Jun 7, 2013

நான் வேண்டி விரும்பி, வந்த ஒரு மரணம்.


நண்பர்களே...
திங்கள் கிழமை முதல் பதிவெழுதவில்லை.
காரணம் எனது மைத்துனர் மரணம் [ எனது மனைவியின் அண்ணன் ].

2011 ஜனவரி 1 அன்று, டாக்டர்கள் அறிவித்தனர்.
“இரண்டு கிட்னியும் 80%  பழுதாகி விட்டது.
இன்னும் ஆறு மாதத்திலிருந்து...
இரண்டு வருடத்திற்குள்....
‘முழுவதும்’ பழுதாகி ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியது வரும்”

எனது மைத்துனருக்கு ஆறு மாதத்திலேயே ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டி வந்து விட்டது.
காரணம், சரியான மருத்துவம், உணவு, ஓய்வு...
மூன்றையும்  கடைப்பிடிக்கவில்லை.
இயல்பாகவே ஆங்கில மருத்துவம் மேல் வெறுப்பு உள்ளவர்.
அலோபதியை அலட்சியப்படுத்தி விட்டு,
சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், ஹோமியோபதி,நேச்சுரோபதி என ஒன்று விடாமல் அனைத்திற்கும் தாவிக்கொண்டிருந்தார்.
விளைவு 2013 ஜூன் 3ம் தேதி மரணத்தை தழுவி விட்டார்.


2011ல்  ‘நடிகர் ஜெயப்பிரகாஷ்’ போல் தேஜஸாக இருந்தவர்,
கடந்த ஏப்ரல் மாதம் கடைசியாக பார்த்த போது...
கீழ்க்கண்ட சோமாலியா பிரஜை போல் தோற்றமளித்தார்.
நான் அப்போது கடவுளிடம் வேண்டினேன்.
“ கடவுளே...இவரை உன்னிடம் சீக்கிரம் அழைத்துக்கொள்...
அடுத்தமுறை இவரை உயிருடன் பார்க்கும் கஷ்டத்தை கொடுக்காதே”


இவரது மரணத்தில் ஒரு செய்தி இருக்கிறது.
 ‘அலோபதியை’ அலட்சியப்படுத்தி,
ஊரில் இருக்கும் அனைத்து ‘பதிகளையும்’ நாடி...
48 வயதுக்குள்  ‘பரமபதி’ அடைந்து விட்டார்.
‘சிக்ககெனப்பற்றினேன் உன்னை’ என அலோபதியை பற்றியிருந்தால் டயாலிசிஸ் செய்தபடி இன்னும் பத்து வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும்.

கிட்னி பெய்லியருக்கு' எந்த மருத்துவ முறை சாலச்சிறந்தது ?
நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

20 comments:

  1. // சிக்ககெனப்பற்றினேன் உன்னை //

    எந்த மருத்துவமும் என்றாலும் எதோ ஒன்றை உறுதியாக நம்ப வேண்டும்... அடிக்கடி மாற்றினாலும் ஆபத்து தான்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. \\\ எந்த மருத்துவமும் என்றாலும் எதோ ஒன்றை உறுதியாக நம்ப வேண்டும்... \\\

      மிகச்சரியாக சொன்னீர்கள்.
      என் நண்பன் ஒருவன் விபத்தில் ‘மெமரி லாஸாகி’ போனான்.
      குல தெய்வம் கோவிலில் இரண்டு வருடம் படுத்துக்கிடந்து ஓரளவிற்கு சரி பண்ணி விட்டான்.
      தனது மனைவி மக்களையே அடையாளம் காண முடியாமல் இருந்தவன் இன்று பரவாயில்லை.
      என்னிடம் அவன் தனது நோயை வென்றெடுத்தை சிரிக்க சிரிக்கச்சொன்னான்.
      அவன் எந்த மருத்துவத்தையும் நம்பவில்லை.
      கடவுளை மட்டும் நம்பினான்.

      Delete
  2. உங்கள் மைத்துனர் மரணத்திற்கு அனுதாபங்கள். அவசர சிகிச்சைக்கு ஆலோபதிதான்.. வேறு வழியில்லை.

    ReplyDelete
    Replies
    1. நோய் முற்றி விட்டால், அலோபதி முறைதான் சிறந்தது.

      Delete
  3. எனக்கு தெரிந்து இருவர் இதே போல இறந்துவிட்டனர் ஒருவர் 2011 ஆண்டே இறந்துவிட்டார் என் சிறு வயது முதல் என்னுடன் வளர்ந்த என் நண்பன் சேட் அவனிற்கு மருத்துவ வசதி செய்யும் அளவிற்கு பண வசதி இல்லை கணவனையும் இழந்து மகனையும் இழந்து அந்த தாய் தனியே வாழ்வதை பார்க்கும் பொழுது கடவுள் இருகிறார என சந்தேகம் வருகிறது

    இன்னொருவரின் மரணம் நேற்று தான் நிகழ்ந்தது 10 லட்சம் வரை செலவு செய்தும் பயன் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ரஜினிக்கு கூட கிட்னி பிராப்ளம்தான்.
      சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து சரி செய்து கொண்டார்.

      Delete
  4. எனது இரங்கல். டயாலிஸ் கூட கொடுமையானது தான்.

    ReplyDelete
    Replies
    1. டயாலிசிஸ் செய்யும் போதும்...செய்து முடித்த பிறகு 3 மணி நேரம் மிகுந்த வலியைத்தருவதாக எனது மைத்துனர் சொல்வார்.

      Delete
  5. டயாலிஸிஸ் முறைதான் ஒருவரை உயிர் வாழ வைக்கும்.. சில சேவை நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் இதை செய்வதாகக் கேள்வி.. 60 வயது வரை உள்ளவர்களுக்கு டயாலிஸிஸ் சிற்ந்தது.. வயதானால் அந்த முறையை தாங்க முடியாமல் போகலாம்.. மாற்று உறுப்புதானம் மூலம் செய்தால் சில ஆண்டுகள் பிரச்சனையில்லை... அயல் நாட்டில் பல ஆண்டுகளாக டயாலிஸிஸ்ல் இருப்பதாக படிக்கக் கேட்டிருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. எனது நண்பர் ஒருவர் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்கிறார்.
      ஒரு நாளைக்கு 8 மணிக்கு ஒரு தடவை என மூன்று முறை செய்து கொள்கிறார்.
      கடந்த ஐந்தாண்டுகளாக செய்து வருகிறார்.
      மன ரீதியாக மிகவும் ஸ்டாராங்காக இருக்கிறார்.
      எனவே கடந்த ஐந்தாண்டுகளாக அவரது தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
      ‘தினமும் மூன்று உலக சினிமா பார்ப்பேன்’ என்பார்.
      அவர் ஒரு அதிசயம்.

      Delete
    2. நான் முன்னே வேலை செய்துகொண்டிருந்த கம்பனியின் சி இ ஓ கடந்த ஐந்து வருடங்களாக இரவில் வீட்டிலும், பகலில் அலுவலகத்திலும் டயாலிசிஸ் செய்துகொண்டு வருகிறார். நெருங்கிய சிலருக்கு மட்டுமே தெரியும். வாரம் ஆறு நாளும் ஆபிசில் பிசியாக இருப்பவர். சொல்ல மறந்து விட்டேனே.. அவர் வயது இப்போது 75!

      Delete
  6. கிட்னிசை நலமாக பார்த்துக்கொள்ளவும் நீண்டகாலம் ஒழுங்கான விதத்தில் செயற்படவும் சித்தம், ஹோமியோ, யூனானி, ஆயுள்வேதம் போன்றவை சொல்லும் இயற்கை உணவுகளை கைக்கொள்ள முடியும்
    ஆனால்
    கிட்னி கெட்டு விட்டால் அலோபதியை தவிர வேறு தெரிவு இல்லை. டயலசிஷ், ட்ரான்ஸ்பிளான்ட் என அது சில மாற்று உபாயங்களை கண்டறிந்து வைத்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு மிகச்சரியே.

      Delete
  7. வருந்துகிறேன்... சிறு நீரகக் கோளாறு ஆரம்பித்தவுடன் அதற்கு வேலை அதிகம் கொடுக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்...உணவு முறைகள் முதலானவை... நோயின் வீரியம் குறைவாக இருக்கும்போது எந்த முறையையும் பின்பற்றலாம்.ஆனால் வீரியம் அதிகரித்த பின் அலோபதிதான் சீக்கிர நிவாரணம் தரும்.. மேலும் டயாலஸிஸும் வலியானதுதான்... இன்னுமொரு செய்தி குழந்தையாக இருக்கும் போது தாய் நல்ல உணவு உண்ணவில்லையென்றாலும் சிறு நீரக பாதிப்பு வர வாய்ப்பு உண்டாம் .. சென்ற வாரத்தில் டி.வி . நிகழ்வொன்றில் டாக்டர் பகிர்ந்தது...

    ReplyDelete
  8. எனது இரங்கல்கள்..

    ReplyDelete
  9. அவசரத்திற்கு அலோபதி, நிதானத்திற்கு ஹோமியொபதி

    ReplyDelete
    Replies
    1. சரியான ஆலோசனையை பஞ்ச் டயலாக் போல் சொல்லி உள்ளீர்கள்.
      நன்றி.

      Delete
  10. உடல் ஒரு நூதன இயந்திரம் ஏதேனும் ஒரு இடத்தில் பிரச்சினை ஏற்படும் போது நூல் பிடித்தபடி சிக்கலை ஏற்படுத்துகிறது அல்லது விடு விக்க முடியாத சிக்கலை ஏற்படுத்துகிறது. சிறு வயதில் இருந்து ஒருவர் எந்த வைத்திய முறையை அனுசரிக்கிறாரோ அந்த முறைக்கேற்ப அவரது உடல் அடாப்ட் ஆகிறது. ஆனால் சிக்கலான பிரச்சினைக்கு உடனடி ஆங்கில மருத்துவமே சரி.

    ReplyDelete
    Replies
    1. எனது அக்கா ஒருவருக்கு உடம்பு முழுவதும் கொப்புளம் கொப்புளமாக வந்தது.
      அலோபதியில் இந்த நோய் நூறு கோடியில் ஒருவருக்கு இந்த நோய் வருகிறது.
      இதற்கு சிகிச்சையே கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.
      ‘வலி நிவாரணி மாத்திரமே மருந்தாக தரமுடியும்.
      ஓராண்டிற்குள் மரணம் நிச்சயம்’ என்று அலோபதி மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
      அவர்கள் அந்த மருந்தை உட் கொண்டு ‘பிரம்ம ராஜ குமாரிகள் சபையை’ சரணடைந்தார்கள்.
      குணமானார்கள்.
      அதன் பின் இரண்டாண்டுகல் கழித்து புற்று நோய் வந்தது.
      சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள்,
      முடியெல்லாம் கொட்டிப்போய் விட்டது.
      பிரம்ம குமாரிகள் சபையை விடவில்லை.
      குணமாகி விட்டார்கள்.
      இன்று மிக ஆரோக்கியமாக உள்ளார்கள்.
      பிரம்ம குமரிகள் சபையில் மிக முக்கியமாக பங்கெடுத்து வருகிறார்கள்.
      அந்த வழி முறையில் மிகத்தீவிரமாக உள்ளார்கள்.
      நான் கூட கிண்டல் செய்வேன்...
      “அக்கா...உங்கள் தலைக்கு பின்னால் கிராபிக்ஸ் செய்யாமலே ஒளி வட்டம் தெரிகிறது”
      சிரிப்பார்கள்.
      தனது வழி முறையை யாரிடமும் பிரச்சாரம் செய்து வலியுறுத்த மாட்டார்கள்.
      எனது அக்கா ஒரு அதிசயம்.

      Delete

Note: Only a member of this blog may post a comment.