங்க கெடைக்கும்னு நெனைக்கிறேன் அந்த ஒயின்....இங்க கிடைக்காத சரக்கே இல்லைய்யா ஹிஹி!
ReplyDeleteசூப்பர் பாஸ்! பார்க்க ட்ரை பண்றேன்! :-)
ReplyDeleteஉலக சினிமா ரசிகன் said..
ReplyDelete<< நீங்கள் மலேசியாதானே...
அங்குதான் உலகின் தலை சிறந்த ஒயின் அனைத்தும் கிடைக்குமே.
ஒயின் சாப்பிட்டு கொண்டே இந்த படத்தை பார்த்தால் டபுள் கிக்தான்.>>
மலேசியாதான் நண்பரே.நீங்க சொன்ன மாதிரி செஞ்சா நல்லாதான் இருக்கும்...இருந்தாலும் 18 வயசு பையன் ஓயின் மட்டுமல்ல எந்த "தண்ணி" குடிச்சாலும் வீட்டுல தொலைச்சிடுவாங்க..அந்த பழக்கமே வேண்டாம் என்று தள்ளியே நிக்கிறேன்..
நீங்க அறிமுகபடுத்திய படம் என்றால் கிக்குக்கு பஞ்சமே இல்ல....டவுன்லோடு லிங்கை தேடிக்கொண்டிருக்கிறேன்..நன்றி
<< கூகிள் அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதை தவிற வேறு வழி இல்லை.>>
ReplyDeleteநண்பரே.. எழுத்துல வல்லவர் நீங்க போங்க..
@விக்கியுலகம்
ReplyDeleteநண்பரே...
//இங்க கெடைக்கும்னு நெனைக்கிறேன் அந்த ஒயின்....இங்க கிடைக்காத சரக்கே இல்லைய்யா ஹிஹி!//
கொடுத்து வச்ச ஆளுங்க!
@குமரன்
ReplyDelete//நீங்க சொன்ன மாதிரி செஞ்சா நல்லாதான் இருக்கும்...இருந்தாலும் 18 வயசு பையன் ஓயின் மட்டுமல்ல எந்த "தண்ணி" குடிச்சாலும் வீட்டுல தொலைச்சிடுவாங்க..அந்த பழக்கமே வேண்டாம் என்று தள்ளியே நிக்கிறேன்..//
அய்யய்யோ...பச்ச புள்ள நீ...
விபரம் தெரியாம கமெண்ட் போட்டுட்டேன்.ஸாரி.
அந்த கெட்ட பழக்கத்திலிருந்து இப்போது போல் எப்போதும் தள்ளியே இரு.
@ஜீ
ReplyDeleteவாங்க ஜீ...வருகைக்கு நன்றி.
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ReplyDelete@அம்பாளடியாள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
It is a classical movie.
ReplyDelete:-)
HAPPY DEEPAVALI!
@சித்ரா
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி
தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு... எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவித்தியாசமான பட விமர்சனத்தை தொகுத்து தந்திருக்கிறீங்க.
ReplyDeleteசண்டா விக்டோரியா நானும் பார்க்க ட்ரை பண்றேன் அண்ணே.