இந்து பத்திரிக்கையில் என்னைப்பாராட்டி வந்த கட்டுரை கிட்டத்தட்ட கோவையின் ஒரு நாள் முதல்வன் ரேஞ்சுக்கு என்னைக்கொண்டு நிறுத்தி விட்டது.
கோவையில் .ஹாலிவுட்&உலகசினிமா ஆர்வலர்கள் அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்து என் கடையின் வாடிக்கையாளராக்கி விட்டது.
ஏற்க்கெனவே இருந்த வாடிக்கையாளராக இருந்தவர்கள் மத்தியிலும் என்னை சூப்பர் ஸ்டாராக்கி விட்டது.
நான் சிபாரிசு செய்யும் படங்களை கேள்வியே கேட்காமல் வாங்க ஆரம்பித்தார்கள்.
இந்த நல்ல மாற்றங்கள் ஹிந்து பத்திரிக்கை எனக்கு கொடுத்த கொடை
ஹிந்துவின் தொடர் வினையாக திடீரென்று ஒரு நாள் டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கை நிருபர் திரு. ராஃபி என்னை போனிலேயே பேட்டி கண்டு கடந்த ஜீலை 10ம்தேதி வெளியிட்டார்கள்.
இதன் தொடர் வினையாக கடந்த வாரம் ஆல் இந்தியா ரேடியாவில் கூப்பிட்டு பேட்டி எடுத்தார்கள்.
இந்த பேட்டி நாளை அதாவது ஜூலை 19 செவ்வாய்கிழமை இரவு 8.00 மனிக்கு கோவை ரெயின்போ பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகிறது.
பேட்டி முடிந்ததும் என்னிடம் மிகவும் அன்பாக பேசிய ஆல் இந்தியா ரேடியோவின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் “இந்நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு உலகசினிமா பற்றி நீங்கள் பேசுங்கள்.இதே நேரத்தில் ஒலிபரப்புவோம்”என அன்புக்கட்டளை இட்டார்.
உலகசினிமா பற்றி வாராவாரம் கச்சேரி செய்யும் பாகவதராகிவிட்டேன்.
உலக சினிமா எனக்கு சோறு போடுகிறது .
தலையை சுற்றி ஓளி வட்டம் போட்டு விட்டது.
கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் என்னைக்கொண்டு நிறுத்தி இருக்கிறது.
இப்புகழின் கனம் என் தலையில் ஏறி தள்ளாடமல் இருக்க எந்நாளும் நான் வணங்கும் தாய் மூகாம்பிகை என்னை காப்பாற்றட்டும்.
வாழ்த்துக்கள் பாஸ்... சென்னை பண்பலையில் கேட்க வாய்ப்பில்லையா...
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்பிள நான் வந்து குழ போட்டுட்டன்..? பின்னர் வருகிறேன் விமர்சனத்துடன்..
ReplyDelete@பிலாசபி பிரபாகரன்
ReplyDeleteவருக...பிரபா...
//சென்னை பண்பலையில் கேட்க வாய்ப்பில்லையா...//
இப்போதைக்கு கோவையில் மட்டுமே ஒலிபரப்பாகும்.
சென்னையின் ஜனத்தொகையை குறைக்க வேண்டுமானால் என் பேட்டியை ஒலிபரப்பலாம்.
@காட்டான்
ReplyDelete//வாழ்த்துக்கள் மாப்பிள நான் வந்து குழ போட்டுட்டன்..? //
நன்றி மச்சி...உன்னுடைய இலங்கைத்தமிழ் ரசிக்கும்படி இருக்கிறது.
‘குழ போட்டுட்டன்’ என்ற வார்த்தையை என் வாழ்நாளில் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.
இதற்க்காக ஸ்பெஷல் நன்றி.
வாழ்த்துக்கள் முதல்வரே ..ஹிந்து வினால் வந்தவை நேர் வினைகள் தானே ?அப்புறம் என்ன...கலக்குங்கள் ...
ReplyDelete@கோவை நேரம்
ReplyDeleteஇது வரை நடந்தவை நல்லவையாக இருக்கிறது.இனி நடப்பவையும் நல்லவையாக இருக்கட்டும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
வாழ்த்துக்கள்...மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteசார்..............கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்..
ReplyDeleteதனக்கு பிடிச்சத - ரசனைக்குரிய விசயங்கள பிறரிடம் பெரிய தளங்களில் பகிர்ந்துக்க கெடைச்சிருக்கும் இந்த வாய்ப்புகளே - மற்ற விசயங்களை காட்டிலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கும்னு நெனைக்கிறேன்...நெஜமா ரொம்ப சந்தோஷம்......
( உங்கள சந்திக்க இனி ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கே.......)
ரொம்ப சந்தோசம் சார்..கலக்குங்க.
ReplyDeleteஅப்புடிப்போடு போடு போடு . . அசத்திப்போடு தன்னால. .
ReplyDeleteஇப்புடிப்போடு போடு போடு... அமுக்கிப்போடு முன்னால. . :-)
அடி பின்னுங்க :-)
வாழ்த்துக்கள் கலக்குங்க ...
ReplyDeleteவாழ்த்துக்கள் உ.சி.ர. (கு.ப.ரா மாதிரி.)
ReplyDeleteபாஸ்.. கலக்குங்கோ..:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகள்!!
ReplyDeleteஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்கள்
ReplyDeleteஅதுதான் நான் அந்த வார்தையை பிரபலபடுத்த முறற்சிக்கிறேன் காட்டான் குழ போட்டான்னா அர்தம் உங்கள் ஆக்கங்களை வாசித்து விட்டேன் என்று
ரஜனிக்கு மட்டுமா டயலாக் இருக்க வேண்டும் காட்டானுக்கும் இருந்தா உங்களுக்கு பிடிக்காதா காட்டான் கட்டாயம் வருவான் உங்கள் பதிவுகளை பார்க அன்னேரம் நீங்கள் வீட்டில் இல்லை என்றாலும் இருத்தாலும் எனக்கு தெரியாது..ஆகையால்..
இப்பவும் சொல்கிறேன் காட்டான் உங்களுக்கு குழ போட்டான்
அடடே.. வாழ்த்துக்கள்.. ஒரு படைப்பாளீக்கு திருப்தியே சக படைப்பாளிக்கு கிடைக்கும் அங்கீகாரமும் பாராட்டும் தான்.. போதாதற்கு நீங்க நம்ம கொங்கு மண்டலம் வேற.. சந்தோஷம் சார்,..
ReplyDeleteவாழ்த்துக்கள் :-)
ReplyDelete@விக்கியுலகம்
ReplyDelete@கொழந்த
@செங்கோவி
@கருந்தேள்
@ஆனந்த்
@ஜெகதீஷ்குமார்
@முரளிக்குமார் பத்மநாபன்
@கவி அழகன்
@சிவக்குமார்
@காட்டான்
@சி.பி.செந்தில்குமார்
@திணேஷ் ராமகிருஷ்ணன்
அலைகடலென திரண்டு வந்து வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி.
மேலும் பல நல்ல உலக சினிமாக்களை அறிமுகப்படுத்துவதே சிறந்த நன்றிக்கடன்.
//ஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்கள்
ReplyDeleteஅதுதான் நான் அந்த வார்தையை பிரபலபடுத்த முறற்சிக்கிறேன் காட்டான் குழ போட்டான்னா அர்தம் உங்கள் ஆக்கங்களை வாசித்து விட்டேன் என்று //
நண்பா...அருமை..அருமை..
ஈழத்தமிழ் மட்டுமல்ல... உங்கள் பழக்க வழக்கமும் அழகு...
இனி நானும் நண்பர்கள் வலைப்பக்கத்தில் குழ போடுகிறேன்.
சும்மா கலக்குறீங்க போங்க.....
ReplyDeleteகருந்தேள் உங்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்,கொளந்தை கூட உங்களிடம் உங்களை நேரில் சந்தித்து படங்கள் வாங்கி உள்ளதாக கேள்வி பட்டுள்ளேன்,தொடர்ந்து என் பதிவுகளுக்கு கமெண்ட் போட்டு வரும் உங்களுக்கு நான் போடும் முதல் கம்மெட் இது,
ReplyDeleteவாழ்த்துக்கள்,நண்பரே ஆல் இந்தியா ரேடியோவை ஆன்லைன்னில் கேட்க முடிந்தால் லிங்க் அனுப்புங்கள்
வணக்கம் அண்ணாச்சி, முதலில் என் வாழ்த்துக்களை எட்டிப் பிடித்து, உள்ளமெனும் சிறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஉங்களது உலக சினிமா பற்றிய தேடல் முயற்சிகள், கடின உழைப்பு, சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளர்களோடு நீங்கள் காட்டும் கனிவான பேச்சு இவை தான் உங்களின் வெற்றிக்கு மூல காரணிகள் என நினைக்கிறேன்.
தொடர்ந்தும் பல படிக்கற்களைத் தாண்டி வெற்றி நடை போட வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்
ReplyDelete@லக்கி லிமட்
ReplyDelete@டெனிம்
@நிரூபன்
@சித்தாட்ரீம்ஸ்
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!!!
@நிரூபன்
ReplyDelete//வணக்கம் அண்ணாச்சி, முதலில் என் வாழ்த்துக்களை எட்டிப் பிடித்து, உள்ளமெனும் சிறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களது உலக சினிமா பற்றிய தேடல் முயற்சிகள், கடின உழைப்பு, சந்தைப்படுத்தலில் வாடிக்கையாளர்களோடு நீங்கள் காட்டும் கனிவான பேச்சு இவை தான் உங்களின் வெற்றிக்கு மூல காரணிகள் என நினைக்கிறேன்.
தொடர்ந்தும் பல படிக்கற்களைத் தாண்டி வெற்றி நடை போட வாழ்த்துகிறேன்.//
அண்ணாச்சி என்று என் நெல்லைத்தமிழில் அழைத்த ஈழத்தமிழே!!
உன் பாராட்டு... என் கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது.
வள்ளுவன் வாயால் வாழ்த்து பெற்ற சந்தோஷம்.
@டெனிம்
ReplyDeleteநண்பரே!
தங்கள் வரவு என்னை குதூகலப்படுத்தி விட்டது.இந்த சந்தோசத்தை தொடர்ந்து எனக்குத்தரும்படி சுயநலத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
//நண்பரே ஆல் இந்தியா ரேடியோவை ஆன்லைன்னில் கேட்க முடிந்தால் லிங்க் அனுப்புங்கள்//
இணைய தொழில் நுட்ப அறிவு எனக்கு பூஜ்யம் நண்பரே!
ந்ண்பரின் உதவி பெற்று தங்கள் ஆவலை பூர்த்தி செய்கிறேன்.
வணக்கம் பாஸ்
ReplyDeleteஉண்மையில் சந்தோசம் தரும் தகவல்.
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாஸ்
Baskaran Ji...Kalakkunga...You have more places...Vaazthukkal...
ReplyDeleteDiraviyam,Pune
Hearty wishes...
ReplyDelete