Oct 11, 2011

The Red Balloon-1956[France] 34 நிமிட வசனமில்லா கவிதை

ரெட் பலூன் குழந்தைகளுக்கான படம்.
நம்மை குழந்தைப்பருவத்திற்க்கு ஒரு உல்லாசப்பயணமாக அழைத்து செல்கிறது.
ஒன்றிரண்டு வார்த்தைகளைத்தவிர சுத்தமாக வசனமேயில்லாமல் இக்கவிதையை படைத்த பிதாமகன் Albert Lamorisse.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தனது மகனையும்,மகளையும் நடிக்க வைத்து.... குடும்பத்தோடு நாம் பார்க்கும்படி ஒரு குதூகல அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு பலூன் பொக்கே பரிசாக வழங்க வேண்டும்.
அதுதான் ஆகச்சிறந்த பரிசு என்பதை படத்தை பார்த்த பிறகு நீங்கள் உணர்வீர்கள்.

குழந்தை முகத்தின் நேரே கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிக்கிறது.
நம் முகத்தின் நேரே யாராவது கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிப்போமா?
ஆட்டியவன் கையை முறித்து விட்டு வேண்டுமானால் சிரிப்போம்.
கிலுகிலுப்பையை போல ரெட் பலூன் திரைப்படமும் நம்மிடம் இருக்கும் குழந்தைதன்மையை அளக்கும் மீட்டராகச்செயல்படுகிறது.

பள்ளிக்கு செல்லும் சிறுவன்... மின் விளக்கு கம்பத்தில் சிக்கித்தவிக்கும் பெரிய சிவப்பு பலூனை மீட்டெடுக்கிறான்.


பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர்.
பலூனைப்பிடித்தபடி ஒடியே பள்ளிக்கு செல்கிறான்.

பள்ளிப்பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு வகுப்பு முடிந்ததும் பெற்றுக்கொண்டு வீட்டிற்க்கு வருகிறான்.

அம்மா பலூனை தூற எறிந்து விட்டு பையனை மட்டும் வீட்டிற்க்குள் அழைத்து செல்கிறாள்.
பலூன் நைசாக வந்து சிறுவன் அறை ஜன்னலை தட்டுகிறது.


இந்தக்காட்சியிலிருந்து சிறுவனுக்கும் பலூனுக்குமான பாண்டசி உலகம் தொடங்குகிறது.
நம் மனதை கொள்ளையடிக்கும் காட்சிகள் வரிசையாக வந்து திணற வைக்கிறது.
ஹாரி பாட்டர் படமெல்லாம் இப்படத்தின் கால் தூசுக்கு பெறாது.




ரெட் பலூன் திரைப்படம் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் நர்சரி பள்ளிகளில் கட்டாய படமாக காட்டப்பட்டு வருகிறது.
இப்படம் குழந்தைகளுக்காக....குழந்தைகளால்....குழந்தை மனம் படைத்த இயக்குனரால் படைக்கப்பட்ட திருக்குறள்.
ரெட்பலூன் பெற்ற விருதுகள்....

Wins
Other wins
  • Best Film of the Decade Educational Film Award.[19]
நன்றி விக்கிப்பீடீயா.

26 comments:

  1. மாப்ள உங்க விமர்சனம் படங்களுடன் சூப்பர்...அப்படியே பதிவிறக்கம் செய்யும் லிங்க் கொடுத்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நன்றி!

    ReplyDelete
  2. பாடல் நல்லா இருக்குங்க சகோ!

    ReplyDelete
  3. @விக்கியுலகம்
    நண்பரே!
    எனக்கு இணய அறிவு கலைஞரின் முடி அளவை விடக்குறைவு.
    நண்பர்கள் தங்கள் பின்னூட்டத்தில் லிங்க் முகவரி கொடுத்து உதவுங்கள்.

    ReplyDelete
  4. welcome back :). எங்கடா ரொம்ப நாளா தலைவர் வரவே இல்லையேன்னு நினைச்சேன். Back with a bang ! நீங்க அனுப்புன DVD, 'அங்க' போயி சேர்ந்திருச்சு. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சொல்லச்சொன்னாரு. சொல்லிட்டேன். :-)

    ReplyDelete
  5. அசத்தலான விமர்சனம்.... படம் லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் பாஸ்,
    எம்மையெல்லாம் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான பட விமர்சனம் தந்திருக்கிறீங்க.

    நானும் இந்தப் படத்தினைப் பார்க்க ட்ரை பண்றேன்.

    ReplyDelete
  7. தலைவா..படத்தயே இப்பதான் கேள்விப்படரேன்...சூப்பரா எழுதி இருக்கீங்க...ரொம்ப நன்றி....

    ReplyDelete
  8. ஆம் நண்பரே யாராவது லிங்க் கொடுங்கள்

    படங்களுடன் அருமை

    ReplyDelete
  9. @கருந்தேள்
    நண்பரே!
    கோவை புத்தகக்கண்காட்சியில் தொடங்கி மதுரை,வேலூர்,திருச்சி,சேலம் வரை தொடர் ஒட்டம்தான்.
    அப்பாடா....கோவை வந்தாச்சு..
    வாரம் இரண்டு பதிவு போட எண்ணியுள்ளேன்.

    உங்கள் நண்பரின் அன்பு கலந்த நன்றியை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. @மதுரன்
    நண்பரே!வருகைக்கு நன்றி.
    லிங்க் கொடுக்க நண்பர்கள்தான் உதவ வேண்டும்.

    ReplyDelete
  11. @நிரூபன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா!
    அவசியம் பார்த்து விடுங்கள்.
    எண்பது வயது பருவத்தினரையும்....
    எட்டு வயதாக்கும் காயகல்பம்.... இப்படம்.

    ReplyDelete
  12. @குமரன்

    //தலைவா..படத்தயே இப்பதான் கேள்விப்படரேன்...சூப்பரா எழுதி இருக்கீங்க..//

    எனதருமை தொண்டரே!
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. @வைரை சதீஷ்
    நண்பரே!
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    வைரை... என்பது தங்கள் ஊர் பெயரா?

    ReplyDelete
  14. நேற்று தான் ஸ்டான்லி கா டப்பா மற்றும் சில்லர் பார்ட்டி இரண்டு படங்களும் பார்த்தேன் ,இங்கே மற்றும்
    ஒரு குழந்தைகள் படம் ,அருமையான விமர்சனம் ,பார்க்க முயற்சிக்கிறேன் தலைவரே

    ReplyDelete
  15. @டெனிம்
    நண்பரே!வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  16. Dear WCF (bhaskaran)
    nice review. will try to find, watch and enjoy thanks for the info on such a wonderful movie.

    today i saw 2 wonderful movies on AUTISM (event organized by ability foundation)

    1. Temple Grandin 2. After Thomas. both movies are True stories Succesful portrayal and understanding the finer aspects on autism (temple grandin -- done by Claire Danes --- with leonardo di caprio in Romeo & Juliet )
    she took the character to a new height that kind of maturity i did not expect from her. i actually underestimated her but she proved her mettle. (antha chinna ponna ithu endru asanthu poivittaen may be the portryal,performance of the character, true life history, well executed by the director made me to mail you at 2 am
    After Thomas is a love bondage between autistic boy's family and a Golden Retriever.

    i would like you to watch the following (if time permits), enjoy, understand and deliver it to all of your readers

    1. Temple Grandin http://www.imdb.com/title/tt1278469/
    2. After Thomas http://www.imdb.com/title/tt0825222/

    if you have DVD available pl watch. thanks
    anbudan
    sundar g chennai (rasani.blog)

    ReplyDelete
  17. @அங்குசாமி
    வரம் பெற்று வந்திருக்கிறான் உங்கள் வாரிசு.
    மிகச்சிறந்த கலை படைப்புகளை சேமித்து வைத்திருக்கும் உங்களுக்கு என் மனம் மகிழ்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. @www.rasanai.blogspot.com
    சுந்தர்ஜி...
    வருகைக்கும்...பரிந்துரைக்கும் மிக்க நன்றி.
    இப்படங்களின் டிவிடி கை வசம் இல்லை.
    தேடிப்பிடித்து பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  19. >>விக்கியுலகம் said...

    மாப்ள உங்க விமர்சனம் படங்களுடன் சூப்பர்...அப்படியே பதிவிறக்கம் செய்யும் லிங்க் கொடுத்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நன்றி!


    தம்பி .. இது ஓவர்

    ReplyDelete
  20. @சி.பி.செந்தில்குமார்
    நண்பர் சிபியின் வருகைக்கும் பாராட்டுக்கும் அக மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  21. அப்போ என் குழந்தைக்கு படம் காட்டிட வேண்டியது தான் ..

    ReplyDelete
  22. @கோவை நேரம்
    //அப்போ என் குழந்தைக்கு படம் காட்டிட
    வேண்டியது தான் ..//
    உங்கள் குழந்தைக்கு இதை விட சிறந்த பரிசு இருக்க முடியாது.

    ReplyDelete
  23. அண்ணே, புதுப் பதிவு எப்போ வரும்?

    ReplyDelete
  24. @நிரூபன்
    வாங்க நிரூ...இன்னும் சில மணிகளில் தயார்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.