Aug 13, 2011

Honey-[Bal-Turkish]2010 தேனெடுத்தவன் மரணத்தை நக்கினான்.


                    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 12 முதல் 21 வரை கோவை வ.வு.சி கைத்தறி கண்காட்சி மைதானத்தில் ‘புத்தகத்திருவிழா 2011’ நடைபெறுகிறது.
புத்தக விற்பனையில் சென்னை,ஈரோடு,மதுரை,திருப்பூர் முன்னணியில் இருக்கிறது.
 “இந்தமுறை கோவை விற்பனை சூப்பர்” என பதிப்பாளர்கள் மனம் குளிர செய்யுங்கள்...எனதருமை கோவை மக்களே!
அப்படியே ஸ்டால் நம்பர் 69 க்கு வாங்க...வாங்க...வாங்க...
உலக சினிமா டிவிடியோடு காத்திருக்கிறேன்.

கடந்த வாரம் கோவையில் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் ஹனி என்ற துருக்கி படம் போட்டார்கள்
.நான் எழுத நினைத்த அனைத்து உலக சினிமாக்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தில் வந்தமர்ந்து கொண்டது.

இப்படத்தை இயக்கியவர் ‘துருக்கி சத்யஜித்ரே’.Semih Kaplanoglu.

சத்யஜித்ரே ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்றாகப்பிரித்து
குழந்தை பருவத்தை பதேர் பஞ்சலி...
மாணவப்பருவத்தை அபராஜிதா...
வாலிபப்பருவத்தை அபு சன்சார்...
என மூன்று திரைக்காவியங்கள் படைத்தார்.
 இவர் இந்த டிரையாலஜியை ரிவர்ஸ் பண்ணி எடுத்திருக்கிறார்.
எக்-2007
மில்க்-2008
 என வளர்ந்த பருவத்தை முதலில் எடுத்து விட்டு குழந்தைப்பருவத்தை ஹனி என்ற பெயரில் 2010 ல் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்த மூன்று படங்கள் யூசுப் டிரையாலஜி என அழைக்கப்படுகிறது.

முதல் காட்சியே அடர்ந்த காட்டில்தான் ஆரம்பிக்கிறது.
ஒரு மிகப்பெரிய உயர்ந்த மரம்.
அதன் மீது கொக்கி இணைக்கப்பட்ட கயிரை வீசுகிறான் ஒருவன்.
வலுவான பிடிமானம் கிடைத்ததை உறுதி செய்து கொண்டு கயிற்றின் துணையோடு மரத்தின் மீது ஏறுகிறான்.

மரம் ஏறும் காட்சியின் காமிரா கோணங்கள் சொல்லி விட்டது இப்படம் உயர்ந்த ஜாதி உலகசினிமா.
சடாரென்று கிளை முறியும் சத்தம்.
அந்தரத்தில் தொங்குகிறான்.
கிளை மயிரிழையில் தொங்குகிறது.
கீழே மரணம் தொட்டு விடும் தூரம்.
அவனை அப்படியே அந்தரத்தில் விட்டு...பார்வையாளர்கள் பி.பி.யை எகிற விட்டு ஹனி என்று டைட்டில் போட ஆரம்பித்து விட்டார் இயக்குனர்.

இதன் பிறகு ஆறு வயசு யூசுப்பின் பார்வையில் நான் லீனியராக பயணிக்கிறது திரைப்படம்.
நான் லீனியர் வகைப்படங்களில் வந்த சிறந்த படங்களான பல்ப் பிக்சன்,
21 கிராம்ஸ்,அம்ரோஸ் பெரோஸ்,பேபல் வரிசையில் ஹனி படத்தை தைரியமாக சொல்லலாம்.
தமிழில் சிறந்த நான் லீனியர் படம் ஆரண்யகாண்டம்.
நான் லீனியர் வகையில் எடுக்கப்பட்ட சுமாரான படங்கள்...
ஆயுத எழுத்து,வானம்.

இப்படத்தின் மொத்த வசனங்களை போஸ்ட்கார்ட் சைஸ் பேப்பரில் மட்டுமே எழுதிய மகா கஞ்சனாக இருக்கிறார் இயக்குனர்.
ரெவின்யூ ஸ்டாம்பில் டயலாக் எழுதிய படங்களை போடப்போவதாக கோண்ங்கள் பிலிம் சொசைட்டியில் மிரட்டி வருகிறார்கள்.

யூசுப்பிற்க்கு திக்குவாய் பிரச்சனை உள்ளது.
படத்தில் அவன் யாரிடமும் பேசுவதில்லை.
பெற்ற தாயிடம் கூட!!!!!!!.

அவன் பேசுவது தந்தையிடம் மட்டுமே....
அதுவும் ரகசியமாக....கிசு கிசுப்பான குரலில்.
அப்போது மட்டும் அவன் திக்குவதே இல்லை!!!!!!!.


யூசுப் படிக்கும் பள்ளியில்சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாமலேயே சமச்சீர்கல்வி பாட புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
வகுப்பில் ஆசிரியர் ஒரு பாடத்தை சத்தமாக மாணவனை வாசிக்கச்சொல்கிறார்.
பிழையின்றி வாசிக்கும் மானவனுக்கு மெடல் அணிவித்து கவரவிக்கிறார்.
யூசுப்பை வாசிக்கச்சொல்லும் போது...அவன் திக்க்க்க்க்க்க்க்க்குகிறான்.

மற்ற மாணவர்கள் கேலியாக சிரிக்கின்றனர்.
ஆனால் யூசுப்பிற்க்கு அந்த மெடலை அடைவதே லட்சியம்.
இதை விசுவலாக எவ்வளவு அழ்காக விளக்குகிறார் இயக்குனர் கேமாராமேன் துணையோடு.

இப்படத்தின் ஒளிப்பதிவை சிறப்பாக சொல்லியே ஆக வேண்டும்.
 இயற்க்கை ஒளியிலேயே பதிவு செய்துள்ளார்.

லொக்கேசன் ஊட்டி மாதிரி பசுமைப்பிரதேசம்.
ஆனால் அந்தப்பிரதேசத்தின் அழுகுணர்ச்சியை சுத்தமாக ஒழித்து கட்டி விட்டு இருண்ட பிரதேசமாக காட்டியுள்ளார்.
அவரது காமிரா கோண்ங்கள் அந்தப்பிரதேச வாழ்வியல் நெருக்கடிகளை பிரதானப்படுத்துகின்றன.
காட்சிகளில் இந்தத்தன்மையை கொண்டு வர நிறைய மெனக்கெடுதல் வேண்டும்.
மலைப்பிரதேசங்களில் கடும் மழை பொழிவதற்க்கு முன் அந்தப்பிரதேசமே முழு இருட்டாகி நம்மை பயப்படுத்தும்.
இந்த மிக சொற்ப்ப கால இடைவெளியில் மட்டுமே இந்தக்காட்சிகளை படம் பிடித்து ...பார்வையாளனுக்கு கலக்கத்தையும்..பயத்தையும்...பதற்றத்தையும் ஏற்ப்படுத்துவதில் ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளனர்.

தயாரிப்பாளரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி காத்திருந்து படமாக்க முடியாது.
நம்மூரில் வெகு சில இயக்குனர்களுக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மட்டுமே இச்சுதந்திரம் உள்ளது.
இந்த காமிராக்கவிஞனின் பெயர் Bans Ozbicer.

படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி....
யூசுப்பிற்க்கு அம்மா தம்ளரில் பால் கொண்டு வைப்பாள்.
யூசுப்பிற்க்கு பால் எப்பவுமே பிடிக்காது.
டைனிங் டேபிளில் திருதிருன்னு முழுச்சிகிட்டு இருப்பான்.
அப்பா டக்கென்று பாலைக்குடித்து யூசுப்பின் வயிற்றில் பால் வார்ப்பார்.
மகனுக்கு ஆப்பிளை வெட்டி கொடுப்பார்.

இதே காட்சி திரும்ப வருகிறது.
அப்பா பொழப்புக்காக வெளியூர் போயிருக்கிறார்.
அம்மா டைனிங் டேபிளில் பாலை வைக்கிறார்.
யூசுப் அம்மா பார்க்காத போது டக்கென்று தலையில் ஒரு முடியை பிடிங்கி பாலில் போட்டு விடுகிறான்.
அம்மா: என்ன இன்னும் பாலை குடிக்கல?
யூசுப் பாலை காட்டுகிறான்.
அம்மா: அடடா...பால் வேஸ்டா போச்சே!
இக்காட்சி நகைச்சுவை பாப் கார்ன்.

இதே காட்சி மீண்டும் வருகிறது.
அப்பா வெளியூரில் விபத்தில் மரணமடைந்து விட்டதாக வதந்தி மட்டும் வந்து சேருகிறது.
டைனிங் டேபிளில் அம்மா உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள்.
பக்கத்தில் பால் டம்ளர்.
யூசுப் பால் டம்ளரையும் அம்மாவையும் மாறி மாறி பார்ப்பான்.
டக்கென்று பாலை மடக்... மடக்கென்று குடித்து விட்டு அம்மாவை பார்ப்பான்... ஒரு பார்வை...
அய்யோ...சாமி....
என் உடலில் உள்ள நாடி நரம்பு அனைத்தும் அழ ஆரம்பித்து விட்டது.
வசனமே இல்லாத சோக கவிதை.

இந்த யூசுப் வருங்காலத்தில் நமது இயக்குனர் விஜய் போல் வருவான் என தெரிகிறது.
வகுப்பில் ஹோம் ஒர்க் நோட்டை வாத்தியார் செக் பண்ணிக்கொண்டு வரும் போது பக்கத்து சீட் பையன் நோட்டை காண்பித்து வெரிகுட் வாங்கிவிடுகிறன்.
விஜய் ஐ யாம் சாம் படத்தை காப்பியடிச்சு....
 தெய்வத்திருமகள் எடுத்து தமிழர்களிடம் பெரும் புகழையும் பணத்தையும் பார்த்து விட்டார்!!!
இப்ப சொல்லுங்க....விஜய்யும் யூசுப்பும் ஸேம் பிளட்தானே! 

23 comments:

  1. யூசுப் படிக்கும் பள்ளியில்சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாமலேயே சமச்சீர்கல்வி பாட புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  2. நாளை கோவை வருகிறேன் நண்பா , மாலை 5 மணிக்கு உங்களை சந்திக்கிறேன். 9842713441

    ReplyDelete
  3. //யூசுப் படிக்கும் பள்ளியில்சுப்ரீம் கோர்ட் உத்தரவிடாமலேயே சமச்சீர்கல்வி பாட புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.//

    ஹா..ஹா..பதிவின் இடையே மிளிரும் நகைச்சுவை அருமை.

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணாச்சி, இன்றைய என் பதிவில் உங்களது வலைப் பதிவினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    ReplyDelete
  5. வந்துடறோம் 69 க்கு .நம்ம ஊருல போட்டு இருக்காங்க ..விட்டு விடுவோமா ..?

    ReplyDelete
  6. @சின்னப்பயல்

    வருகைக்கு நன்றி.
    சமச்சீர்கல்வி பற்றி நான் எழுதியதையே பின்னூட்டமாக போட்டுள்ளீர்கள்...அது ஏன்? என்று புரியவில்லை.

    ReplyDelete
  7. @சி.பி.செந்தில் குமார்
    //நாளை கோவை வருகிறேன் நண்பா , மாலை 5 மணிக்கு உங்களை சந்திக்கிறேன். 9842713441//

    வருக நண்பரே!
    ஈரோட்டு கலைவாணரை சந்திக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. @நிரூபன்

    //வணக்கம் அண்ணாச்சி, இன்றைய என் பதிவில் உங்களது வலைப் பதிவினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.//

    சகோ...உங்கள் பதிவில் என்னை பெருமைப்படுத்தியதற்க்கு நன்றி.
    உங்கள் இதயத்தில் எனக்கும் ஒரு இடம் கிடைக்க வழி செய்த உலக சினிமாக்களுக்கும் நன்றி.
    எங்கள் இருவரையும் பிணைத்த அன்னை தமிழுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @செங்கோவி

    //ஹா..ஹா..பதிவின் இடையே மிளிரும் நகைச்சுவை அருமை.//

    பாராட்டுக்கு நன்றி நண்பரே!
    எனது பதிவில் பகடி செய்ய நமது அரசியல்வாதிகள் இடைவிடாமல் சப்ளை செய்கிறார்கள்.அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. @கோ நேரம்

    //வந்துடறோம் 69 க்கு .நம்ம ஊருல போட்டு இருக்காங்க ..விட்டு விடுவோமா ..?//

    வாங்க நண்பரே!தங்களையும் நேரில் சந்திக்க ஆவலாயுள்ளேன்.

    ReplyDelete
  11. மீண்டும் நல்லதொரு படத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி தல..

    படம் பாத்துட்டு என் மற்ற கருத்துகளை பதிவிடுறேன் :)

    ReplyDelete
  12. அண்ணாச்சி, இப்போது தான் காலையில் எந்திருச்சேன்,
    பதிவில் தாங்கள் முன் மொழிந்தவாறு திருத்தம் செய்து விட்டேன்.

    ReplyDelete
  13. மாப்பிள அருமையான விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது கோவையில் நடக்கும் கண்காட்சியில்  உங்கள் ஸ்டால் வெற்றிபெற வாழ்த்துக்கள் ...

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  14. கலக்கல்ய்யா பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. @கனகு
    @நிருபன்
    @காட்டான்
    @விக்கியுலகம்
    நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    வேலைப்பளு அதிகமாக இருப்பதால் ஒட்டு மொத்த நன்றி.
    தவறாய் எண்ணாமல் மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. கண்டிப்பா வரேன், ரெண்டு மூணு தடவை கடைக்கு வந்தேன், என்ன நான் வரும்போதெல்லாம் மூடியே இருக்கு, கடை. கொஞ்சம் டீசண்டா சொன்னா, மூடிற நேரமாத்தான் வரமுடியுது என்னால.

    :-)
    என்ன டைம் பாஸ் க்ளோஸ் பண்ணுவிங்க?

    ReplyDelete
  17. Thanks for the movie..

    Are you guys open in Chennai in future??

    Ravi
    http://filmbulb.blogspot.com/

    ReplyDelete
  18. @முரளிகுமார் பத்மநாபன்

    //கண்டிப்பா வரேன், ரெண்டு மூணு தடவை கடைக்கு வந்தேன், என்ன நான் வரும்போதெல்லாம் மூடியே இருக்கு, கடை. கொஞ்சம் டீசண்டா சொன்னா, மூடிற நேரமாத்தான் வரமுடியுது என்னால.//

    சமீப கால அரசியல் மாற்றங்களால் வந்த... அதிகாரிகள் மாற்றம்....
    அதனால் வரும் விளைவுகள்.மேற்ப்படி சிக்கல்.

    எப்போது வந்தாலும் ஒரு போன்...
    90039 17667.ஒடோடி வருவேன்.

    //என்ன டைம் பாஸ் க்ளோஸ் பண்ணுவிங்க?//

    புத்தகக்கண்காட்சி நேரம்...
    காலை 11.00 முதல் இரவு 9.00 வரை...
    அரங்க எண் 69ல் இருப்பேன்.வாங்க..

    ReplyDelete
  19. @ரவி
    //Are you guys open in Chennai in future??//

    2012 ஜனவரியில் சென்னை புத்தக்க்கண்காட்சிக்கு வருவேன்

    ReplyDelete
  20. Good news you are coming to Chennai, very eager to meet you here. By the way I need to introduce myself to you, I am Muthukumaran brother of Muthupandian your neighbour.

    ReplyDelete
  21. வணக்கம் முத்து...நீங்க நிஷாந்த் பெரியப்பா என்பதை அறிந்த போது இரட்டிப்பு சந்தோஷம்.
    சென்னை வரும் போது கட்டாயம் சந்திப்போம்.நன்றி.

    ReplyDelete
  22. வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை பகிர்ந்துள்ளேன்.

    நேரமிருப்பின் வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.com/2011/08/7.html

    ReplyDelete
  23. @இந்திரா
    வலைச்சரத்தில் எனது வலைப்பக்கம் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.