Jul 25, 2013

மரியான் - திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம்.


நண்பர்களே...
மரியான் படத்தில் இடம் பெற்ற கோளாறுகளை விவரித்து,
‘தொடர்’ பதிவுகள் எழுத முடியும்.
தமிழ்ப்படங்களை திட்டி எழுதக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.
இருந்தும் சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு,
நான் நேசிக்கும் இயக்குனர் சொதப்பும் படங்களில்,
‘இயக்குனரை’ சாடி எழுதுவேன்.
உ.ம்:  அவன் - இவன் இயக்கியது எவன்?.

நான்  நேற்று ‘மரியான்’ ஓடும் திரையரங்கு பக்கம் போனேன்.
1000 பேர் அமரும் தியேட்டரில், மொத்தம் 20 பேர் மட்டும் காத்திருந்தனர்.
எத்தனை பேருடைய உழைப்பு, பணம் காலாவதியாகி போய் விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்த படம்.
தயாரிப்பு பட்ஜெட் 25 கோடி என கேள்விப்பட்டேன்.
ஏற்கெனவே படம் இயக்குனர் வைத்த நெருப்பில்  ‘எரிந்து’ கொண்டிருக்கிறது.
நானும் என் பங்குக்கு பெட்ரோல் ஊற்ற விரும்பவில்லை.


‘மரியான்’ பார்க்கும் போதுதான்,
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை முழுமையாக முதன்முதலாக கேட்டேன்.
மிக அற்புதமாக இசையமைக்கப்பட்ட ‘என்ன செய்ய ராசா’ பாடல்,
அப்படியே என்னுள் ஒட்டிக்கொண்டது.
இது வரை அந்தப்பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.
இனியும் கேட்பேன்.
நான் இந்தப்பாடலுக்கு என்னுள், ‘காட்சியமைத்து’ கொண்டு இருக்கிறேன்.
இந்த பயிற்சியை இது வரை ‘இளையராஜா’ பாடலுக்கு மட்டுமே செய்து இருக்கிறேன்.
முதன் முதலாக அந்த இடத்தை ரஹ்மான் பிடித்துக்கொண்டார்.
என்னால் இறக்கி வைக்க முடியாமல் அந்த அவலச்சுவையை அனுபவித்து வருகிறேன்.


இப்பாடலில் பிரிவின் துன்பமும் இருக்கிறது.
பிரிந்தவர் கூடி...காதலில் கிறங்கும் இன்பமும் இருக்கிறது.
மிகச்சவாலுடன் இப்பாடலை அமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.
மிகச்சாதாரணமாக இப்பாடலை கெடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பதேர் பஞ்சலி, பை சைக்கிள் தீப் போன்ற காவியங்களை திரைப்படக்கல்லுரியில் பாடமாக வைத்திருப்பர்.
மரியானையும் பாடமாக வைக்க வேண்டும்.
எப்படி படமெடுக்கக்கூடாது என்பதை இப்படத்திலிருந்து மாணவர்களுக்கு பாடமெடுக்கலாம்.

உதாரணத்திற்கு  ஒரு காட்சியை விளக்குகிறேன்.
பாலைவனத்தில் ‘மரியான்’ தப்பித்து ஓடி களைத்து அமர்ந்திருப்பான்.
அப்போது ‘சிறுத்தைகள்’ சுற்றி வளைக்கும்.
இக்காட்சி ரசிகனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
நிஜமாகவே சிறுத்தைகள் வந்ததா?
மரியானின் கற்பனையில் வந்ததா?

குழப்பம் வந்ததற்கு காரணம் இயக்குனர்,
‘சிசோபர்ணியா சிச்சுவேஷன்’ [ Schizophrenia ] காட்சியை வடிவமைத்த விதம்தான்.
இக்காட்சியில் இரண்டு விதமான ‘ஷாட்’ கம்போசிஷேன்
இயக்குனர் பயன்படுத்தி இருக்கலாம்.

# 1. ‘மரியான் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட்கள் அமைத்து சிறுத்தைகள் உலவும் காட்சியும், உறுமல் சத்தமும் வைத்திருக்கலாம்.

#2. ‘ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் அமைத்து
‘மரியான் சிறுத்தைக்கு பயந்து நடுங்குவதாக்’
காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சிறுத்தை பிரேமில் இருக்கக்கூடாது.
சிறுத்தையின் உறுமல் சத்தமும் இருக்கக்கூடாது.
இப்படி ஒரு ஷாட் ‘பவர்புல்லாக’ வைத்தாலே ஆடியன்ஸ் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
‘மரியானுக்கு மறை கழண்டு விட்டது’

ஆடியன்சுக்கு தெளிவு படுத்த தேவையில்லை என முடிவெடுத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் ஷாட் வைக்கலாம்.
சிசோபர்ணியா சிச்சுவேஷனுக்கு லாஜிக் கிடையாது.

மரியானில் ‘சிசோபர்ணியா’ சிச்சுவேசன்’ காட்சிகளும்,
அதை தொடர்ந்து வருகின்ற ‘ஹீரோயிச காட்சிகளும்’...
நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி அலைக்கழிக்கின்றன.

 ‘சிசோபர்ணியா’ என்ற மனநோயை அடிப்படையாக வைத்து அற்புதமாக வந்த இரு படங்கள்.

 [ 1 ] A Beautiful Mind \ 2001 \ English \ Directed by : Ron Howard.



[ 2 ] Shutter Island \ 2010 \ English \ Directed by : Martin Scorsese. 


படத்தில் மற்றொரு குழப்பம்.
கதை நடைபெறும் காலம்.
இது தெளிவாக்கப்படாமல் ரசிகனை அலைக்கழித்து சாவடிக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் 1960 - 1970 காலத்துக்கு அழைத்து செல்கிறது.
ரசிகனை, வில்லனின்  ‘லேட்டஸ்ட் மாடல் புல்லட் பைக்’ ...
‘2010’க்கு இழுத்து வருகிறது.
அதுவும்...வெஸ்டர்ன் படங்களில் குதிரையில் கட்டி தரையில் ‘தரதரன்னு’ இழுத்து  வருவது போல் வருகிறது.


செல்போன்  ‘மருந்துக்கும் இல்லை.
‘மியுசியத்தில் வைக்கப்பட்டு விட்ட கருப்பு டயல் போன்’ மட்டுமே இடம் பெறுகிறது.
ஆனால் இறுதிகாட்சியில்  ‘அம்மா ஆட்சி பச்சை மினி பஸ்ஸில்’
வந்து இறங்குகிறான் மரியான்.
 ‘மினி பஸ்’ கிராமத்திற்குள் வருவதற்கு முன்பே,
செல்போன் கிராமத்துக்குள் வந்தது...வரலாற்று உண்மை.

 ‘எம் மீனவர்கள்’ சுடப்பட்டு இறக்கும் வரலாற்று அவலத்தை கையாண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றம்...  இயக்குனரே.
இப்படத்திற்கு வசனம் எழுதியது மீனவ வாழ்க்கையை இலக்கியமாக்கிய  ‘ஆழி சூழ் உலகு’ ‘ஜே.டி.குரூஸ்!
யூ டூ புரூட்டஸ்!!

சர்க்கரையின் தாய் : “ அய்யோ...எந்தப்பாவி சுட்டான்னு தெரியலயே”

என்ன  ‘மயித்துக்கு’... இந்தக்காட்சிக்கு வசனம்?
கடலை நோக்கி மண்ணை அள்ளி தூற்றினாலே போதுமே...
 ‘ ஒரு தாய்... ‘சிங்களப்பேயை’...‘அறம் பாடுகிறாள்’, 
என எளிதாக புரிந்து கொண்டு...
என் ‘தமிழன் பொங்கியெழுந்து இந்த ஒரு காட்சிக்காவது கை தட்டி இருப்பானே!

சூடான் போராளிகளை காட்சிப்படுத்திய விதத்துக்கு ‘சுண்ணாம்பு காளவாயில வச்சு சுட்டாலும்’ தகும்.

பதிவை முடிச்சுக்குறேன்.
இனி எழுதுனா ‘தங்க வசனம்’ சரமாரியா வந்துரும்.


சூடான் போராளிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

30 comments:

  1. // எப்படி படமெடுக்கக்கூடாது.. // அதானே பார்த்தேன்...!

    ReplyDelete
  2. நண்பரே...நான் மட்டுமே திரைப்படக்கல்லூரி பேராசிரியராக இருந்தால் இப்படத்தை போட்டுக்காட்டி வகுப்பெடுப்பேன்.
    என்னைப்போன்ற ஆசாமிகள் இல்லாததால் ‘திரைப்படக்கல்லுரி மாணவர்கள்’ தப்பி பிழைத்து வருகிறார்கள்.

    ReplyDelete
  3. நானும் இந்த படத்தை பார்த்து நொந்துட்டேன்..ஒரு ஈர்ப்பு என்பதே இல்லை.எனக்கு பிடித்த காட்சி ஆரம்பத்தில் போட்ட டிஸ்கிளைமர் தான்..

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் பாத்து சிலிர்த்தோம்.
      மரியான் பாத்து மரித்தோம்.

      ‘ரைமிங்கா’ வருதா!...எப்பூடி!!

      Delete
  4. ரசிகனை படத்தோடு ஒன்ற வைக்கும் காட்சிகள் ஒன்றுமே இல்லை.குழம்பிப்போனது தான் மிச்சம்.2 நிமிசம் விளம்பர படம் எடுக்கும் ஆட்களிடம் எப்படி 2.30 மணி நேர விறுவிறுப்பை எதிர்பார்க்க முடியும்?
    சார்...நீங்களாவது மாத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. கவுதம் மேனன், ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா விளம்பர பட உலகத்திலிருந்து வந்து திரையுலகில் சாதித்து வழி காட்டி இருக்கிறார்கள் ஜீவா.

      Delete
  5. சார் உங்கள் பலம் தெரியாமல் உங்களுடன் பழகிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.சினிமாவில் நீங்கள் எங்கோ சென்றுவிடீர்கள்.இப்போதுதான் தான் புரிகிறது நான் கடல் மணலை முழுவதையும் அல்ல நினைக்கும் குழந்தை போல முற்பட்டு நிற்கிறேன்.கடலை அடையாளம் காட்டிய உங்களுக்கு என் கோட்டான கோடி நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. நோ...பீலிங்ஸ்...உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா!

      Delete
  6. பதிவுக்கு டைட்டில் எப்டி வைக்கிறதுனு உங்ககிட்டருந்து தான் கத்துக்கனும்.
    படிக்கனும்ங்கற ஆவலை தூண்டுது உங்க டைட்டில்.

    படத்தோட குறைகளை சரியா எடுத்து சொல்லிருக்கீங்க.. குறிப்பா பாடல் காட்சிகள எடுத்த விதம்..!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க உணர்ந்ததை நான் எழுத்து வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறேன்.
      அவ்வளவுதான்.

      பதிவுக்கு தலைப்பு...அது தானா வருது.
      இதுல என் வழிகாட்டி தினத்தந்திதான்.
      சின்ன வயசுல இருந்தே தினத்தந்திதான்.

      Delete
  7. தலையங்கத்தை பார்த்ததுமே புரிந்துவிட்டது. :) சூப்பர் தலையங்கம். நன்றி.

    ReplyDelete
  8. இன்னும் கழுவி ஊத்துங்க சார். கையில ரிமோட் மட்டும் இருந்திருந்தா ஓட்டி ஓட்டி அரைமணி நேரத்துல பார்த்திருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி...
      கழுவி ஊத்தறதுல எனது நண்பர் ஹாலிவுட் பாலாதான் எக்ஸ்பர்ட்.
      நான் அந்த சப்ஜக்ட்ல ‘ஜஸ்ட் பாஸ்தான்’.

      Delete
  9. //எனது நண்பர் ஹாலிவுட் பாலா//

    கேட்கறதுக்கு சந்தோசமா இருக்கு சார்..இதைத் தான் எதிர்பார்த்தோம். கற்றோரைக் காற்றோரே காமுறுவர்!

    ReplyDelete
    Replies
    1. எனது நண்பர்கள் ‘ஹாலிவுட் பாலா’ ‘கீதப்ரியன்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் நண்பரே.

      அதே போல் கருந்தேள்,கொழந்தை ஆகியோரது அறிவையும்,எழுத்தாற்றலையும் நான் என்றுமே ரசித்து வருகிறேன்.
      கருத்தாக்கதில்தான் மோதல் ஏற்பட்டு பிரிவின் அகலம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.
      இனி அதையும் தவிற்க முயற்சிக்கிறேன்.
      என்ன இருந்தாலும் நான் வயதில் மூத்தவன்.
      விட்டுக்கொடுத்து போவதில் தப்பில்லை என உணர்கிறேன்.

      உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் எழுதிய பிறகு மனசு லேசானதை உணர்கிறேன்.
      நன்றி நண்பரே.

      Delete
    2. இதை கேக்கறப்போ உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. பழையபடி எல்லோரும் ஒன்னு சேந்துட்டீங்கன்னா எங்கள மாதிரி கத்துகுட்டிங்களுக்கு இன்னும் நிறைய அனுபவம் உங்க மூலமா கிடைக்கும்..!!
      (கருத்து மோதல்கள் ஆரோக்கியமான விஷயம் தான்.. அது என்னிக்குமே இருக்கனும்.. ஆனா அதே தனிமனித தாக்குதலா மாறுனா தான் தப்பு.. சாரி சார்.. சின்னப்பய கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்)
      -பதிவுலக ஜாம்பவான்கள்லாம் ஒன்று சேர எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுவன்

      Delete
  10. எப்படி படம் எடுக்க கூடாது என்பதற்கான வரிசையில் சேர்ந்து விட்ட மரியானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! வெறென்னத்தை சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. எந்த நேரத்தில் மரியான்னு பெயர் வச்சாங்களோ தெரியல...ஆளாளுக்கு அடி பின்னி எடுக்குறோம்.
      பாவம் மரியான்.

      Delete
  11. உலக ரசிகரே.......
    எத்தனையோ அவலக்கொடிகளைவிட
    எவ்வளவோ இது பரவாயில்லை....இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக...நீங்கள் குறிப்பிடும் படத்தை விட இது பல மடங்கு மேல்தான்.

      Delete
  12. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றி விட்ட படமோ? ஆமாம் ஏன் தனுசுக்கு இந்த மன நிலை பிறழ்வாக இருக்கும் கேரக்டர்கள் மேல் ஆர்வம் தொடர்ச்சியாக அப்படியான கதைக்களங்களையே தேர்ந்தெடுக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. எதிர் பார்த்தலில்தான் ஏமாற்றம் அடங்கி இருக்கிறது மேடம்.

      தனுஷ் ‘சுள்ளான்’ பாதையை விட இது நல்ல பாதைதான்.
      தனுசை பிள்ளையாராக்குவதும் குரங்காக்குவதும் இயக்குனர் கையில்தான் இருக்கிறது.
      அதே போல் தனுசும் இயக்குனர் ‘பிள்ளையாராக்க’ பிடிக்கும் போது ‘குரங்காவேன்’ என அடம் பிடிக்க கூடாது.
      மரியானில் ‘தனுசும்’ சேட்டை செய்ததாக கேள்விப்படுகிறேன்.
      தனுசு ‘பொல்லாதவனாக’ நடிப்பதை ரசிக்கலாம்.
      பொல்லாதவனாக இருப்பதை நிச்சயம் கண்டிக்க வேண்டும்.

      Delete
  13. உங்கள் மேலான அக்கறையின் அடிப்படையில் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
    எனக்கு ஒரு நல்ல நண்பர் இருந்தார் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவர் ஒரு தீவிர விமர்சகர். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ் சினிமாவை கிழித்து தொங்கப்போட்டு வந்தார். அவருக்கு ஒரு சினிமா கனவு இருந்தது... அதுவே உண்மையான சினிமா என்றும் நம்பினார்... தயவு தாட்சண்யம் ஏதுமில்லாமல் விமர்சிப்பது அவரது பாங்கு... சில வருடங்களுக்கு முன் அவர் கிழித்த விமர்சங்களின் தாள்களை கிழித்துப் போட்டார்.. அப்போது அவர் உணர்ச்சி பொங்க எழுதியவற்றை படிக்கும் போது 'ஏன் இப்படி எழுதி இருக்கிறோம்? இதன் விமர்சனப் பாங்கு இன்று தன் உக்கிரத்தை இழந்துவிட்டதே..?.. ஏன்.?. என்று வினவி.. பதில் கண்டார்'.. அன்று கிழித்துப் போட்டார்... அதன் பின் தான் நம்பும் சினிமாவை பற்றி மட்டுமே எழுதினார் ...அதன் பின் நடைமுறையில் உழன்று , சினிமா எடுக்க முயன்று.. அந்த கட்டுரைகளையும் நிறுத்திவிட்டார்...

    //மரியானையும் பாடமாக வைக்க வேண்டும்.
    எப்படி படமெடுக்கக்கூடாது என்பதை இப்படத்திலிருந்து மாணவர்களுக்கு பாடமெடுக்கலாம்.//

    இந்த வரிகளை படிக்கும் போது அந்த நண்பரின் நினைவுகள் ஏனோ வந்தன ...சில வருடங்கள் கழித்து படிக்கையில்.. இந்த வரிகள் அதிகபட்சமான விமர்சனமாக உங்களுக்கு தோன்ற வாய்ப்புண்டு... அப்படி தோன்றவில்லை என்றால்.. நீங்கள் சினிமா அல்லாது வேறு ஏதோ துறையில் செட்டில் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்..

    என் மனதிற்கு பட்டதை கூறுகிறேன் .. அப்புறம் உங்கள் இஷ்டம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...பாராட்ட வேண்டிய தமிழ் படம்... என எனக்கு பட்ட படத்திற்கு மட்டுமே இனி விமர்சனம் எழுதுவேன்.
      இதை உறுதி மொழியாகவே சொல்கிறேன்.

      மரியான் விமர்சனம் நான் எல்லை மீறி விட்டதை உணர்கிறேன்.
      அனைவரும் மன்னிக்கவும்.

      Delete
  14. கொடுத்துள்ள இணைப்பு வேலை செய்யவில்லையே?

    தோற்றவர்களை (திரைப்படங்களில்) அதற்கு பிறகு அவர்கள் வாழும் வாழ்க்கை சந்திக்கும் சவால் போன்றவற்றை நீங்க உங்க அனுபவம் பார்த்த அனுபவம் போன்றவற்றைக் கொண்டு எழுதினால் பலருக்கும் பலன் உள்ளதாக இருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. சூடான் போராளிகள் பற்றிய பதிவுக்கு இணைப்பு வேலை செய்கிறதே!

      அனுபவங்களை எழுத்தில் கொண்டு வர யாருமே சம்மதிக்க மாட்டார்கள்.
      எழுதினால் சம்பந்தப்பட்டவர்கள் முகத்திலேயே முழிக்க முடியாது.
      மேலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தோற்றதாக கருத முடியாது.

      Delete
  15. தலைவலிக்குதுன்னு படத்துக்கு போனேன்...ரெட்டைத்தலைவலி.
    சிறுத்தையை காட்டிய விதம்.பல பதிவர்கள் அதை உண்மை என்று எழுதியிருப்பார்கள்.
    சின்ன சின்ன குறைகள் ஒன்று சேர்ந்து மொத்த படைப்பயும் வீணடித்துவிட்டன..

    ReplyDelete
    Replies
    1. ///சின்ன சின்ன குறைகள் ஒன்று சேர்ந்து மொத்த படைப்பயும் வீணடித்துவிட்டன..///

      இதுதான் மரியானுக்கு ஆகச்சிறந்த விமர்சனம்.
      குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் ‘தமிழ் சினிமாவின் எவரெஸ்ட்’ என கொண்டாடப்பட்டிருக்கும்.

      Delete
  16. நமக்கும் அதே! படம் பார்த்ததும் எழுதிய புலம்பல்.....நாழி இருந்தால் படியுங்கள்...

    முதல் பார்வை முதல் வார்த்தை: மரியான்

    தமிழ் சினிமாவின் இன்னொரு மையில் கல் மரியான்! தனுஷ், பார்வதி, ஒளிப்பதிவு, இசை, ஸ்பெஷல் எபக்ட்ஸ் என ஐந்தும் சொதப்பி இருக்க, கதை திரைக்கதை வசனம் கலை ஒப்பனை இத்தியாதி இத்தியாதி என மற்ற அனைத்தும் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு கடற்கரை கிராமத்தையும் அதன் உணர்வுகளையும் உண்மைகளையும் மிக சரியாக காட்டி, அண்மையில் கடல் சார்ந்து வந்த படங்களில் இருந்து தன்னை வேறு படுத்தியிருக்கிறார் இயக்குனர். என்ன ஒரு தேடல். என்ன ஒரு அற்புதமான படைப்பு. பார்க்க வேண்டிய படம்!

    முடிலீங்க ...சத்தியமா முடிலீங்க...இதுக்குமேல பொய்சொல்ல!

    சரி உண்மைக்கு வருவோம்!

    பாண்டியன் கடலில சுறாவ கொன்ற மரியான் செங்கடலில சூடான் காரன கொல்லுறார்! பனிமலர் தனுஷ் காதல் காட்சிகள், சில வசனங்கள், அதன் காட்சிப்படுத்தல் ரொம்ப அழகு. பாலைவனத்தின் முடிவு வருகிறது என்பதையும் கடல் இருக்கிறது என்பதையும் மெல்லியதாக கேட்கத்தொடங்கும் அலையோசைமூலம் உணர்த்துகிறார்கள். இரண்டு பெரிய பிரச்சனைகளை லேசாக தடவிச்செல்கிறது படம்:ஒன்று மீனவர்கள் சுடப்படுவது, இரண்டு - வெளிநாட்டு கம்பனிகள் வளங்களை கொள்ளை அடிப்பது. சவக்காலையில் இரண்டு கல்லறைகள் புதிதாக அமைக்கப்பட்டிருப்பது, அன்றைய சாவின் எண்ணிக்கையோடு ஒத்துப்போகிறது.

    ஒரு வேளை எடிட்டர் ஒருவரையும் படக்குழுவில் இணைத்திருந்தால் நல்லயிருந்திருக்குமோ என்னவோ. இரண்டு மணி நேரமும் சில நிமிடங்களும்தான் படம் என நினைக்கிறேன்..இருந்தாலும் முடிங்கடா என அழுது தொலைக்கவேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டோமோ தெரியவில்லை. ஆமாம் எந்தக்காலத்தில் கதை நடக்கிறது? (No mobile phones?)

    ஒரு வீட்டில் கத்திப் பேசினாலே பக்கத்துவீட்டுக்காரர் எல்லாம் வந்திருவாங்க. ஊருக்க போயி கற்பழிப்பு முயற்சி...நம்புறமாரி இல்லை. தனுஷின் அம்மாவும் பனிமலரும் சண்டையிடுவதும், ஆளைக்காணோம் என திண்ணையில் சிலர் கூடியிருப்பதும் நாடகமாகவே இருக்கிறது. அந்த ஊரை காட்டவே இல்லை! அவர்கள் வாழ்க்கை ஏதோ துண்டு சீரியல்கள் மாதிரி சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. உறவினர்களே இல்லாத மக்கள் வசிக்கும் ஊர்போலும்.

    நீர்ப்பறவை சுனைனா போடும் பாவாடை சட்டைதான் அந்தப்பகுதி தமிழர்கள் பொதுவாக போடுவது. மரியான் பனிமலர் போடுவது மலையாளப்பக்கமோ என சந்தேகம் வருகிறது. பனிமலர் பல்லும் கூந்தலும் போதும் நிஜங்களை இயக்குனர் தேடியிருக்கிறாரா எனச் சொல்ல. ரெண்டு வருஷம் இருந்து கொஞ்சம் அவங்க பாசையும் படிச்சாச்சு ன்னு தனுஷ் சொன்ன மாரி இருந்திச்சு. ஆனா மனுஷன் அவுக பாச புரியாம தமிழும் இங்கிலீசும்தான் பேசுறாரு. ஒருவேள கடத்தினவங்க பேசுறது வேற பாசையோ?

    ஆப்ரிக்காவை கண்டவுடன் அந்த ஊர் பாட்டு போடுகிறார் இசையமைப்பாளர். ஆனா,முதலாம்பாட்டு சோனாபரியா....அந்த நெய்தல் நிலத்துக்கான மெட்டு போல தெரியவில்லை. பின்னணியில் பின்னிஎடுத்திருக்கிறார் மனிதர். பாடல்களும் அருமை. ஆனால் சில இடங்களில் பாடல் தேவைதானா என்று கடுப்பாகிறது.

    ஆக அந்த ஐந்து பேர் - இசை அமைப்பாளர், ஹீரோ, ஹீரோயின், ஒளிப்பதிவாளர், சிறப்பு சத்தங்கள் கொடுத்தவர் - புகுந்து விளையாடி இருக்கிறார்கள். இவர்களோடு காதலும் ஒய்யாரமாக பயணிக்கிறது.

    இடையில் பாத்திரங்கள் காணாம போகுதா? திரைக்கதையில் ஓட்டை இருக்கா? தனுஷ் எந்தக்காலில் துண்டு கட்டி இருக்கிறார்? எத்தனை நாள் உண்ணாமல் குடிக்காமல் இருக்கிறார்? கடத்தியவர்கள் பேரம் பேசுகிறார்களா இல்லையா? காணாமப்போனா ஊர்ல என்ன செய்வாங்க? நீங்களே பார்த்து விடை கண்டுபிடிங்க!

    ஆக குறைஞ்சது, மூன்று வேளையும் முநூற்று அறுபத்திரண்டு நாளும் நான்-வெஜ் சப்பிடுரவரா இருந்தாத்தான் அந்தப்பக்கம் படமெடுக்க போறதப்பத்தி யோசிக்கலாம் போல. "இலங்கைத்தமிழ்" என யாரிடமோ அரைகுறையாக கேட்டு சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்போல, நெய்தல் நிலமும் இயக்குனர்களின் தவறான புரிதல்களுடன் திரையேறும் அவலம் இந்தப்படத்திலும் நடந்திருக்கிறது.

    காதலில் மட்டும் மூழ்கினால் மெய் மறக்கவைக்கும் படம். இல்லாட்டி படம் சொல்லவார மெசேஜ் என்னான்னா.....மிக நல்ல இன்கிரீடியன்ஸ் ஒண்ணா சேருறதால மட்டும் ஒரு நல்ல றால் கொழம்பு வந்திராது. அதுக்கு "குக்கு குக்கு" ன்னும் ஒருத்தர் வேணும்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்தில் ஒரு பதிவே எழுதி விட்டீர்கள்.நன்றி.

      முத்தாய்ப்பாக எழுதியது ‘மிகச்சிறந்த வரிகள்’.
      அதை மிக ரசித்தேன்.

      /// மிக நல்ல இன்கிரீடியன்ஸ் ஒண்ணா சேருறதால மட்டும் ஒரு நல்ல றால் கொழம்பு வந்திராது. அதுக்கு "குக்கு குக்கு" ன்னும் ஒருத்தர் வேணும்.///

      Delete

Note: Only a member of this blog may post a comment.